செலீனியம் சேர்மங்கள்

செலீனியம் சேர்மங்கள் (Selenium compounds) என்பவை செலீனியம் தனிமத்தைக் கொண்டிருக்கும் அனைத்துச் சேர்மங்களையும் குறிக்கும். இந்த சேர்மங்களில், செலீனியம் பல்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. இவற்றில் மிகவும் பொதுவானவை −2, +4 மற்றும் +6என்ற ஆக்சிசனேற்ற நிலை சேர்மங்களாகும். செலீனியம் சேர்மங்கள் இயற்கையில் பல்வேறு கனிமங்களின் வடிவத்தில் உள்ளன. கிளாசுதாலைட்டு, குவானாயூவாடைட்டு, டைமானைட்டு, குரூக்கிசைட்டு போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். மேலும் பைரைட்டு மற்றும் சால்கோபைரைட்டு போன்ற சல்பைடு தாதுக்களுடன் இணைந்தும் இவை காணப்படுகின்றன.[1] பல பாலூட்டிகளுக்கு, செலீனியம் சேர்மங்கள் அவசியமானவையாகும். உதாரணமாக, செலீனோமெத்தியோனின் மற்றும் செலீனோசிசுட்டின் ஆகியவை மனித உடலில் இருக்கும் செலீனியம் கொண்ட அமினோ அமிலங்களாகும். செலீனோமெத்தியோனின் செலீனோபுரோட்டீன்களின் தொகுப்பில் பங்கேற்கிறது.[2] செலீனோசிசுட்டீனின் குறைப்பு மின்னழுத்தமும் (5.47) என்ற காடித்தன்மை மதிப்பும் சிசுட்டீனை விட குறைவாக உள்ளன. இதனால் சில புரதங்கள் ஆக்சிசனேற்ற செயல்பாட்டைக் கொண்டுள்ளன.[3] செலீனியம் சேர்மங்கள் குறைக்கடத்திகள், கண்ணாடி மற்றும் பீங்கான் தொழிற்சாலைகள், மருத்துவம், உலோகம் மற்றும் பிற துறைகளில் முக்கியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.[4]
சால்கோசன் சேர்மங்கள்
[தொகு]
செலீனியம் இரண்டு ஆக்சைடுகளை உருவாக்குகிறது: செலீனியம் டை ஆக்சைடு (SeO2), செலீனியம் மூவாக்சைடு (SeO3) என்பன இவ்விரண்டு ஆக்சைடுகளாகும். செலீனியம் டையாக்சைடு ஆக்சிசனுடன் தனிம செலீனியத்தின் வினையால் உருவாகிறது.[5]
- Se8 + 8O2 -> 8SeO2
இது ஒரு பலபடிசார் திடப்பொருளாகும். வாயு கட்டத்தில் SeO2 ஒரும மூலக்கூறுகளை உருவாக்குகிறது. தண்ணீரில் கரைந்து செலீனசு அமிலத்தை (H2SeO3) உருவாக்குகிறது. நைட்ரிக் அமிலத்துடன் தனிம செலீனியத்தைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமும் செலீனசு அமிலத்தை நேரடியாக உருவாக்கலாம்:[6]
- 3 Se + 4 HNO3 + H2O -> 3 H2SeO3 + 4 NO
நிலையான மூவாக்சைடை உருவாக்கும் கந்தகத்தைப் போலன்றி, செலீனியம் டிரையாக்சைடு வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலைப்புத்தன்மை அற்றதாகும். 185 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் டை ஆக்சைடாக இது சிதைகிறது[5][6]
- 2 SeO3 -> 2 SeO2 + O2 (ΔH = −54 கிலோயூல்/மோல்)
நீரற்ற பொட்டாசியம் செலீனேட்டு (K2SeO4) மற்றும் கந்தக டிரையாக்சைடு (SO3) ஆகியவற்றின் வினையால் செலீனியம் டிரையாக்சைடு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
செலீனசு அமிலத்தின் உப்புகள் செலீனைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் வெள்ளி செலீனைட்டுகளும் (Ag2SeO3) சோடியம் செலீனைட்டுகளும் (Na2SeO3) அடங்கும்.
