கிழக்கு ஆபிரிக்கா
கிழக்கு ஆபிரிக்கா என்பது ஆபிரிக்கக் கண்டத்தின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளை கொண்ட பெருப் பிரதேசமாகும். ஐநாவின் துணைப் பிரதேசங்களின் வகையீட்டின் படி, 19 நாடுகள் இப்பிரதேசத்தில் அடங்குகிறது.
- கென்யா, தன்சானியா, மற்றும் உகாண்டா – மேலும் கிழக்கு ஆபிரிக்க சமுதாயத்தின் உறுப்பு நாடுகள்
- ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா, மற்றும் சோமாலியா – பொதுவாக ஆபிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும்
- மொசாம்பிக் மற்றும் மடகஸ்கார் – சிலவேளைகளில் தெற்கு ஆப்பிரிக்காவில் சேர்க்கப்படுகிறது.
- மலாவி, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே – சிலவேளைகளில் தெற்கு ஆப்பிரிக்காவில் சேர்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய ஆபிரிக்க கூட்டாட்சி
- புருண்டி மற்றும் ருவாண்டா – சிலவேலைகளில் மத்திய ஆபிரிக்காவில் சேர்க்கப்படுகிறது
- கொமரோஸ், மொரிசியஸ், மற்றும் சிஷெல்ஸ் – இந்து சமுத்திரத்திலுள்ள சிறிய தீவு நாடுகள்.
- ரீயூனியன் மற்றும் மயோட் – பிரெஞ்சு குடியேற்ற நாடுகள்
புவியியல் அமைவின் அடிப்படையில், சில சந்தர்ப்பங்களில் எகிப்து மற்றும் சூடான் இப்பிரதேசத்தில் சேர்ககப்படுகிறது.
புவியியல்
[தொகு]கிழக்கு ஆபிரிக்க பிரதேசங்கள் அவற்றின் விலக்கு பல்லின தன்மைக்கு பிரசித்தமானவை. முக்கியமாக யானைகள், நீர் யானைகள், சிங்கங்கள், ரைனோசரஸ்கள் சிறுத்தைகள் என்ற ஐந்து பெரிய விலங்களுக்கு பிரசித்தமானவை.
புவியியல் அமைப்பானது மிக கவர்ச்சியானதாகும். இங்கு ஆபிரிக்காவின் உயரமான மலைகள் இரண்டான கிளிமஞ்சாரோ மலை மற்றும் கென்யா மலை என்பன காணப்படுகிறது.
இப்பிரதேசத்தில் புவியியல் அமைப்பானது விவசாயத்துக்கு மிகவும் உகந்த்தாகும். இது 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை பெற்று அந்நாடுகள் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. இன்று கென்யா, உகாண்டா, தன்சானியா போன்ற நாடுகளில் உல்லாச பிரயாணத்துறை முக்கிய வருவாயை கொடுக்கிறது.
அரசியல்
[தொகு]இப்பிரதேசமானது, அண்மைக் காலம் வரை பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. ஆட்சி கைப்பற்றல்கள், இராணுவ ஆட்சி போன்ற பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. காலனித்துவ ஆட்சிக்குப்பின் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட சில நிகழவுகள்:
- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்
- ஒர்கடன் போர்
- இரண்டாவது சூடானிய உள்நாட்டுப் போர்
- சோமாலிய உள்நாட்டுப் போர்
- புருண்டி உள்நாட்டுப் போர்
- 1998 அமெரிக்க தூதுவரக குண்டு வெடிப்புகள் -நைரோபி மற்றும் தாருசலாம்
- எரித்திரிய-எத்தியோப்பியப் போர்
கென்யா மற்றும் தன்சானியா பொதுவில் சீரான அரசுகளை கொண்டிருந்த்து.
உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|