உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.எசு.ஓ 639-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ.எசு.ஓ 639-1 (ISO 639-1) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் முதற்பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 136 இரண்டெழுத்து குறியீடுகளை கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.

எடுத்துக்காட்டாக:

ஐ.எசு.ஓ 639-1 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கடைசியாக சேர்க்கப்பட்ட குறியீடு ht ஆகும். ஒரு மொழிக்கு ஐ.எசு.ஓ 639-2 குறியீடு இருப்பின் புதிய ஐ.எசு.ஓ 639-1 குறியீடு சேர்க்கப்படமாட்டாது. எனவே ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் மாற்றமடையாதவை.

2001 ஆம் ஆண்டுக்கு பிறகு சேர்க்கப்பட்ட குறியீடுகள்:

ஐ.எசு.ஓ 639-1 ஐஎஸ்ஓ 639-2 பெயர் மாற்ற திகதி மாற்றம் முன்னர் அடங்கியது
io ido Ido 2002-01-15 சேர் art
wa wln வாலோன் மொழி 2002-01-29 சேர் roa
li lim இலிம்பூர்கு மொழி 2002-08-02 சேர் gem
ii iii நுவோசு மொழி 2002-10-14 சேர்
an arg Aragonese 2002-12-23 சேர் roa
ht hat ஐத்தி கிரியோல் மொழி 2003-02-26 சேர் cpf

மேலும் பார்க்க

[தொகு]

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_639-1&oldid=2740513" இலிருந்து மீள்விக்கப்பட்டது