உள்ளடக்கத்துக்குச் செல்

தென் வியட்நாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாமியக் குடியரசு
வியட்நாம் சோங் கோவா
1955–1975
கொடி of தென்வியட்நாம்
கொடி
படைஞர் மேலங்கி of தென்வியட்நாம்
படைஞர் மேலங்கி
குறிக்கோள்: "Tổ quốc - Danh dự - Trách nhiệm"
(English: "தந்தைநாடு; கண்னியம்; கடமை")
நாட்டுப்பண்: "Tiếng Gọi Công Dân"
(English: "Call to the Citizens")
1954 முதல் 1976 வரை தென்கிழக்காசியாவில் தென்வியட்நாம் இருப்பிடம்
1954 முதல் 1976 வரை தென்கிழக்காசியாவில் தென்வியட்நாம் இருப்பிடம்
தலைநகரம்சாய்கோன்
பேசப்படும் மொழிகள்வியட்நாமியம் (official)
சமயம்
பௌத்தம்
கத்தோலிக்கம்
கன்பூசியம்
தாவோயியம்
அரசாங்கம்ஒற்றைக் குடியரசுத் தலைமை அரசியலமைப்புக் குடியரசு (1955–1963, 1967–1975)
இராணுவ ஆட்சி (1963–1967)
குடியரசுத் தலைவர் 
• 1955;1963
நிகோ தின் தியேம்
• 1963;1964
துவொங் வான் மின்
நிகுயேன் கான்
• 1964;1965
பான் காசு சூவு
• 1965;1975
நிகுயேன் வான் தியேயு
• 1975
திரான் வான் குவோங் (பதில்)
• 1975
துவோங் வான் மின் (பதில்)
முதலமைச்சர்]] 
• 1963;1964 (1வது)
நிகுயேன் நிகோசு தோ
• 1975 (கடைசி)
வூ வான் மாவு
வரலாற்று சகாப்தம்பனிப்போர் • வியட்நாம் போர்
• வாக்கெடுப்பு
26 அக்தோபர் 1955
• 1963 கலகம்
2 நவம்பர் 1963
27 சனவரி 1973
30 ஏப்பிரல் 1975
பரப்பு
1955173,809 km2 (67,108 sq mi)
1974173,809 km2 (67,108 sq mi)
மக்கள் தொகை
• 1955
12000000
• 1974
19582000
மமேசு (1979)0.783
உயர் · 53
நாணயம்தோங்a
முந்தையது
பின்னையது
வியட்நாம் அரசு
தாற்காலிகத் தென்வியட்நாம் குடியரசின் புரட்சியாட்சி
தற்போதைய பகுதிகள் வியட்நாம்
  1. படிப்படியாக பிரெஞ்சு பியாசுத்திரே நாணயத்தைப் பதிலிடுதல்.

வியட்நாம் குடியரசு எனப்படும் தென் வியட்நாம் (South Vietnam, வியட்நாமியம்: வியட்நாம் சோங் கோவா), 1955 முதல் 1975 வரை வியட்நாமின் தென்னரைப் பகுதியை ஆட்சி செய்த அரசமைப்பாகும். இது 1949 இல் "வியட்நாம் அரசு (State of Vietnam)" என பன்னாட்டளவில் ஏற்கப்பட்டது (1949;55), பின்னர் இது "வியட்நாம் குடியரசு (Republic of Vietnam)" ஆக மாறியது (1955;75). இதன் தலைநகரம் சாய்கோன் ஆகும். தென் வியட்நாம் எனும் பெயர் 1954 இல் நடந்த செனிவா மாநாட்டுக்குப் பிறகு பரவலாகப் பயன்படலாயிற்று. இம்மாநாடு வியட்நாமை பொதுவுடைமையை ஏற்கும்/ ஏற்காத இருவகைப் பிரிவுகளாகப் பிரிந்தது.

நிகோ தின் தியேமைத் தலைவராகக் கொண்டு வியட்நாமியக் குடியரசு 1955 அக்தோபர் 26 இல் அறிவிக்கப்பட்டது.[1] இதன் இறையாண்மையை அமெரிக்காவும் 87 நாடுகளும் ஏற்றன. இது பல பன்னாட்டவையின் சிறப்புக் குழுக்களில் உறுப்பினராக விளங்கியது. உருசியா 1957 இல் பன்னாட்டவையின் உறுப்பினராக தன் தன்சிறப்புரிமையைக் கொண்டு மருக்காமல் இருந்திருந்தால் இது பன்னாட்டவையின் உறுப்பினராகி இருக்கும்.[2][3]

