சோரா
சோரா
சிரபுஞ்சி | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேகாலயா |
District | East Khasi Hills |
ஏற்றம் | 1,484 m (4,869 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,816 |
• அடர்த்தி | 397/km2 (1,030/sq mi) |
Languages | |
• Official | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
Telephone code | 03637 |
Precipitation | 11,777 மில்லிமீட்டர்கள் (463.7 அங்) |
சோரா (Sohra, முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்று கருதப்பட்டது. எனினும் தற்போதைய ஆய்வுகளின் படி மௌசின்ரம் என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும். அதாவது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. எனினும் அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம் என்றும் அதிகளவான ஒரு வருட மழையைப் பெற்ற இடம் என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 1861ஆம் அண்டின் ஜூலையில் பெற்ற 9,300 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒருமாத மழை வீழ்ச்சியாகும். 1 ஆகஸ்து 1860 தொடக்கம் 31 ஜூலை 1861 வரை பெற்ற 26,461 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும்.
2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1].
19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் "சோரா" என்ற பெயர் மருவி "சிரபுஞ்சி" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புவியியல்
[தொகு]சோரா 25°18′N 91°42′E / 25.30°N 91.70°E என்ற அசச ரேகையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1484 மீட்டர் (4872 அடி) உயரத்தில் உள்ளது
சோரா மேகாலய மாநில காசி (அ) ஹாசி (Khasi) மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது.
காலநிலை
[தொகு]சோராவின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 மி.மீட்டர். சோரா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Cherrapunji (1971–1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 22.8 (73) |
23.6 (74.5) |
27.4 (81.3) |
26.3 (79.3) |
27.2 (81) |
29.1 (84.4) |
28.4 (83.1) |
29.8 (85.6) |
28.4 (83.1) |
26.9 (80.4) |
26.6 (79.9) |
23.4 (74.1) |
29.8 (85.6) |
உயர் சராசரி °C (°F) | 15.7 (60.3) |
17.3 (63.1) |
20.5 (68.9) |
21.7 (71.1) |
22.4 (72.3) |
22.7 (72.9) |
22.0 (71.6) |
22.9 (73.2) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
20.4 (68.7) |
17.0 (62.6) |
20.7 (69.3) |
தாழ் சராசரி °C (°F) | 7.2 (45) |
8.9 (48) |
12.5 (54.5) |
14.5 (58.1) |
16.1 (61) |
17.9 (64.2) |
18.1 (64.6) |
18.2 (64.8) |
17.5 (63.5) |
15.8 (60.4) |
12.3 (54.1) |
8.3 (46.9) |
13.9 (57) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 0.6 (33.1) |
3.0 (37.4) |
4.7 (40.5) |
7.7 (45.9) |
8.3 (46.9) |
11.7 (53.1) |
14.9 (58.8) |
14.7 (58.5) |
13.2 (55.8) |
10.5 (50.9) |
6.3 (43.3) |
2.5 (36.5) |
0.6 (33.1) |
மழைப்பொழிவுmm (inches) | 11 (0.43) |
46 (1.81) |
240 (9.45) |
938 (36.93) |
1214 (47.8) |
2294 (90.31) |
3272 (128.82) |
1760 (69.29) |
1352 (53.23) |
549 (21.61) |
72 (2.83) |
29 (1.14) |
11,777 (463.66) |
% ஈரப்பதம் | 70 | 69 | 70 | 82 | 86 | 92 | 95 | 92 | 90 | 81 | 73 | 72 | 81 |
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) | 1.5 | 3.4 | 8.6 | 19.4 | 22.1 | 25.0 | 29.0 | 26.0 | 21.4 | 9.8 | 2.8 | 1.4 | 170.4 |
Source #1: HKO [2] | |||||||||||||
Source #2: NOAA [3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Famous Cherrapunjee gets new name - Sohra" (in (ஆங்கில மொழியில்)). 2007-08-04. http://www.dnaindia.com/india/report_famous-cherrapunjee-gets-new-name-sohra_1113482. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2009.
- ↑ "Climatological Information for Madras, India". Hong Kong Observatory. Archived from the original on 2011-08-04. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
- ↑ "NOAA". NOAA.