உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் சைவ சமய வலைவாசலின் ஒரு பிரிவான சைவ அடியார் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் சைவ சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சைவ அடியார்களைப் பற்றிய பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு
{{வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு
  |படிமம்        =
  |படிம தலைப்பு =
  |உரை         =
  |இணைப்பு     =
  |முகப்பு        = வலைவாசல்:சைவம்/சைவ அடியார்கள்
}}

காப்பகம்

[தொகு]

1 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/1 காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பெறும் இவரின் இயற்பெயர் புனிதவதி என்பதாகும். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததன் காரணமாகவும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.


2 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/2

கை நரம்புகளில் இசைக்கும் இராவணன்

இராவணன் இலங்கையை ஆண்ட சிறந்த சிவபக்தனாவார். இவர் சாமாகானம் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும், ஓவியம் வரைவதிலும் சிறந்தவராக அறியப்பெறுகிறார். இவர் உமையும், சிவனும் வீற்றிருக்கும் இமயமலையை பெயர்த்தெடுத்தபொழுது, சிவபெருமான் பெருவிரலால் அழுத்த, யாழில் சாமகாணம் இசைத்தார். இசையில் மயங்கிய சிவபெருமான் சந்திரகாசம் எனும் வாளினையும், வாழ்நாட்களையும் அளித்தாக சைவ நூல்கள் கூறுகின்றன. இந்நிகழ்வின் காரணமாக சிவாலயங்களில் கைலாய மலையை சுமந்திருக்கும் இராவணனின் உருவம் சிவ வாகனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை அழியக்கூடாதென தவமியற்றி சிவபெருமானிடமிருந்து ஆத்ம லிங்கத்தினை இராவணன் பெற முயன்ற பொழுது, தேவர்களின் வேண்டுகோளுக்கினங்கி திருமால் இராவணனை ஆத்மலிங்கத்திற்கு பதிலாக பார்வதியை பெறும்படி செய்தார். இதனால் சினம் கொண்ட பார்வதி திருமால் இராமனாக பிறக்கும் பொழுது அவரது மனைவியை இராவணன் கவர்ந்து செல்வான் என்று சாபமளித்தாக நாரத புராணம் கூறுகிறது. மீண்டும் தவமிருந்து ஆத்மலிங்கம் பெற்று இலங்கைக்கு செல்லும் பொழுது, விநாயகர் அதனை தடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இவர் இருபத்தியேழு நூல்களை இயற்றிய தமிழ் நூலாசிரியராகவும் அறியப்பெறுகிறார்.


3 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/3

உமாபதி சிவாச்சாரியார்

உமாபதி சிவாச்சாரியார் என்பவர் சந்தான குரவர்களில் இறுதியானவராவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டனால் தில்லைவாழ் அந்தணர்கள் கோயிலில் பூசை செய்யும் உரிமையை மறுத்தனர். ஆனால் கோயிலில் கொடியேற்ற வெறொரு அந்தணர் முயன்றபொழுது, கொடி ஏறவில்லை. உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை சரணடைந்தனர். உமாபதியாரும் கொடிக்கவி என்ற நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தார்.

அத்துடன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெற்றான் சாம்பனுக்கு முத்தி அளித்தவர். மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவை தவிற சேக்கிழார் புராணம், கோயிற் புராணம் , திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை முதலியவைகளையும் இயற்றியுள்ளார். பௌஷ்கராகமத்துக்கு, வடமொழி நூல்களான பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்பவைகளுக்கு தெளிவுரையும் எழுதியுள்ளார்.


4 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/4

கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார் என்பவர் சைவ சமய சொற்பொழிவாளராவார். இவர் செங்குந்த வீர சைவ மரபில் காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி என்பதாகும். பன்னிரு வயது முதல் சொற்பொழிவு, பத்திரிக்கை, நூல், திரைப்படம் என பல ஊடகங்களில் சைவத்தின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். இயற்தமிழில் மட்டுமல்லாது, இசைத்தமிழிலும் வல்லவர் என்பதால், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாடல்களை இசையோடு பாடி சொற்பொழிவு செய்வார். பெரியபுராணம், சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை என்று பல நூல்களை எழுதியுள்ளார். திருமுருக கிருபானந்த வாரியார் என்றும், அறுபத்துநான்காம் நாயன்மார் என்றும் சைவர்களால் அழைக்கப்பெற்றார்.


