உள்ளடக்கத்துக்குச் செல்

மாலிப்டினம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிப்டினம்(III) அயோடைடு
Molybdenum(III) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s

மாலிப்டினம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
14055-75-5 Y
InChI
  • InChI=1S/3HI.Mo/h3*1H;/q;;;+3/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6432099
  • [Mo+3].[I-].[I-].[I-]
பண்புகள்
MoI3
வாய்ப்பாட்டு எடை 476.65 கி/மோல்
தோற்றம் கருப்பு திண்மம்[1]
உருகுநிலை 927 °C (1,701 °F; 1,200 K) (சிதைவடைகிறது)
கரைவதில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

மாலிப்டினம்(III) அயோடைடு (Molybdenum(III) iodide) என்பது MoI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

மாலிப்டினம் அறுகார்பனைலுடன் அயோடின் வாயு 105°செல்சியசு வெப்பநிலையில் வினை புரிந்து மாலிப்டினம்(III) அயோடைடு உண்டாகிறது.[2]

2 Mo(CO)6 + 3 I2 → 2 MoI3 + 12 CO

மாலிப்டினம்(V) குளோரைடுடன் கார்பன் டைசல்பைடில் கரைக்கப்பட்ட ஐதரசன் அயோடைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் மாலிப்டினம்(III) அயோடைடு உருவாகும்.

MoCl5 + 5 HI → MoI3 + 5 HCl + I2

300 °செல்சியசு வெப்பநிலையில் (572 °பாரங்கீட்டு) மாலிப்டினம் உலோகமும் அதிகப்படியான அயோடினும் நேரடியாக வினை புரிந்தாலும் மாலிப்டினம்(III) அயோடைடு உருவாகும்.

2 Mo + 3 I2 → 2 MoI3

மாலிப்டினம்(III) அயோடைடு மாலிப்டினத்தின் மிக உயர்ந்த நிலைப்புத்தன்மை கொண்ட அயோடைடு என்பதால் இதுவே விரும்பத்தக்க தயாரிப்புப் பாதையாகும்.

பண்புகள்

[தொகு]

மாலிப்டினம்(III) அயோடைடு அறை வெப்பநிலையில் காற்றில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும் ஒரு கருப்பு எதிர்காந்த திண்மமாகும். வெற்றிடத்தில், இது 100 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மாலிப்டினம்(II) அயோடைடு மற்றும் அயோடினாக சிதைகிறது. இது முனைவு மற்றும் முனைவற்ற கரைப்பான்களில் கரையாது.[2] இதன் படிக அமைப்பு சிர்க்கோனியம்(III) அயோடைடுடன் சமகட்டமைப்பு கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1019–1021. ISBN 0080379419.
  2. 2.0 2.1 hrsg. von Georg Brauer. Unter Mitarb. von M. Baudler (1981). Handbuch der präparativen anorganischen Chemie / 3 (3rd ed.). Stuttgart: Enke. p. 1539. ISBN 3-432-87823-0. OCLC 310719495.
  3. Riedel, Erwin; Christoph, Janiak; Meyer, Hans-Jürgen (2012). Riedel moderne anorganische Chemie. Riedel, Erwin, 1930-, Janiak, Christoph., Meyer, Hans-Jürgen. (4. Aufl ed.). Berlin: De Gruyter. p. 357. ISBN 978-3-11-024900-2. OCLC 781540844.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்(III)_அயோடைடு&oldid=3968338" இலிருந்து மீள்விக்கப்பட்டது