செப்டம்பர் 20
Appearance
(20 செப்டம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 20 (September 20) கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 264 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1187 – சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான்.
- 1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது.
- 1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.
- 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
- 1697 – ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா, புனித உரோமைப் பேரரசு இடச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1847 – நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.
- 1854 – கிரிமியப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் ஆல்மா நகரில் இடம்பெற்ற போரில் உருசியரைத் தோற்கடித்தன.
- 1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
- 1878 – தி இந்து முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
- 1893 – அமெரிக்காவில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட பெட்ரோலினால் இயங்கும் தானுந்து சோதிக்கப்பட்டது.
- 1909 – நன்னம்பிக்கை முனை, நட்டால், ஒரேஞ்சு, திரான்சுவால் ஆகிய பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
- 1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
- 1941 – லித்துவேனியாவில் 403 யூதர்கள் (128 ஆண்கள், 176 பெண்கள், 99 குழந்தைகள்) கொல்லப்பட்டனர்.
- 1942 – உக்ரைனில் நாட்சி ஜெர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: கனடாவின் போர்க்கப்பல் ஒன்று ஐசுலாந்தின் தெற்கே தாக்கி அழிக்கப்பட்டதில் 145 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 – மகாத்மா காந்தியும் சவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
- 1946 – போரினால் 7 ஆண்டுகள் நடத்தப்படாதிருந்த கான் திரைப்பட விழா இடம்பெற்றது.
- 1946 – பொது வாக்கெடுப்பு நடைபெற்று ஆறு நாட்களின் பின்னர், டென்மார்க் மன்னர் பத்தாம் கிறித்தியான் பரோயே தீவுகளின் விடுதலைப் பிரடனத்தை ரத்துச் செய்தார்.
- 1955 – சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
- 1977 – வியட்நாம் ஐநாவில் இணைந்தது.
- 1979 – பிரான்சின் ஆதரவுடன் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து முதலாம் பொக்காசா பேரரசர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1984 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 – சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டப்பட்டனர்.
- 1990 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
- 1993 – துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.
- 2001 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" அறிவித்தார்.
- 2003 – மாலைத்தீவுகளில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் வெடித்தது.
- 2017 – சூறாவளி மரியா புவேர்ட்டோ ரிக்கோவைத் தாக்கியதில் 2,975 பேர் உயிரிழந்தனர்.
- 2018 – தன்சானியா, விக்டோரியா ஏரியில் உக்காரா தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 161 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1870 – இரா. இராகவையங்கார், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1946)
- 1908 – ப. ராமமூர்த்தி, இந்திய மார்க்சிய அரசியல்வாதி (இ. 1987)
- 1920 – சி. ஆர். ராவ், இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், புள்ளியியலாளர்
- 1923 – நாகேசுவரராவ், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2014)
- 1940 – டாரோ ஆசோ, சப்பானின் 92வது பிரதமர்
- 1946 – மார்க்கண்டேய கட்சு, இந்திய நீதிபதி, வழக்கறிஞர்
- 1948 – ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், அமெரிக்க எழுத்தாளர்
- 1949 – மகேசு பட், இந்திய இயக்குநர், தயாரிப்பாளர்
- 1952 – மனுவேல் செலாயா, ஒந்துராசின் அரசுத்தலைவர்
- 1971 – மிஷ்கின், தமிழகத் திரைப்பட இயக்குனர்
- 1984 – சௌந்தர்யா ரஜினிகாந்த், தமிழ்த் திரைப்பட வரைகலை வடிவமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர்
- 1991 – ஸ்பென்சர் லோக்கே, அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 1796 – யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியலாளர், கனிமவியலாளர் (பி. 1754)
- 1840 – யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா, பரகுவே அரசியல்வாதி (பி. 1766)
- 1863 – ஜேக்கப் கிரிம், செருமானிய பண்பாட்டு ஆய்வாளர் (இ. 1785)
- 1927 – பர்கதுல்லா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர் (பி. 1854)
- 1928 – நாராயணகுரு, இந்திய ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1855)
- 1933 – அன்னி பெசண்ட், ஆங்கிலேய பிரம்மஞானி, பெண்ணிய செயற்பாட்டாளர் (பி. 1847)
- 1996 – பால் ஏர்டோசு, அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (பி. 1913)
- 1999 – டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1922)
- 2011 – புர்கானுத்தீன் ரப்பானி, ஆப்கானித்தானின் 10வது அரசுத்தலைவர் (பி. 1940)
- 2015 – ஜக்மோகன் டால்மியா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1940)
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 20 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்