பெப்ரவரி 9
Appearance
(9 பெப்ரவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 9 (February 9) கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார்.[1]
- 1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.[2]
- 1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
- 1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[4]
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது.[5]
- 1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
- 1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1895 – வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்.
- 1897 – பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.[6]
- 1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
- 1904 – உருசிய-சப்பானியப் போர்: போர்ட் ஆர்த்தர் சமர் முடிவடைந்தது.
- 1913 – எரிவெள்ளிக் கூட்டம் ஒன்று வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் தென்பட்டது. இது பூமியின் சிறிய, குறுகிய வாழ்வுக் காலமுள்ள ஒரு இயற்கைத் துணைக்கோள் என வானியலாளர்களால் கூறப்பட்டது.
- 1920 – ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1951 – கொரியப் போர்: இரண்டு-நாள் கியோச்சாங் படுகொலைகள் ஆரம்பமாயின. தென்கொரிய இராணுவம் கியோச்சாங் என்ற இடத்தில் 719 பொதுமக்களைக் கொன்று குவித்தது.
- 1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
- 1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
- 1971 – அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.
- 1971 – அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.
- 1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
- 1986 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
- 1991 – லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
- 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
- 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர்.
- 2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
பிறப்புகள்
[தொகு]- 1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1809)
- 1773 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1841)
- 1910 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1976)
- 1919 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 1989)
- 1929 – ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (இ. 2014)
- 1934 – சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் (இ. 1969)
- 1940 – ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்
- 1943 – ஜோசப் ஸ்டிக்லிட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1944 – ஆலிஸ் வாக்கர், அமெரிக்க எழுத்தாளர்
- 1945 – இயோசினோரி ஓசூமி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய உயிரியலாளர்
- 1950 – ஆதி குமணன், மலேசிய எழுத்தாளர் (இ. 2005)
- 1964 – ம. ஆ. சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
- 1970 – கிளென் மெக்ரா, ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1981 – டாம் ஹிடில்ஸ்டன், ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்
[தொகு]- 1881 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய புதின எழுத்தாளர் (பி. 1821)
- 1966 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (பி. 1906)
- 1977 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1901)
- 1981 – எம். சி. சாக்ளா, இந்திய அரசியல்வாதி (பி. 1900)
- 1984 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918)
- 1986 – ச. ராஜாபாதர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைவாதி (பி. 1916)
- 1987 – லூயிஸ் ஹாம்மெட், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1894)
- 1989 – ஒசாமு தெசூகா, சப்பானிய கேலிப்பட ஓவியர் (பி. 1928)
- 1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936)
- 2001 – சாவி, எழுத்தாளர் (பி. 1916)
- 2008 – பாபா ஆம்தே, இந்திய சமூக சேவகர் (பி. 1914)
- 2010 – செல்லையா மெற்றாஸ்மயில், ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்
- 2011 – வ. விஜயபாஸ்கரன், தமிழக எழுத்தாளர் (பி. 1926)
- 2011 – எஸ். வி. ராமகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1936)
- 2012 – ஹெப்சிபா ஜேசுதாசன், புதின எழுத்தாளர். (பி. 1925)
- 2012 – எஸ். தட்சிணாமூர்த்தி, இந்திய இசைக்கலைஞர் (பி. 1921)
- 2013 – அஃப்சல் குரு, இந்தியத் தீவிரவாதி
- 2013 – மலர் மன்னன், பத்திரிகையாளர், எழுத்தாளர்
- 2016 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)
சிறப்பு நாள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zeno". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 8 February 2018.
- ↑ "Hooper, John" – via Wikisource.
- ↑ Pope Gregory XV (by S. Miranda)
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ Cogliano, Francis D. Revolutionary America, 1763–1815: A Political History. Routledge, 1999, p. 47.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 70