தென்வியட்நாமின் தோற்றம் பிரெஞ்சு குடியேற்ரப் பகுதியாக விளங்கிய கொச்சின்சீனாவில் தொடங்குகிறது. இதில் வியட்நாமின் தென்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. இது பிரெஞ்சு இந்தோசீனாவின் ஓர் உட்பிரிவாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஓ சி மின் தலைமையிலான வியட் மின் படை 1945 செப்டம்பரில்கனோயில் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசை நிறுவியதை அறிவித்தது. 1949 இல் பொதுவுடைமை எதிர்ப்பு வியட்நாம் அரசியல்வாதிகள் சாய்கோனில் ஓர் மாற்று எதிர்ப்பு அரசை பேரரசர் பாவோ தாய் தலைமையில் உருவாக்கினர். பாவோ தாய் முதன்மை அமைச்சர் நிகோ தின் தியேமால் நீக்கப்பட்டு முன்னவர் தானே குடியரசின் தலைவர் என வியட்நாம் வாக்கெடுப்பிற்குப் பிறகு அறிவித்துக்கொண்டார் . ஒரு படைக்கிளர்ச்சியில் துவோங் வான் மின்னால் நிகோ தின் தியேம் 1963 இல் கொல்லப்பட்டதும் தொடர்ந்து பல குறுங்காலப் படையாதிக்க அரசுகள் நிலவின. படைத் தளபதி நிகுயேன் வான் தியேயு 1967 முதல் 1975 வரை நாட்டின் தலைமையைத் தாங்கினார். வியட்நாம் போர் 1959 இல் வியட் காங் படை ஆயுதமேந்தி வியட்நாம் மக்களாட்சிக் குடியரசில் கிளர்ச்சியில் ஈடுபட்ட்தும் தொடங்கியது. 1968 இன் தெத் எதிர்ப்பின் பின்னர் போர் உச்சக்கட்ட்த்தை அடைந்தது அப்போது 1.5 மில்லியன் வியட்நாமிய வீrர்ர்களும் 500,000 அமெரிக்க வீர்ர்களும் தென்வியட்நாமில் இருந்தனர். 1973 இல் ஏற்பட்ட பாரிசு அமைதி உடன்படிக்கைக்குப் பிறகும், போர் வடக்கு வியட்நாமும் வியட் காங் படயும் 1975 ஏப்பிரல் 30 இல் சாய்கோனைக் கைப்பற்றி தென்வியட்நாம் அரசை வீழ்த்தும் வரை தொடர்ந்தது.

தலைவர்கள்

[தொகு]
  • 1946–47 பிரெஞ்சு கொச்சின்சீனா தன்னாட்சிக் குடியரசு.

இக்குடியரசு முதல் இந்தோசீனப் போரின் முடிவில் பிரான்சு .வியட்நாமுக்கு விடுதலை வழங்கும் கோரிக்கையை மறுக்கவே இது உருவாக்கப்பட்டது. இந்த அரசி 1947 இல் தற்காலிகத் தென்வியட்நாம் குடியரசு என வியட்நாமை ஒருங்கிணைக்கப் போவதாக்க் கூறிப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. [4]

  • நிகுயே வான் தின் (1946)
  • இலே வான் கோச் (1946-47)
  • நிகுயேன் வான் சுவான் (1947–48)
  • தெற்கு வியட்நாம் 1948–49 தற்காலிக வியட்நாம் நடுவண் அரசு

இந்த "முந்து வியட்நாம்" அரசு ஒருங்கிணைந்த வியட்நாம் அரசை உருவாக்க ஆயத்தம் செய்தது. என்றாலும் கொச்சின் சீனாவின் சட்டக் காரணங்களால் இம்முயற்சி ஓராண்டு காலம் தள்ளிப் போக நேர்ந்தது.

  • நிகுயேன் வான் சுவான் (1948–49)
  • தெற்கு வியட்நாம் 1949–55 வியட்நாம் அரசு. இது பன்னாட்டளவில் 1950 இல் ஏற்கப்பட்டது. உண்மையில் 60% அளவு வியட்நாமின் பரப்பு பொதுவுடைமை வியட் மின் படையால் கட்டுபடுத்தப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் 17 ஆம் வடக்கு இணைவரையில் வடக்கும் தெற்கும் பிரிக்கப்பட்டது.
  • பாவோ தாய் (1949–55). 1945 இல் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
  • தெற்கு வியட்நாம் 1955–75 வியட்நாம் குடியரசு வியட்நாம் போர் (1959–75) தன்னை கனோய்க்கு எதிராக நடத்தியது.
  • நிகோ தின் தியேம் (1955–63). முதலில் அமெரிக்காவால் மிகவும் பெருமையாகப் பேசப்பட்டவர். அமெரிக்கா பின்னணியில் இருந்த கிளர்ச்சியில் பின்னர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
  • நிகுயேன் வான் தியேயு (1965–75). முதல் அமைச்சர் நிகுயேன் சாவோ கை 1965–67 கால இடைவெளியில் உயர்நிலைத் தலைவராக விளங்கியவர்.
  • திரான் வான் கூவோங் (1975).
  • தூவோங் வான் மின் (இரண்டாம் முறை) (1975). மற்றவர்கள் பதவி துறந்தோடியதும் பொதுவுடைமையாளர்களிடம் அடிபணிந்தவர்.
  • 1975–76 தெற்கு வியட்நாம் குடியரசின் தற்காலிகப் புரட்சி அரசு
  • குய்ன் தான் பாத் (1975–76)
புதிதாக உருவாகிய பொதுவுடைமை வடக்கு வியட்நாமில் இருந்து ஏறக்குறைய ஒரு மில்லியன் அகதிகள் விடுதலை நோக்கி இயக்கம் , (அக்தோபர் 1954) இல் நடந்தபோது வெளியேறினர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Konrad G. Bühler (2001). State Succession and Membership in International Organizations: Legal Theories Versus Political Pragmatism. Martinus Nijhoff Publishers. pp. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-411-1553-9.
  2. George S. Prugh (1975). "Application of Geneva Conventions to Prisoners of War". VIETNAM STUDIES : LAW AT WAR: VIETNAM 1964-1973. http://lawofwar.org/. {{cite web}}: External link in |publisher= (help)
  3. Robert C. Doyle (2010). The Enemy in Our Hands: America's Treatment of Enemy Prisoners of War from the Revolution to the War on Terror. University Press of Kentucky. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8131-2589-3.
  4. Philippe Devillers, Histoire du viêt-nam de 1940 à 1952, Seuil, 1952, pp 418-419

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_வியட்நாம்&oldid=3869704" இலிருந்து மீள்விக்கப்பட்டது