உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமாபதி சிவாச்சாரியார்

உமாபதி சிவாச்சாரியார் என்பவர் சந்தான குரவர்களில் இறுதியானவராவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டனால் தில்லைவாழ் அந்தணர்கள் கோயிலில் பூசை செய்யும் உரிமையை மறுத்தனர். ஆனால் கோயிலில் கொடியேற்ற வெறொரு அந்தணர் முயன்றபொழுது, கொடி ஏறவில்லை. உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை சரணடைந்தனர். உமாபதியாரும் கொடிக்கவி என்ற நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தார்.

அத்துடன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெற்றான் சாம்பனுக்கு முத்தி அளித்தவர். மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவை தவிற சேக்கிழார் புராணம், கோயிற் புராணம் , திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை முதலியவைகளையும் இயற்றியுள்ளார். பௌஷ்கராகமத்துக்கு, வடமொழி நூல்களான பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்பவைகளுக்கு தெளிவுரையும் எழுதியுள்ளார்.