உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்தாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுத்தாளர்
தொழில்
செயற்பாட்டுத் துறை இலக்கியம்
விவரம்
தகுதிகள் மொழி புலமை, இலக்கணம், எழுத்தறிவு
தொழிற்புலம் மக்கள் ஊடகம், சமூக ஊடகம்
தொடர்புடைய தொழில்கள்

எழுத்தாளர் (Writer) என்பவர் அவருடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு பல்வேறு வகையான பாணிகளிலும் நுட்பங்களிலும் எழுதப்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் ஒரு நபர் ஆவார். நாவல்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள், நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு வகையான இலக்கியக் கலை வடிவங்களையும் மற்றும் படைப்பாக்க எழுத்துக்களையும் இவர் உருவாக்குகிறார். அத்துடன் பொதுமக்களுக்கு ஆர்வமாக இருக்கும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் செய்தி கட்டுரைகளையும் எழுதுபவராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார். எழுத்தாளர் எழுதும் படைப்புகள் நூல்களாக பல ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. கருத்துக்களை நன்றாக வெளிப்படுத்தும் விதத்தில் மொழியைப் பயன்படுத்தக்கூடிய திறமையான எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பல்வேறு வகையான இலக்கிய வகைகளில் இருந்து தேர்வு செய்கிறார்கள். பெரும்பாலான எழுத்துக்களை மற்றொரு ஊடகத்தில் பயன்படுத்த தழுவிக்கொள்ளலாம்.பெரும்பாலும் ஒரு சமூகத்தின் கலாச்சார உள்ளடக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்கள்[1].

பாடலாசிரியரையும் எழுத்தாளர் என்று சொல்வது போல வேறு கலைகள் பலவற்றிலும் எழுத்தாளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு முழுமையான ஓர் எழுத்தாளர் என்பவர் பொதுவாக எழுதப்பட்ட மொழியில் கலையை உருவாக்குபவரையே குறிக்கிறது. சில எழுத்தாளர்கள் வாய்வழி மரபில் இருந்தும் எழுத்து வேலை செய்கிறார்கள். எழுத்தாளர்களால் கற்பனையான அல்லது கற்பனையற்ற பல வகைகளில் ஒரு படைப்பை உருவாக்க முடியும். பிற எழுத்தாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் கருத்துகளை வெளியிடுகிறார்கள். உதாரணமாக வரைகலை அல்லது விளக்கப்படம் ஆகியவற்றின் மூலம் தங்கள் சிந்தனையை அல்லது கருத்தை சமூகத்தில் பரப்புகிறார்கள். கற்பனை எதுவும் சேர்க்காமல் தொழில்நுட்ப ரீதியாக இயல்பாக அறிவு சார்ந்து எழுதக்கூடிய எழுத்தாளர்களின் சேவை வேண்டி மக்கள் மற்றும் அரசாங்க வாசகர்களால் மற்றொரு சமீபத்திய கோரிக்கை உருவாக்கப்பட்டுள்ளது, இவர்களுடைய படைப்புத் திறமைகள் ஒரு நடைமுறையை அல்லது விஞ்ஞான இயல்பினை புரிந்துகொள்ளக்கூடிய விளக்க ஆவணங்களை உருவாக்குகின்றன. சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் திறனை அதிகரித்துக் கொள்ள படங்கள், ஓவியம், வரைகலை, அல்லது பல்லூடகம் இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அரிதான நிகழ்வுகளில் படைப்பு உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை இசை மற்றும் சொற்கள் வழியாகவும் பரப்ப முடியும் [2].

எழுத்தாளர்கள் தங்களது சொந்த எழுதப்பட்ட படைப்புகளைத் தயாரிப்பதுடன் பெரும்பாலும் அவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள், அதாவது எழுதுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் செயல்முறையைக் குறித்தும் எழுதுகிறார்கள் [3]. ஏன் எழுதுகிறார்கள், எந்த நோக்கத்திற்காக எழுதுகிறார்கள் என்பதையும் எழுதுகிறார்கள் [4]. மற்ற எழுத்தாளர்களின் படைப்பு குறித்த விமர்சனத்தை எழுதுகிறார்கள் [5].