5 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/5

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருஞானசம்பந்தமூர்த்தி என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரும், இறைவனான சிவபெருமான் மீது தேவாரப் பாடல்களை பாடியவரும் ஆவார். இவர் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு சீர்காழியில் மகனாகப் பிறந்தார். மூன்றாம் வயதில் தந்தையுடன் கோவிலுக்கு சென்றவர், தந்தை குளிக்க சென்ற பொழுது அவரைக் காணாது, அம்மையே, அப்பனே என்று அழ,. சிவபெருமானுடன் காட்சியளித்த உமையம்மை சம்மந்தருக்கு ஞானப்பால் அளித்தாகவும், வாயில் பாலொழுக நின்ற சம்மந்தரிடம் யார் பால்தந்ததென தந்தை வினவ, தேவாரத்தின் முதல் பாடலான "தோடுடைய செவியன்" என்று சம்மந்தர் பாடியதாக தொன்நம்பிக்கை உள்ளது.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று பாண்டிய நாடு சென்று, கூன்பாண்டியனின் வெப்புநோயை தீர்த்தவர். சமணர்களை அனல் வாதத்திலும்,புனல் வாதத்திலும் வென்றவர். பிள்ளை என்று சைவர்களால் அழைக்கப்பெறுகிறார். இவரின் வரலாறு பெரியபுராணத்தில் 1256 செய்யுட்களால் விவரிக்கப்பட்டுள்ளது.


6 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/6

சேக்கிழார்

சேக்கிழார் சைவநூலான பெரியபுராணத்தின் ஆசிரியராவார். இவர் அருண்மொழி ராம தேவர் என்ற இயற்பெயரோடு குன்றத்தூரில் பிறந்தவர். இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்தவருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புபெயரும் பெற்றார். அம்மன்னன் சமண நூலான சீவக சிந்தாமணியை போற்றுவதை கண்டு சைவநெறியின் மேன்மையை உணர்ந்து வாழ்ந்த அறுபத்து மூன்று சைவர்களின் வாழ்க்கை குறிப்புகள் கொண்ட நூலை இயற்ற எண்ணினார். தில்லை சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க பெரியபுராண காப்பிய நூல் இயற்றப்பட்டது என்பர்.

இவரை தொண்டர் சீர் பரவுவார் என்று குலோத்துங்க சோழன் சிறப்பித்துள்ளார். இவருடைய வரலாற்றினை சேக்கிழார் புராணம் என்று உமாபதி சிவாச்சாரியாரும், சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் எழுதியுள்ளனர்.


7 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/7

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர். காளத்தி மலையில் ஆகமவிதிப்படி சிவ கோசரியார் என்பவர் வழிபாடும் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வணங்கி வந்தார். இதைக்கண்டு சிவ கோசரியார் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் வருகின்ற குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.


8 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/8 மங்கையர்க்கரசியார் என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவராவர். சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். திருஞான சம்மந்தரை திருமறைக்காட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வரவைத்தார். அந்நேரத்தில் பாண்டிய மன்னனை வெப்புநோய் தாக்க, கூன்பாண்டியனானர். அந்நோயை சமணர்களால் குணப்படுத்த இயலாமல் போக, சம்மந்தரிடம் தன் கணவரை பற்றியிருந்த வெப்புநோயை குணமாக்க வேண்டினார் மங்கையர்கரசியார்.. ஞானசம்மந்தர் திருநீர் அளித்து அந்நோயிலிருந்து பாண்டியனை விடுவித்தார். அதனால் பாண்டிய நாட்டில் சமணம் மறைந்து சைவம் தளைத்தது. இதனால் சம்மந்தர் மானி என்ற இயற்பெயர் கொண்டவரை மங்கையற்கரசியார் என்று அழைக்க அப்பெயரே நிலைத்தது.


9 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/9 கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர். இவரது காலம் கங்கைகொண்ட சோளேச்சரம் தோன்றிய காலத்தை அடுத்த 11ஆம் நூற்றாண்டு. தில்லை, திருக்களந்தை, திருக்கீழ்கோட்டூர், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோளேச்சரம், திருப்பூவனம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சுரம், திருவிடை மருதூர் ஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.


10 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/10 கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். சிவத்தொண்டில் காலம் கழித்தவர், சிவனடியாரான செம்பியன் மாதேவி என்பவரை மணந்து கொண்டார். மேலும் சிவன்மேல் கொண்ட பற்றினால் பன்னிரு திருமுறைகளில் இவருடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


11 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/11 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/11

12 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/12 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/12

13 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/13 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/13

14 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/14 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/14

15 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/15 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/15

16 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/16 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/16

17 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/17 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/17

18 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/18 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/18

19 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/19 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/19

20 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/20 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/20


21 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/21 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/21

22 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/22 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/22

23 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/23 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/23

24 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/24 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/24

25 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/25 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/25

26 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/26 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/26

27 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/27 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/27

28 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/28 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/28

29 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/29 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/29

30 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/30 வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/30

பரிந்துரைகள்

[தொகு]