கோபால் (நிரலாக்க மொழி)
நிரலாக்கக் கருத்தோட்டம்: | procedural, object-oriented |
---|---|
தோன்றிய ஆண்டு: | 1959 |
வடிவமைப்பாளர்: | Grace Hopper, William Selden, Gertrude Tierney, Howard Bromberg, Howard Discount, Vernon Reeves, Jean E. Sammet |
இயல்பு முறை: | strong, static |
முதன்மைப் பயனாக்கங்கள்: | OpenCOBOL, Micro Focus International (e.g. the Eclipse-plug-in Micro Focus Net Express) |
மொழி வழக்குகள்: | HP3000 COBOL/II, COBOL/2, IBM OS/VS COBOL, IBM COBOL/II, IBM COBOL SAA, IBM Enterprise COBOL, IBM COBOL/400, IBM ILE COBOL, Unix COBOL X/Open, Micro Focus COBOL, Microsoft COBOL, Ryan McFarland RM/COBOL, Ryan McFarland RM/COBOL-85, DOSVS COBOL, UNIVAC COBOL, Realia COBOL, Fujitsu COBOL, ICL COBOL, ACUCOBOL-GT, isCOBOL, COBOL-IT, DEC COBOL-10, DEC VAX COBOL, Wang VS COBOL, Visual COBOL, Tandem (NonStop) COBOL85, Tandem (NonStop) SCOBOL (a COBOL74 variant for creating screens on text-based terminals) |
பிறமொழித்தாக்கங்கள்: | FLOW-MATIC, COMTRAN, FACT |
இம்மொழித்தாக்கங்கள்: | PL/I, CobolScript, ABAP |
விக்கிநூல்களில் COBOL | |
கோபோல் (COBOL) கணினியில் வர்தகத்தை இலக்காகக் கொண்ட நிரலாக்கல் மொழியாகும். இதன் ஆங்கில விரிவாகம் COmmon Business Oriented Language சுருக்கமாக கோபால் அல்லது கோபோல் (இலங்கை வழக்கு) என்பதாகும். 2002ஆம் ஆண்டு நியமத்தில் Object Oriented Programming Language மற்றும் புதிய நிரலாக்கல் மொழிகளில் உள்ள வசதிகள் சேர்க்கப்பட்டன.
சரித்திரம்
[தொகு]1959 ஆம் ஆண்டு CODASYL (COnference on DAta Systems Languages) குழு மூலமாக் இம்மொழியானது ஆரம்பிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய நியமக் குழு கோபால் மொழியின் நியமங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதன் சீர்தரம் (நியமம்) விருத்திக்கு அமெரிக்க தேசிய நியமக் குழுவே முன்னெடுத்து வந்துள்ளது.
கோபோல் மொழியைப் பற்றி
[தொகு]- கோபோல் ஓர் நியம நிரலாக்க மொழியாகும். அதாவது எந்தக் கணினியிலும் எந்தக் கோபால் தொகுப்பியும் (compiler) நிரலாக்க இலக்கணத்திற்கேற்ப எழுதப்பட்ட நிரலைக் தொகுக்கும்.
- கோபோல் ஆங்கிலத்தைப் போன்ற ஓர் மொழியாகும். இதன் நிரலாக்கம் ஆனது சிக்கலான கணினி வார்தைகளில் அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதலாம்.
- கோபோல் நட்புரீதியான மொழியாகும். இது ஏனைய மொழிகள் போன்றல்லாமல் அவ்வளவு சிக்கலானது அல்ல.
கோபால் மொழியின் அனுகூலங்கள்
[தொகு]கோபால் மொழி ஆங்கிலத்தைப் போன்றுள்ளதால் அவை தாமாகவே ஆவணப்படுத்தும் வசதியுள்ளவை ஆகும்.
கோபால் எழுத்துக்கள்
[தொகு]கோபால் மொழியில் சீர்தரமாக A இல் இருந்து Z வரையான பெரிய எழுத்துக்களுடன் (சிறிய எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாது) 0 இலிருந்து 9 எண்களுடன் விசேட எழுத்துக்களான ( , ; , . , < , > , $ ,…… உடனான 51 எழுதுக்களை ஆதரிக்கின்றது.