எழுத்தாளர்கள் தொழில் ரீதியாகவோ அல்லது தொழில் அல்லாமல் ஒரு பொழுதுபோக்கிற்காகவோ பணியாற்றுகிறார்கள், அதாவது ஊதியம் பெற்றுக் கொள்ள எழுதுகிறார்கள் அல்லது ஊதியம் பெறாமல் எழுதுகிறார்கள். ஊதியம் எழுதி முடித்த பின்னர் பெற்றுக் கொள்கின்றனர். சில பிரபலமான எழுத்தாளர்கள் முன்கூட்டியே முன்பணமாகவும் ஊதியம் பெறுவதுண்டு. எழுத்தாளர்கள் எழுதுவதை ஊக்குவிக்கும் முக்கிய காரணி பணம் என்பது முற்றிலும் உண்மையாக இருந்தாலும் நடைமுறையில் எத்தனையோ எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புக்காக ஊதியம் பெறுகிறார்களா என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

எழுத்தாளர் என்ற சொல் பெரும்பாலும் படைப்பாளி என்ற சொல்லை ஒத்த பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் பிந்தைய சொல் சற்றே பரந்த பொருளைக் கொண்டுள்ளது மற்றும் அந்த எழுத்தாளர் அநாமதேயமான அறியப்படாத ஒரு நபராக இருந்தாலும் கூட அவரது படைப்பு மீதான சட்டப் பொறுப்பு அவருக்கே உரியது என்பதை தெரிவிக்கப் பயன்படுகிறது.

தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பல்வேறு வகையான இலக்கிய வகைகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்கிறார்கள். பெரும்பாலான எழுத்துக்கள் ஓர் ஊடகத்தில் இருப்பதை தழுவி மற்றொரு ஊடகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வகைகள்

[தொகு]

உதாரணமாக, ஒரு எழுத்தாளரின் படைப்பை தனிப்பட்ட முறையில் படிக்கலாம், மனப்பாடம் செய்யலாம், நாடகமாக நடிக்கலாம், அல்லது திரைப்படமாக்கலாம். நையாண்டியை ஒரு கவிதை, கட்டுரை, திரைப்படம், நகைச்சுவை நாடகம் அல்லது பத்திரிகையின் ஒரு பகுதி என மாற்றி எழுதலாம். எழுத்தாளர் எழுதும் ஒரு கடிதத்தில் விமர்சனம், சுயசரிதை, அல்லது செய்தி ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கியிருக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Magill, Frank N. (1974). Cyclopedia of World Authors. Vol. vols. I, II, III (revised ed.). Englewood Cliffs, New Jersey: Salem Press. pp. 1–1973. {{cite book}}: |volume= has extra text (help) [A compilation of the bibliographies and short biographies of notable authors up to 1974.]
  2. நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் ஒரு உதாரணம்.
  3. Nicolson, Adam (2011). When God Spoke English: The Making of the King James Bible. London: Harper Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-743100-7.
  4. See, for example, Will Blythe, ed. (c. 1998). Why I write: thoughts on the practice of fiction. Boston: Little, Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0316102296.
  5. Jonathan Franzen, for example, criticised John Updike for being "exquisitely preoccupied with his own literary digestive processes ..." and his "lack of interest in the bigger postwar, postmodern, socio-technological picture" Franzen, Jonathan (6 September 2013). "Franzen on Kraus: Footnote 89". The Paris Review (206). https://medium.com/slush-pile/franzen-on-kraus-footnote-89-92335fb9c2e?postPublishedType=initial. பார்த்த நாள்: 11 September 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தாளர்&oldid=3671925" இலிருந்து மீள்விக்கப்பட்டது