உள்ளடக்கத்துக்குச் செல்

வார்டு ஏரி

ஆள்கூறுகள்: 25°34′30″N 91°53′13″E / 25.575°N 91.887°E / 25.575; 91.887
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்டு ஏரி
Ward's Lake, Shillong
வார்டு ஏரி, சில்லாங்
Location of Ward's Lake
Location of Ward's Lake
வார்டு ஏரி
வார்டு ஏரியின் அமைவிடம்
Location of Ward's Lake
Location of Ward's Lake
வார்டு ஏரி
வார்டு ஏரி (இந்தியா)
அமைவிடம்சில்லாங், மேகாலயா, இந்தியா
ஆள்கூறுகள்25°34′30″N 91°53′13″E / 25.575°N 91.887°E / 25.575; 91.887
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
Islands1
குடியேற்றங்கள்சில்லாங்

வார்டு ஏரி (Ward's Lake), பொல்லாக் ஏரி அல்லது நான் போலோக் என உள்நாட்டில் அறியப்படுகிறது. இது இந்தியாவின் மேகாலயாவின் சில்லாங்கில் உள்ள ஒரு செயற்கை ஏரியாகும். நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, சில்லாங்கில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

வரலாறு

[தொகு]
வார்டு ஏரி

அசாமின் அப்போதைய தலைமை ஆணையர் சர் வில்லியம் வார்டு என்பவரால் இந்த ஏரி திட்டமிடப்பட்டது. இது பிட்சுவில்லியம் தாமசு பொல்லாக் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1894-இல் கர்னல் ஹாப்கின்சு என்பவரால் கட்டப்பட்டது.[1] ஏரியைச் சுற்றியுள்ள பகுதி காசி கைதியால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2]

ஏரி

[தொகு]

குதிரை இலாட வடிவிலான ஏரி, ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ் பவனுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஏரியினைச் சுற்றி தாவரவியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்குக் கல் நடைபாதைகளும் நீரூற்றும் உள்ளது.[1] தாவரவியல் பூங்காவில் மற்ற மலர் வகைகளைத் தவிரப் பல பகட்டு மலர்ச் செடிகளும் உள்ளன.[2] ஏரியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஏரியின் நடுவில் உள்ள மரப்பாலம்.[1] இந்த ஏரியில் படகுச் சவாரி வசதியும், அதை ஒட்டி உணவு விடுதியும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Ward's Lake". East Khasi Hills District. Government of Meghalaya. n.d. Retrieved 31 December 2020.
  2. 2.0 2.1 "Ward's Lake Shillong". Tourism of India. n.d. Retrieved 31 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்டு_ஏரி&oldid=4197776" இலிருந்து மீள்விக்கப்பட்டது