உள்ளடக்கத்துக்குச் செல்

திறந்த ஆவண வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறந்த ஆவண வடிவம் (OpenDocument Format/ ODF) என்பது, அலுவலகப்பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் ஆவணங்களான உரைக்கோப்புக்கள், விரிதாட்கள், அளிக்கைகள் போன்றனவற்றை சேமிக்கவும் பரிமாறவும் பயன்படுத்தப்படும் ஆவண வடிவமாகும் ( File Format) .

இது ஓப்பன் ஆபீஸ் மென்பொருள் செயற்றிட்டத்தினரால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட XML ஐ அடிப்படையாக கொண்ட ஆவண வடிவத்திலிருந்து விருத்தி செய்யப்பட்டது. இவ்வடிவம் 2005 ம் ஆண்டு மே 1 இல் OASIS நிறுவனத்தால் நியமப்படுத்தப்பட்டது.

இவ் ஆவண வடிவத்தின் மூல நிரல்கள் திறந்த ஆணைமூலமாக அமைவதோடு, இவ்வாவண வடிவத்தை எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி எவரும் பயன்படுத்த முடியும். இவ்வடிவத்தில் சேமிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்துவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனத்திலும் தங்கியிருக்க வேண்டியதில்லை.

எல்லோருக்கும் பொதுவான, தளைகள் அற்ற, திறந்த ஆவண வடிவம் ஒன்றின் தேவை கருதி, OASIS என்கிற அமைப்பு இவ்வாவணத்தை உருவாக்கி அளித்துள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் மூடிய, உரிமச்சிக்கல்கள் உள்ள ஆவண வடிவங்களான மைக்ரோசொஃப்ட்அலுவலக ஆவண வடிவங்கள் (.doc, .rtf, .xls .ppt) pdf, ஏனைய தனியார் ஆவண வடிவங்கள், பயனர்களினதும், தொழிநுட்பத்தினதும் சுதந்திரத்தை பறிப்பதுடன், இலாப, மேலாதிக்க நோக்கங்களுக்காக தொழிநுட்ப வளர்ச்சி, சுதந்திரம் என்பவற்றுக்கு எதிராக செயல்படுவதாக தொழிநுட்பவியல் விமர்சகர்களும், சிந்தனையாளர்களும் நம்புகின்றனர். இக்காரணத்தினாலேயே, மாற்றுவடிவமான திறந்த ஆவண வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நியமத்தில் வெவ்வேறு வகையான ஆவணங்களை கையாள்வதற்கு அவற்றுக்கேயுரிய சிறப்பான கோப்பு அமைப்புக்கள் உண்டு. இத்துணை அமைப்புக்கள் அனைத்தும் திறந்த ஆவண வடிவ நியமத்தினுள் அடங்கும்.

  • ODT - இது உரை கோப்புக்களுக்கானது
  • ODS - விரிதாட்களுக்கானது
  • ODP - அளிக்கைகளுக்கானது
  • ODG - வரைகலைக்கானது

தற்போது திறந்த ஆவண வடிவத்தை ஆதரிக்கும் மென்பொருட்கள்

[தொகு]

உரை ஆவணம் (.odt)

[தொகு]

விரிதாட்கள் (.ods)

[தொகு]
  • Gnumeric
  • IBM Workplace Documents 2.6+
  • KSpread
  • NeoOffice 1.2 Calc (import only)
  • OpenOffice.org Calc 2.0
  • StarOffice 8 Calc

அளிக்கைகள் (.odp)

[தொகு]
  • IBM Workplace Documents 2.6+
  • KPresenter
  • NeoOffice 1.2 Impress (import only)
  • OpenOffice.org Impress 2.0
  • StarOffice 8 Impress

வரைகலை (.odg)

[தொகு]
  • NeoOffice 1.2 Draw (import only)
  • OpenOffice.org Draw
  • Scribus 1.2.2+ (import only) — Desktop publishing application

தேடு பொறிகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்த_ஆவண_வடிவம்&oldid=3712527" இலிருந்து மீள்விக்கப்பட்டது