சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்
International Organization for Standardization (ஆங்கில மொழி) Organisation internationale de normalisation (பிரெஞ்சு மொழி) Международная организация по стандартизации (உருசிய மொழி) | |
![]() | |
சுருக்கம் | ISO |
---|---|
உருவாக்கம் | 23 பெப்ரவரி 1947 |
வகை | அரசு சார்பற்ற அமைப்பு |
நோக்கம் | அனைத்துலக சீர்தரங்களின் வளர்ச்சி |
தலைமையகம் | ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
உறுப்பினர்கள் | 167 உறுப்பினர்கள் (39 நிருபர்கள் மற்றும் 4 சந்தாதாரர்கள்)[1] |
ஆட்சி மொழிகள் | |
தலைவர் | உல்ரிகா ஃபிராங்கே |
வலைத்தளம் | www |

உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும். ISO எனப்பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.
இது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையத்துடன் (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது.
பெயர்க் காரணம்
[தொகு]ISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஐஎஸ்ஓ நிறுவும் தரங்களில் (நியமங்களில்) மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை. சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பொருந்தக் கூடியவை. இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- உலகத் தர நிர்ணய நாள்
- அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.)
- அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் ((ஐ.டி.யூ.)
மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia. MIT Innovations and Entrepreneurship Seminar Series.
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- பொதுவில் கிடைக்கும் சீர்தரங்கள், சீர்தரங்களின் சிறிய துணைக்குழுவிற்கு இலவச அணுகலுடன்.
- தரநிலைகள் மற்றும்/அல்லது திட்டங்களுக்கான மேம்பட்ட தேடல்
- ஆன்லைன் உலாவல் தளம் (OBP), ISO தரநிலைகள், வரைகலை குறியீடுகள், குறியீடுகள் அல்லது விதிமுறைகள் மற்றும் வரையறைகளில் உள்ள சமீபத்திய உள்ளடக்கத்திற்கான அணுகல்.
- சர்வதேச நியமங்கள்.(உங்களுக்கு தெரியுமா?)[தொடர்பிழந்த இணைப்பு]
- ISO தரங்கள் (நியமங்கள்) தொடர்பான சொற்பட்டியல்