மே 9
Appearance
(9 மே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 9 (May 9) கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது..
- 1386 – இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது.
- 1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார்.
- 1612 – கண்டி மன்னர் செனரத்துடன் மார்செலசு டி பொசோடர் தலைமையிலான இடச்சுத் தூதுக்குழு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.[1]
- 1671 – அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
- 1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1877 – உருமேனியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1877 – 8.8 அளவு நிலநடுக்கம் பெருவைத் தாக்கியதில், 2,541 பேர் உயிரிழந்தனர்.
- 1901 – ஆத்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்ணில் திறந்துவைக்கப்பட்டது.
- 1918 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் துறைமுகத்தை பிரித்தானியா இரண்டாம் முறையாக முடக்க எடுத்த நடவடிக்கையை செருமனி தடுத்தது.
- 1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பயன்பாடு மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.[2]
- 1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.
- 1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
- 1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
- 1936 – அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எத்தியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாட்டை இத்தாலி உருவாகியது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை செருமனியின் யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் அரச கடற்படை தாக்கிக் கைப்பற்றியது.
- 1942 – பெரும் இன அழிப்பு: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர். பெலருசில் இருந்த நாட்சி வதைமுகாம் அழிக்கப்பட்டு, அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இறுதி செர்மன் சரணடைவு பெர்லினில் சோவியத் தலைமையகத்தில் இடம்பெற்றது. சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் நிலை கொண்டிருந்த செருமனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
- 1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
- 1955 – பனிப்போர்: மேற்கு செருமனி நேட்டோவில் இணைந்தது.
- 1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக சப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
- 1969 – கார்லோசு லமார்க்கா பிரேசில் இராணுவ ஆட்சியாளருக்கு எதிராகக் கரந்தடித் தாக்குதல்கலை ஆரம்பித்தார். சாவோ பாவுலோவில் இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன.
- 1977 – ஆம்ஸ்டர்டம் நகரில் போலன் உணவகம் தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.
- 1979 – பாரசீக யூத தொழிலதிபர் அபீப் எல்கானியான் தெகுரானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானிய யூதர்கள் அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.
- 1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
- 1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
- 1987 – போலந்து, வார்சாவா நகரில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 183 பேரும் உயிரிழந்தனர்.
- 1992 – நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் சூசா நகரைக் கைப்பற்றின.
- 1992 – கனடா, நோவா ஸ்கோசியாவில் வெசுட்ரே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 2001 – கானாவில் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றில் ஏற்பட்ட சலசலப்பை அடக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.
- 2002 – பெத்லகேமில் பலத்தீனியர்களின் பிறப்பிடத் தேவாலயத்தின் 38-நாள் முற்றுகை முடிவுக்கு வந்தது.
- 2012 – இந்தோனேசியாவில் மேற்கு சாவகப் பகுதியில் விமானம் ஒன்று சலாக் மலையில் மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர்.
- 2018 – மலேசியப் பொதுத் தேர்தல், 2018: மலேசியாவின் தேசிய முன்னணி கட்சி 1957 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாகப் பெரும் தோல்வியடைந்தது.
பிறப்புகள்
[தொகு]- 1408 – அன்னமாச்சாரியார், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503)
- 1540 – மகாராணா பிரதாப், உதய்பூர் இராச்சிய அரசர் (இ. 1597)
- 1828 – அன்ட்ரூ மறீ, தென்னாப்பிரிக்க எழுத்தாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1917)
- 1836 – பெர்டினாண்ட் மோனயர், பிரான்சிய கண் மருத்துவர் (இ. 1912)
- 1837 – ஆடம் ஓப்பெல், ஓபெல் நிறுவனத்தை நிறுவிய செருமானியப் பொறியியலாளர் (இ. 1895)
- 1866 – கோபால கிருஷ்ண கோகலே, இந்தியப் பொருளியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1915)
- 1874 – ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேயத் தொல்லியலாளர் (இ. 1939)
- 1921 – சோபி சோல், செருமானிய செயற்பாட்டாளர் (இ. 1943)
- 1944 – சாரல்நாடன், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2014)
- 1954 – மல்லிகா சாராபாய், இந்திய சமூக ஆர்வலர்
- 1955 – டி. ராஜேந்தர், தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசைக் கலைஞர், அரசியல்வாதி
- 1961 – ஜோன் கோர்பெட், அமெரிக்க நடிகர்
- 1988 – சேசன் பெரியசாமி, மொரிசியசு தமிழிசைக் கலைஞர்
- 1989 – விஜய் தேவரகொண்டா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1992 – சாய் பல்லவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
[தொகு]- 1805 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1759)
- 1931 – ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1852)
- 1941 – தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (பி. 1883)
- 1970 – உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1888)
- 1976 – ஆதி நாகப்பன், மலேசிய எழுத்தாளர், ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1926)
- 1986 – டென்சிங் நோர்கே, நேப்பால மலையேறி (பி. 1914)
- 2014 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)
சிறப்பு நாள்
[தொகு]- விடுதலை நாள் (குயெர்ன்சி, யேர்சி)
- ஐரோப்பா நாள் (ஐரோப்பிய ஒன்றியம்)
- வெற்றி நாள் (சோவியத் ஒன்றியம், அசர்பைஜான், பெலருஸ், பொசுனியா எர்செகோவினா, சியார்சியா, இசுரேல், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, உருசியா, செர்பியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உக்ரைன், உசுபெக்கிசுத்தான், ஆர்மீனியா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 120