ஐதரசன் சல்பைடு நீரிய செலீனசு அமிலத்துடன் வினைபுரிந்து செலீனியம் டைசல்பைடை உருவாக்குகிறது:
- H2SeO3 + 2 H2S -> SeS2 + 3 H2O
செலீனியம் டைசல்பைடு 8-உறுப்பு வளையங்களைக் கொண்டுள்ளது. இது SeS2 சேர்மத்தின் தோராயமான இயைபைக் கொண்டுள்ளது. Se4S4, Se2S6 போன்ற தனித்தனி வளையங்கள் சேர்மங்களில் வேறுபடுகின்றன. செலீனியம் டைசல்பைடு கழுவுநீர்மத்தில் பொடுகு எதிர்ப்பு முகவராகவும், பலபடி வேதியியலில் தடுப்பானாகவும், கண்ணாடி சாயமாகவும், பட்டாசுகளில் குறைக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.[6]
ஐதரசன் பெராக்சைடுடன் செலீனியம் டை ஆக்சைடைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் செலீனிக் அமிலம், H2SeO4, செலீனியம் டிரையாக்சைடு நீரிழப்பு மூலம் தயாரிக்கப்படுகிறது.
- SeO2 + H2O2 -> H2SeO4
சூடான, செறிவூட்டப்பட்ட செலீனிக் அமிலம் தங்கத்துடன் வினைபுரிந்து தங்கம்(III) செலீனேட்டை உருவாக்குகிறது.
ஆலசன் சேர்மங்கள்
[தொகு]செலீனியத்தின் அயோடைடுகள் நன்கு அறியப்படவில்லை. செலீனியத்தின் ஒரே நிலையான குளோரைடு செலீனியம் மோனோகுளோரைடு (Se2Cl2) ஆகும். இது செலீனியம்(I) குளோரைடு எனவும் அறியப்படுகிறது. தொடர்புடைய புரோமைடும் அறியப்படுகிறது. இந்த இனங்கள் கட்டமைப்பு ரீதியாக தொடர்புடைய இருகந்தகம் இருகுளோரைடுக்கு ஒப்பானவை. செலீனியம் டைகுளோரைடு செலீனியம் சேர்மங்களை தயாரிப்பதில் ஒரு முக்கிய வினைபொருளாகும் (எ.கா. Se7 தயாரித்தல்). இது செலீனியத்தை கந்தக குளோரைடுடன் (SO2Cl2) சேர்த்து சூடுபடுத்துவதால் தயாரிக்கப்படுகிறது.[7] செலீனியம் புளோரினுடன் வினைபுரிந்து செலீனியம் அறுபுளோரைடை உருவாக்குகிறது:
- Se8 + 24 F2 -> 8 SeF6
இதன் கந்தகத்தின் இணைப்பொருளுடன் (கந்தக அறுபுளோரைடு) ஒப்பிடுகையில், செலீனியம் அறுபுளோரைடு (SeF6) அதிக வினைத்திறன் கொண்டதாகும். நச்சாக நுரையீரலை எரிச்சலூட்டும் தன்மை கொண்டுள்ளது.[8] சில செலீனியம் ஆக்சி ஆலைடுகள் செலீனியம் ஆக்சி புளோரைடு (SeOF2) மற்றும் செலீனியம் ஆக்சிகுளோரைடு (SeOCl2) ஆகியவை சிறப்பு கரைப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.[5]
செலீனைடுகள்
[தொகு]மற்ற சால்கோசன்கள் போலவே செலீனியமும் ஐதரசன் செலீனைடு H2Se சேர்மத்தை உருவாக்குகிறது. நிறமற்ற இவ்வாயு நாற்றம் வீசும் பொருளாகவும் நச்சுத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஐதரசன் சல்பைடை விட அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளது. கரைசலில் இது HSe− அயனியாக அயனியாக்கம் அடைகிறது. செலீனைடு ஈரெதிர்மின் அயனி Se2− வணிகரீதியாக செலீனியம் பெறப்படும் தாதுக்கள் உட்பட பல்வேறு சேர்மங்களை உருவாக்குகிறது. பாதரச செலீனைடு (HgSe), ஈய செலினைடு (PbSe), துத்தநாக செலீனைடு (ZnSe), தாமிரம் இண்டியம் காலியம் செலீனைடு (Cu(Ga,In)Se2) ஆகியவை எடுத்துக்காட்டுகளில் அடங்கும். இந்த பொருட்கள் குறைக்கடத்திகளாகும். அலுமினியம் போன்ற அதிக மின்நேர்தன்மை கொண்ட உலோகங்களுடன் இந்த செலீனைடுகள் நீராற்பகுப்புக்கு ஆளாகின்றன:[5]
