விஷ்ணு ஹரி கல்வெட்டு
அயோத்தி பிரச்சினை |
---|
Organizations |
விஷ்ணு ஹரி கல்வெட்டு (Vishnu Hari inscription / Hari-Vishnu inscription) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி மாவட்டத்தின் தலைமையிடமாக அயோத்தி நகரத்தில் இருந்த பாபர் மசூதியின் வளாகத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1992-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்டது. 1992-இல் பாபர் மசூதியின் இடிபாடுகளில் விஷ்ணு ஹரி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு நாகரி எழுத்துருவில் சமசுகிருத மொழியில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டில் சாகேதம் எனும் அயோத்தியை ஆண்ட அனயசந்திர வம்ச மன்னர் கோவிந்தசந்திரன் நிறுவிய கோயில் குறித்த செய்தியினைத் தருகிறது. இக்கல்வெட்டின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. மேலும் இக்கல்வெட்டு பாபர் மசூதி இடிப்பிற்கு பின் வைக்கப்பட்டதாக சர்ச்சைகள் உள்ளது.
கல்வெட்டின் சுருக்கம்
[தொகு]நாகரி எழுத்தில் சமசுகிருத மொழியில் இருபது வரிகள் சுலோகங்கள் கொண்ட இந்த மணற்கல் கல்வெட்டு 1.10 மீ x 0.56 மீ அளவுள்ள மணற்கல்லால் ஆனது. இக்கல்வெட்டு பாபர் மசூதியின் இடிபட்ட சுவரின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.[1][2] [3]இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு வல்லுநர்கள் கே.வி.ரமேஷ் மற்றும் எம்.என்.கட்டி ஆகியோர் இக்கல்வெட்டுகளை மொழிபெயர்த்துள்ளனர். [4] இக்கல்வெட்டு கடவுள் வணக்கத்துடன் தொடங்குகிறது. பின்னர் ஒரு புகழ்பெற்ற வம்சத்தை விவரிக்கிறது. கல்வெட்டின் 6-18 வரிகள் கர்ணன் அல்லது மாமே, சல்லக்ஷனா மற்றும் அல்ஹானா உட்பட வம்சத்தின் உறுப்பினர்களின் வீர வெற்றிகளை விவரிக்கின்றன.[5] சமசுகிருத மொழி அறிஞர் கிஷோர் குனாலின் கூற்றுப்படி, இவர்கள் அனயசந்திரருக்கு முன் சாகேத மண்டலத்தின் ஆளுநராக இருந்த கஹாடவாலாவின் கீழ்ப்படிந்தவர்கள் என்று தோன்றுகிறது.[6] கல்வெட்டின் 19-21 வரிகள் அல்ஹானாவின் வாரிசான அனயச்சந்திராவின் செயல்பாடுகள் மற்றும் அயோத்தியில் விஷ்ணு-ஹரி கோயில் கட்டுவது தொடர்பாக கூறுகிறது. மீதமுள்ள வசனங்கள் அவரது வாரிசான ஆயுஷ்சந்திராவை விவரிக்கின்றன.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Braj Basi Lal 2003, ப. 124.
- ↑ K. M. Shrimali 2002, ப. 614.
- ↑ A. G. Noorani 2003, ப. 131.
- ↑ Pushpa Prasad 2003, ப. 351.
- ↑ Kishore Kunal 2016, ப. 321-326.
- ↑ Kishore Kunal 2016, ப. 328.
- ↑ Kishore Kunal 2016, ப. 326-330.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- A. G. Noorani (2003). The Babri Masjid Question, 1528–2003: 'a Matter of National Honour'. Tulika. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85229-78-2.
- Braj Basi Lal (2003). "The Excavations at Ayodhya". In Robert Layton, Peter G. Stone and Julian Thomas (ed.). Destruction and Conservation of Cultural Property. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-60498-2.
- K. V. Ramesh (archaeologist) (2003). "Ayodhya Vishnu-Hari Temple Inscription". Purātattva (Indian Archaeological Society): 98–104. https://books.google.com/books?id=qNxtAAAAMAAJ.
- Kishore Kunal (2016). "A tale of two edicts (Tretā Ka Ṭhākura and Vishṇu-hari inscriptions)". Ayodhya Revisited. Ocean. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8430-357-5.
- M. G. S. Narayanan (8 August 2014). "A warning from history by MGS Narayanan". India Today. http://indiatoday.intoday.in/story/mgs-narayanan-warning-from-history-romila-thapar/1/376161.html.
- Jahnawi Shekhar Roy (1994), "A Note on Ayodhya inscription", in Lallanji Gopal (ed.), Ayodhyā: History, Archaeology, and Tradition : Papers Presented in the Seminar Held on Feb. 13-15, 1992, All India Kashiraj Trust, pp. 114–
- K. M. Shrimali (2002). "Ayodhya: A Review of the Archaeological Evidence". The Making of History: Essays Presented to Irfan Habib. Anthem. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-038-9.
- Pushpa Prasad (2003). "Three Recently Found Inscriptions at Ayodhya". Proceedings of the Indian History Congress (64th Session Mysore) (Indian History Congress) 64: 348–361. https://books.google.com/books?id=NHQMAQAAMAAJ.
- Irfan Habib (2006), "Medieval Ayodhya (Awadh), Down to The Mughal Occupation", Proceedings of the Indian History Congress, 67: 358–382, JSTOR 44147957
- Ram Sharan Sharma (2003). "The Ayodhya Issue". In Robert Layton, Peter G. Stone and Julian Thomas (ed.). Destruction and Conservation of Cultural Property. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-60498-2.
- Meenakshi Jain (2013), Rama and Ayodhya, New Delhi: Aryan Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173054518