ஆசிரியர் (படைப்பு)
சட்டப்பூர்வ உரையாடலில், ஓர் ஆசிரியர் அல்லது படைப்பாளர் (Author) என்பவர் அசல் படைப்பை உருவாக்கியவர், அது எழுதப்பட்ட, வரைகலை அல்லது பதிவுசெய்யப்பட்ட ஊடகமாக இருக்கலாம்.[1] எனவே, ஒரு சிற்பி, ஓவியர் அல்லது இசையமைப்பாளர்ஆகியோர் அந்தந்த சிற்பங்கள், ஓவியங்கள் அல்லது இசையின் படைப்பாளர் ஆவார், பரவலாக ஒரு படைப்பாளர் பெரும்பாலும் ஒரு புத்தகம், கட்டுரை, நாடகம் அல்லது பிற எழுதப்பட்ட படைப்புகளின் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். [2]
பொதுவாக, பதிப்புரிமையின் முதல் உரிமையாளர் படைப்பை உருவாக்கியவர், அதாவது ஆசிரியராவார். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் படைப்பை உருவாக்கினால் அவர்கள் கூட்டுப் படைப்பாளர்களாகக் கருதப்படுகிறார்கள். உலகம் முழுவதும் பதிப்புரிமைச் சட்டங்கள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகம், பதிப்புரிமை என்பது " அமெரிக்காவின் சட்டங்களால் (தலைப்பு 17, யுஎஸ் குறியீடு) படைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான பாதுகாப்பு" என வரையறுக்கிறது. [3][4]
சில படைப்புகள் படைப்பாளர்கள் இல்லாதவையாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2010 களில் குரங்கின் தாமி பதிப்புரிமை சர்ச்சையானது, இயற்கை புகைப்படக் கலைஞரின் உபகரணங்களைப் பயன்படுத்தி கருப்புக் குரங்கு எடுத்த புகைப்படங்களை உள்ளடக்கியது. புகைப்படக்கலைஞர் புகைப்படங்களின் உரிமையைக் கோரினார்,ஆனால் அதை அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகம் நிராகரித்தது: மனிதனால் படைக்கப்பட்ட ஒன்றிற்கு தான் படைப்புரிமை கோர இயலும் எனக் கூறி மறுத்தது.[5] மிக சமீபத்தில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது உரைக்கு படைப்பாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Author". Cornell Law School Legal Information Institute. பார்க்கப்பட்ட நாள் June 18, 2023.
- ↑ "AUTHOR | English Meaning - Cambridge Dictionary".
- ↑ Copyright Office Basics, U.S. Copyright Office, July 2006, archived from the original on 28 March 2008, பார்க்கப்பட்ட நாள் 30 March 2007
- ↑ "U.S.C. Title 17 - COPYRIGHTS". www.govinfo.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
- ↑ "Compendium of U.S. Copyright Office Practices, § 313.2" (PDF). United States Copyright Office. 22 December 2014. p. 22. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
To qualify as a work of 'authorship' a work must be created by a human being. ... Works that do not satisfy this requirement are not copyrightable. The Office will not register works produced by nature, animals, or plants.