- Al2Se3 + 3 H2O -> Al2O3 + 3 H2Se
கார உலோக செலீனைடுகள் செலீனியத்துடன் வினைபுரிந்து பாலிசெலீனைடுகளை உருவாக்குகின்றன, Se2−
n, இவை சங்கிலிகளாக இருக்கும்.
பிற சேர்மங்கள்
[தொகு]டெட்ராசெலீனியம் டெட்ராநைத்திரைடு (Se4N4) வெடிக்கும் ஆரஞ்சு நிற வேதிப்பொருளாகும். டெட்ராகந்தகம் டெட்ராநைத்திரைடு சேர்மத்தின் ஒப்புமையாக இச்சேர்மம் கருதப்படுகிறது.[5][9][10] செலீனியம் டெட்ராகுளோரைடுடன் [((CH
3)
3Si)
2N]
2Se]].[11] சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து டெட்ராசெலீனியம் டெட்ராநைத்திரைடை தயாரிக்கலாம்.[12]
செலீனியம், சயனைடுகளுடன் வினைபுரிந்து செலீனோசயனைடுகளைக் கொடுக்கும்.:[5]
- 8 KCN + Se8 -> 8 KSeCN
கரிமசெலீனியம் சேர்மங்கள்
[தொகு]செலீனியம், குறிப்பாக II ஆக்சிசனேற்ற நிலையில், கார்பனுடன் நிலையான பிணைப்புகளை உருவாக்குகிறது. இவை கட்டமைப்பு ரீதியாக தொடர்புடைய கரிமகந்தக சேர்மங்களுக்கு ஒத்தவையாகும். செலீனைடுகள் (R2Se, தயோ ஈதர் ஒப்புமைகள்), இருசெலீனைடுகள் (R2Se2, இருசல்பைடு ஒப்புமைகள்) மற்றும் செலீனோல்கள் (RSeH, தயோல் ஒப்புமைகள்) போன்றவை குறிப்பாக பொதுவானவையாகும். செலீனைடுகள், இருசெலீனைடுகள் மற்றும் செலீனோல்களின் பிரதிநிதிகள் முறையே செலீனோமெத்தியோனின், இருபீனைல் செலீனைடு மற்றும் பென்சின்செலீனோல் ஆகியவை அடங்கும். கந்தக வேதியியலில் உள்ள சல்பாக்சைடு செலீனியம் வேதியியலில் செலீனாக்சைடுகளால் (வாய்ப்பாடு RSe(O)R) குறிப்பிடப்படுகிறது. இவை செலீனாக்சைடு நீக்குதல் வினையால் விளக்கப்பட்டபடி, கரிமத் தொகுப்பு வினையில் உருவாகும் இடைநிலைகளாகும். இரட்டைப் பிணைப்பு விதியால் குறிப்பிடப்படும் போக்குகளுக்கு இணங்க, செலீனோகீடோன்கள், R(C=Se)R, மற்றும் செலீனால்டிகைடுகள் R(C=Se)H ஆகியவை அரிதாகவே காணப்படுகின்றன.[13]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""无上"文明古国:郭实猎笔下的大英", “无上”文明古国:郭实猎笔下的大英, UniSIM Centre for Chinese Studies, SIM University, pp. 1–268, Mar 2015, retrieved 2023-12-01
- ↑ Block, Eric; Birringer, Marc; Jiang, Weiqin; Nakahodo, Tsukasa; Thompson, Henry J.; Toscano, Paul J.; Uzar, Horst; Zhang, Xing et al. (2001-01-01). "Allium Chemistry: Synthesis, Natural Occurrence, Biological Activity, and Chemistry of Se -Alk(en)ylselenocysteines and Their γ-Glutamyl Derivatives and Oxidation Products" (in en). Journal of Agricultural and Food Chemistry 49 (1): 458–470. doi:10.1021/jf001097b. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8561. https://pubs.acs.org/doi/10.1021/jf001097b.