நிரலாக்கும் முறை
[தொகு]நிரல் | வலயப் பெயர் |
---|---|
1-6 | தொடர் இலக்கம் |
7-7 | காட்டும் இடம் |
8-11 | வலயம் A |
12-72 | வலயம் B |
தொடரிலக்கமும் அடையாளம் காணும் இடமும்
[தொகு]காட்சி (Indicator) | கருத்து |
---|---|
* (நட்சத்திரக்குறியீடு) | * அடுத்து வருபவை நிரலாக்கரின் கருத்துக்கள் ஆகும். |
- (ஹைபன்) | இக்குறியீடானது மேலேயுள்ள வரியின் தொடர்ச்சி என்பதைக் காட்டுகின்றது. |
/ (ஸ்டோக்) | இதுவும் நிரலாக்கரின் கருத்துக்களே (காமண்ட்ஸ்). அச்சியந்திரம் அச்சு எடுக்கும்போது அடுத்துவரும் பக்கத்தின் மேற்பகுதியைத் தவிர்த்து அச்செடுக்கும். |
D | D என்னும் எழுத்தானது ஆங்கிலத்தில் வழுவைத் திருத்தியமைக்கும் டீபங்கிங் என்பதைக்குறிக்கும். இதில் ஆரம்பிக்கும் வரிகள் வழுவைத் திருத்தியமைக்க உதவும். |
இடைவெளியிருந்தால் (ஒன்றும் இல்லாதிருந்தால்) | இடைவெளியானது அப்பகுதியானது நிரலாக்கர்களின் கருத்தோ வழுவைத் திருத்தியமைப்பதற்கானதற்கோ அல்லது என்பதைக் குறிக்கின்றது. |
கோபால் சொற்கள்
[தொகு]எழுத்துக்களிலான தொடர்கள் சொற்களை தோற்றுவிக்கும். கோபால் மொழியில் ஏனைய நிரலாக்கம் போலவே இரண்டு வகையான சொற்கள் உண்டு.
ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சொற்கள்
[தொகு]கோபால் மொழியில் இலக்கணப்படி சீர்தரமாக ஏற்கனவே சில சொற்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவை கோபால் மொழியில் தமக்கென ஓர் விசேட கருத்தினைக் கொண்டுள்ளன. ஓர் நிரலாக்கர் இவ்வாறாக வரையறை செய்யப்பட்ட சொற்களை அவ்வரையறக்கு உட்பட்டே பயன்படுத்தல் வேண்டும் மாறாக நிரலாக்கர் விரும்பிய வண்ணம் எதேச்சையாகப் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக ACCEPT, DIVISION, DIVIDE மற்றும் VALUE போன்றவை.
பயனர் (அதாவது நிரலாக்கர்) நிர்ணயிக்கும் சொற்கள்
[தொகு]இது கோபால் நிரலாக்கர்கள் உருவாக்கும் ஓர் தரவு ஒன்றையோ, பந்தியையோ, கோப்பு, ரெக்காட் (Record) குறிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இவையெல்லாம் பயனர்கள் (நிரல்லாக்கர்கள்) உருவாக்கிய சொற்கள் எனப்படும். எடுத்துக்க்காட்டுகள் ஆவன: AMT, REG-NO, AGE.
கோபோல் சீர்தரங்கள்
[தொகு]- கோபோல் - 68
- கோபோல் - 74
- கோபோல் - 85
- கோபோல் - 2002
வெளியிணைப்புக்கள்
[தொகு]- கோபால் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (ஆங்கில மொழியில்)
- COBOL.com - கோபால் சமூகம் பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- கோபல் நியமக் குழு பரணிடப்பட்டது 2004-03-31 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- கோபால் இலக்கணம் மற்றும் ஆய்வுக் குழு பரணிடப்பட்டது 2006-09-24 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- கோபால்போட்டல் பரணிடப்பட்டது 2011-02-08 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- கோபால் நிலையம் (ஆங்கில மொழியில்)
- கோபால் பயிற்சிகள் பரணிடப்பட்டது 2008-12-08 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- கோபாலை ஆரம்பிப்பவர்களுக்கான பயிற்சிகள் (ஆங்கில மொழியில்)
- "எல்லாமே கோபாலைப் பற்றிய" webring (ஆங்கில மொழியில்)
- கோபால் பயனர்கள் குழு (COBUG) பரணிடப்பட்டது 2005-08-14 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- IBM கோபால் மெயின்பிறோமுடன் (zOS) (ஆங்கில மொழியில்)
- கோபல் மற்றும் மெயின்பிறோம் பற்றிய விவாதக் குழு பரணிடப்பட்டது 2004-11-22 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- கோபால் மற்றும் மெயின்பிறேம் பற்றிய தகவல்கள் (ஆங்கில மொழியில்)
- கோபால் II உசாத்துணைகளும் எடுத்துக் காட்டுகளும் பரணிடப்பட்டது 2006-10-16 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- OpenCOBOL: திற்ந்த நிரல் கோபால் கம்பைலர் (ஆங்கில மொழியில்)