உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றி நாள் (மே 9)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றி நாள்
Victory Day
மாஸ்கோவில் 2005 மே 9 இல் வெற்றி நாள் கொண்டாட்டங்கள்
அதிகாரப்பூர்வ பெயர்உருசியம்: День Победы[a 1]
கடைபிடிப்போர்உருசியா, முன்னாள் சோவியத் நாடுகள், செர்பியா, இசுரேல், முன்னாள் வார்சா உடன்பாடு நாடுகள்
நாள்9 மே
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனவெற்றி நாள் (ஐரோப்பா)

வெற்றி நாள் (Victory Day[a 1] 1945 ஆம் ஆண்டில் நாட்சி செருமனியின் சரணடைதலை நினைவுகூரும் விடுமுறை நாள் ஆகும். 1945 மே 8 மாலையில் (மாஸ்கோ நேரம் மே 9 நள்ளிரவிற்குப் பின்னர்) செருமனி சரணடைந்தமை கையெழுத்திடப்பட்டதை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் 15[1] குடியரசுகளால் இந்நாள் முதன் முதலில் நினைவுகூரப்பட்டது. சோவியத் அரசு பெர்லினில் கையெழுத்திடும் விழா முடிவடைந்தவுடன் அதனை மே 9 அதிகால அறிவித்தது.[2] 1945 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், 1965 ஆம் ஆண்டிலேயே இந்நாள் தொழிலாளர் அல்லாத அனைவருக்குமான விடுமுறை நாளாக சில சோவியத் குடியரசுகளில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

கிழக்கு செருமனியில், மே 8 வெற்றி நாள் 1950 முதல் 1966 வரை கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1985 இல் 40-வது நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. 1975 இல், சோவியத் முறையிலான "வெற்றி நாள்" மே 9 இல் கொண்டாடப்பட்டது. 2002 முதல், செருமனியின் மெக்லென்பூர்க்-வோர்போமர்ன் மாநிலம் தேசிய சோசலிசத்தில் இருந்து விடுதலை நாளாகவும் இரண்டாம் உலகப் போர் முடிவு நாளாகவும் கொண்டாடி வருகிறது.[3]

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு உருசியக் கூட்டமைப்பு உருவானதில் இருந்து மே 9 ஐ அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இந்நாள் ஒரு வார இறுதியில் வந்தாலும், இதனை வேலை செய்யாத நாளாகவே கருதுகிறது (அதன் பின் வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாகும்).

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 உருசியம்: День Победы, ஜென் பபியெதி
    உக்ரைனியன்: День Перемоги, ஜென் பெரிமோகி
    பெலருசிய மொழி: Дзень Перамогі, சியென் பியெரமோகி
    உசுபேகியம்: Gʻalaba kuni, காலபா கூனி
    காசாக்கு மொழி: Жеңіс Күні, செனிசு கூனி
    சியார்சிய: გამარჯვების დღე, கமார்சுவேபிசு ஜே
    அசர்பைஜான்: Qələbə Günü, கலாபா கூனூ
    மல்தோவியம்: Ziua Victoriei, சீயா விக்தோரிய்
    இலத்துவிய: Uzvaras diena, உசுவாராசு தியெனா
    கிர்கீசியம்: Жеңиш майрамы, செங்கிசு மைராமி
    தாஜிக்: Рӯзи Ғалаба, ரூசி கலாபா
    ஆர்மீனியம்: Հաղթանակի օրը, ஹாத்தானாக்கி ஓரி
    துருக்மேனியம்: Ýeňişlar Harçlaarsiň, யோனிசுலார் கார்சிலார்சின்
    எசுத்தோனிய மொழி: Võidupüha ("வெற்றி விடுமுறை")
    தத்தாரியம்: Cyrillic Җиңү көне, Latin சீனு கோனி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1945 மே 8 இல் சோவியத் ஒன்றியத்தில் 15 குடியரசுகள் இருந்தன. 1956 இல் கரேலோ-பின்லாந்து குடியரசு கலைக்கப்பட்டது.
  2. Earl F. Ziemke, 1990, Washington DC, CENTER OF MILITARY HISTORY, CHAPTER XV:The Victory Sealed Page 258 last 2 paragraphs
  3. "Gesetz über Sonn- und Feiertage des Landes Mecklenburg-Vorpommern". Mv.juris.de. Archived from the original on 20 June 2012. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றி_நாள்_(மே_9)&oldid=4009258" இலிருந்து மீள்விக்கப்பட்டது