உள்ளடக்கத்துக்குச் செல்

வராக ஆறு (விழுப்புரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வராகநதி (விழுப்புரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வராக ஆறு, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓடும் முக்கிய ஆறு ஆகும். பாலாறு ஆற்றுப்படுகைக்கும் பெண்ணையாறு ஆற்றுப்படுகைக்கும் நடுவில் அமைந்துள்ளது வராக ஆற்றுப்படுகை.[1] அன்னமங்கலம், நரியாறு, தொண்டியாறு, பம்பையாறு, பம்பை ஓடை, செங்கை ஓடை போன்றவை இதன் துணையாறுகளாகும். இந்த ஆறு 78.50 கி.மீ நீளமும் 1936.75 கி.மீ2 நீர்ப்பிடிப்புப் பகுதியும் கொண்டது.[2]

அணைகள்[தொகு]

வராக ஆற்றிற்கும் தொண்டியாற்றிற்கும் இடையே 4,511 மீட்டர் நீளமும் 605 அடி3 கொள்ளளவும் கொண்ட வீடூர் அணை உள்ளது.[3] இவ்வணையின் மூலம் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 3,200 ஏக்கர் பாசம் வசதி பெறப்படுகிறது.


இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineral Exploration-S. Rajendran, K. Srinivasamoorthy, S. Aravindan, Annamalai University
  2. "ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (IAMWARM)" (PDF). Archived from the original (PDF) on 2010-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக_ஆறு_(விழுப்புரம்)&oldid=3570893" இலிருந்து மீள்விக்கப்பட்டது