விமலா பாட்டீல்
விமலா பாட்டீல் | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | பத்திரிக்கையாளர், ஆசிரியர் (படைப்பு), எழுத்தாளர், செயல்பாட்டாளர், நிகழ்ச்சி வடிவமைப்பாளர் |
வலைத்தளம் | |
www |
விமலா பாட்டீல் (Vimla Patil) ஓர் இந்தியப் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், ஆர்வலரும், கட்டுரையாளரும், நிகழ்ச்சி வடிவமைப்பாளரும் ஆவார்.
தொழில்
[தொகு]இலண்டனில் இதழியல் படிக்கும் போது, விமலா பாட்டீல் த டெலிகிராப்[1]இல் பகுதிநேரப் பயிற்சியாளராக இருந்தார். பின்னர் தி ஆபிசு மேகசின் என்ற வணிக இதழில் பணியாற்றினார். இந்தியா திரும்பியதும், 1959ஆம் ஆண்டு தி டைம்சு ஆஃப் இந்தியா வெளியீடான பெமினாவில் அதன் தொடக்க வெளியீட்டின் போது பணியில் சேர்ந்தார்.[2]
1989ஆம் ஆண்டு ஒரு சந்தை ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்குப் பிறகு, பெமினாவின் நிர்வாகம், வாசகர்களின் ஆர்வம் குடும்பம் மற்றும் வீட்டிலிருந்து தனிப்பட்ட பராமரிப்புக்கு மாறிவிட்டதாகக் கருதியது. பெமினா இந்தியாவில் இந்திய அழகி நிகழ்ச்சிகளையும் தொடங்கியது.[3] பிரபஞ்ச அழகி, உலக அழகி, பதின்ம இளவரசி, ஆசியா பசிபிக் அழகி உள்ளிட்ட பிற பட்டங்களுக்கு இந்தியப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெமினா கொண்டிருந்தது. 1959 முதல் 1993 வரை பெமினாவின் ஆசிரியரான விமலா பாட்டீல், தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் அழகிப் போட்டியும் பத்திரிகையும் வகிக்க வேண்டிய பங்கை விவரித்தார்: "இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்ததால், பல்வேறு வகையான பெண்கள் இருந்தனர். ஒரு மகாராட்டிரப் பெண் இருந்தார், ஒரு பஞ்சாபிப் பெண் இருந்தார், ஆனால் ஓர் இந்தியப் பெண் என்றால் என்ன என்பதை யாரும் அடையாளம் காணவில்லை என்பது இங்கே ஒரு கேள்விக்குறி இருந்தது. இந்தியப் பெண் யார்? என யாருக்கும் தெரியாது. இந்தத் திரிபுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு துணியை உருவாக்கப் போவது யார்? அதுதான் கேள்வி. அதற்கான பதில் பெமினா மற்றும் இந்திய அழகி." [3]
2011ஆம் ஆண்டில், விம்லா பாட்டீல் "சேதனாவின் அற்புதமான தாலி உணவுகள்-Fabulous Thali Meals By Chetana" இதழின் தொகுப்பாசிரியராக இருந்தார்.[4] இவர் சமூகப் பிரச்சினைகள் குறித்து நியூ வுமன் பத்திரிகையில் "ஈவ்ஸ்ட்ராப்பிங்" என்ற பத்தியில் எழுதினார். பெண்கள் சார்ந்த வலுவான பிரச்சினைகள் குறித்த தனது கருத்துக்களை இவர் வெளிப்படுத்தினார். சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்த தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். மேலும் பெண்கள் தொடர்பான உணர்வுப்பூர்வமான தலைப்புகளில் விவாதங்களை நடத்தினார்.[5]
பதவிகள்
[தொகு]- வாரிய உறுப்பினர்-டைகர் வாட்ச் அரசு சாரா நிறுவனம், இரன்தம்போர்[6]
இறப்பு
[தொகு]விமலா 29 செப்டம்பர் 2024 அன்று இறந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telegraph.co.uk – Telegraph online, Daily Telegraph, Sunday". The Telegraph. Archived from the original on 19 December 2000. Retrieved 8 August 2012.
- ↑ "The Telegraph – Calcutta : Look". The Telegraph. India. 14 November 2004. Archived from the original on 15 November 2004. Retrieved 23 October 2013.
- ↑ 3.0 3.1 Susan Dewey (2008). Making Miss India Miss World. Syracuse University Press. ISBN 978-0-8156-3176-7. Retrieved 23 January 2013.
- ↑ Fabulous Thali Meals By Chetana, Chetana Pvt. Ltd, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85300-60-7
- ↑ "India's No.1 English Women's Monthly Magazine". Newwomanindia.com. Retrieved 24 October 2013.
- ↑ "Tiger India – Wildlife – Ranthambhore – Rajasthan – Ranthambore". Tiger Watch. Retrieved 24 October 2013.
- ↑ "Femina's first Editor, Vimla Patil no more". exchange4media (in ஆங்கிலம்). Retrieved 27 October 2024.
மேலும் படிக்க
[தொகு]- Fritjof Capra (1987). Uncommon Wisdom: Conversations with remarkable people, p. 302–306 & 309 Century Hutchinson Ltd, London.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-654341-3 ஐஎஸ்பிஎன் 0-00-654341-3,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-654341-1 .