- ↑ Byun, Byung Jin; Kang, Young Kee (May 2011). "Conformational preferences and p K a value of selenocysteine residue" (in en). Biopolymers 95 (5): 345–353. doi:10.1002/bip.21581. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3525. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/bip.21581.
- ↑ ""无上"文明古国:郭实猎笔下的大英", “无上”文明古国:郭实猎笔下的大英, UniSIM Centre for Chinese Studies, SIM University, pp. 1–268, Mar 2015, retrieved 2023-12-01
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 House, James E. (2008). Inorganic chemistry. Academic Press. p. 524. ISBN 978-0-12-356786-4.
- ↑ 6.0 6.1 6.2 Wiberg, Egon; Wiberg, Nils; Holleman, Arnold Frederick (2001). Inorganic chemistry. San Diego: Academic Press. p. 583. ISBN 978-0-12-352651-9.
- ↑ Xu, Zhengtao (2007). Devillanova, Francesco A. (ed.). Handbook of chalcogen chemistry: new perspectives in sulfur, selenium and tellurium. Royal Society of Chemistry. p. 460. ISBN 978-0-85404-366-8.
- ↑ Proctor, Nick H.; Hathaway, Gloria J. (2004). Hughes, James P. (ed.). Proctor and Hughes' chemical hazards of the workplace (5th ed.). Wiley-IEEE. p. 625. ISBN 978-0-471-26883-3.
- ↑ Woollins, Derek; Kelly, Paul F. (1993). "The Reactivity of Se4N4 in Liquid Ammonia". Polyhedron 12 (10): 1129–1133. doi:10.1016/S0277-5387(00)88201-7.
- ↑ Kelly, P.F.; Slawin, A.M.Z.; Soriano-Rama, A. (1997). "Use of Se4N4 and Se(NSO)2 in the preparation of palladium adducts of diselenium dinitride, Se2N2; crystal structure of [PPh
4]
2[Pd
2Br
6(Se
2N
2)]". Dalton Transactions (4): 559–562. doi:10.1039/a606311j. - ↑ Siivari, Jari; Chivers, Tristram; Laitinen, Risto S. (1993). "A simple, efficient synthesis of tetraselenium tetranitride". Inorganic Chemistry 32 (8): 1519–1520. doi:10.1021/ic00060a031.
- ↑ Siivari, Jari; Chivers, Tristram; Laitinen, Risto S. (1993). "A simple, efficient synthesis of tetraselenium tetranitride". Inorganic Chemistry 32 (8): 1519–1520. doi:10.1021/ic00060a031.
- ↑ Erker, G.; Hock, R.; Krüger, C.; Werner, S.; Klärner, F.G.; Artschwager-Perl, U. (1990). "Synthesis and Cycloadditions of Monomeric Selenobenzophenone". Angewandte Chemie International Edition in English 29 (9): 1067–1068. doi:10.1002/anie.199010671.