வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/4
Appearance
கிருபானந்த வாரியார் என்பவர் சைவ சமய சொற்பொழிவாளராவார். இவர் செங்குந்த வீர சைவ மரபில் காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்தார். இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி என்பதாகும். பன்னிரு வயது முதல் சொற்பொழிவு, பத்திரிக்கை, நூல், திரைப்படம் என பல ஊடகங்களில் சைவத்தின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். இயற்தமிழில் மட்டுமல்லாது, இசைத்தமிழிலும் வல்லவர் என்பதால், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாடல்களை இசையோடு பாடி சொற்பொழிவு செய்வார். பெரியபுராணம், சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை என்று பல நூல்களை எழுதியுள்ளார். திருமுருக கிருபானந்த வாரியார் என்றும், அறுபத்துநான்காம் நாயன்மார் என்றும் சைவர்களால் அழைக்கப்பெற்றார்.