ஆர்சனிக் மூவயோடைடு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக் மூவயோடைடு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவயோடோ ஆர்சேன் | |
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(III) அயோடைடு
ஆர்சனசு அயோடைடு | |
இனங்காட்டிகள் | |
7784-45-4 | |
ChemSpider | 22979 |
EC number | 232-068-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24575 |
வே.ந.வி.ப எண் | CG1950000 |
| |
பண்புகள் | |
AsI3 | |
வாய்ப்பாட்டு எடை | 455.635 கி/மோல் |
தோற்றம் | ஆரஞ்சு-சிவப்பு நிறப் படிகத் திண்மம் |
அடர்த்தி | 4.69 கி/செ.மீ3 |
உருகுநிலை | 146 °C (295 °F; 419 K) |
கொதிநிலை | 403 °C (757 °F; 676 K) |
6 கி/100 மி.லி | |
கரைதிறன் | ஆல்ககால், ஈதர், CS2 ஆகியனவற்றில் கரையும். |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.23 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24, இடக்குழு = R-3, No. 148 |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
[1910.1018] TWA 0.010 மி.கி/மீ3[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
Ca C 0.002 மி.கி/மீ3 [15-நிமிடங்கள்][1] |
உடனடி அபாயம்
|
Ca [5 மி.கி/மீ3 (As தனிமமாக)][1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்சனிக் மூவயோடைடு (Arsenic triiodide ) என்பது AsI3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் எளிமையாக பதங்கமாகிறது பட்டைக்கூம்பு மூலக்கூறான இச்சேர்மம் கரிம ஆர்சனிக் சேர்மங்கள் தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]ஆர்சனிக் முக்குளோரைடு மற்றும் பொட்டாசியம் அயோடைடு வினைபுரிவதால் ஆர்சனிக் மூவயோடைடு உருவாகிறது:[2]
- AsCl3 + 3KI → AsI3 + 3 KCl.
வினைகள்
[தொகு]ஆர்சனிக் மூவயோடைடு தண்ணீரில் மெல்ல நீராற்பகுப்பு அடைந்து ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைத் தருகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் சமநிலை கொண்டுள்ள ஆர்சனசமிலம் உருவாதல் வழியாக இவ்வினை நிகழ்கிறது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசல் உயர் அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது. (0.1N கரைசலின் pH =1.1) 200° செல்சியசு வெப்பநிலையில் இது, ஆர்சனிக் மூவாக்சைடு, தனிமநிலை ஆர்சனிக் மற்றும் அயோடினாகச் சிதைவடைகிறது. இருப்பினும் இச்சிதைவு வினையானது 100° செல்சியசு வெப்பநிலையில் அயோடின் வாயுவை வெளியேற்றும் செயலுடன் தொடங்கிவிடுகிறது.
பண்டைய பயன்கள்
[தொகு]லையாம் தோனெலியின் கரைசல் என்ற பெயரில் முற்காலத்தில் இச்சேர்மம் வாத நோய், மூட்டழற்சி, மலேரியா, உறக்கநோய் நச்சுயிரி தொற்றுகள், காசநோய் மற்றும் நீரிழிவு நோய்[3] ஆகியனவற்றிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0038". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ John C. Bailar, Jr. "Arsenic Triiodide" Inorganic Syntheses 1939, volume 1, pp. 103–104, 2007. எஆசு:10.1002/9780470132326.ch36
- ↑ Shakhashiri BZ, "Chemical of the Week: Arsenic" பரணிடப்பட்டது 2008-08-02 at the வந்தவழி இயந்திரம், University of Wisconsin–Madison Chemistry Dept.