லோதி தோட்டங்கள்
லோடி தோட்டங்கள் | |
---|---|
லோடி தோட்டத்தில் அமைந்துள்ள பாரா கல்லறை | |
வகை | பொதுப் பூங்கா |
அமைவிடம் | புது தில்லி, இந்தியா |
ஆள்கூறு | |
பரப்பளவு | 90 ஏக்கர்கள் (360,000 m2) |
நிலை | வருடம் முழுவதும் திறந்திருக்கும் |
லோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லியில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரபூங்காவாகும்.[1] இது முகமது ஷா கல்லறை, சிகந்தர் லோடி கல்லறை, ஷிஷா கல்லறை மற்றும் பாரா கல்லறை ஆகிவற்றைக் கொண்டுள்ளது.[2] இது 15 ஆம் நூற்றாண்டில் லோதி வம்சத்தினரால் கட்டப்பட்ட கட்டடக்கலை ஆகும். லோதி வம்சத்தினர் வட இந்தியா, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (தற்போதைய பாக்கிஸ்தான்) ஆகிய பகுதிகளை 1451 முதல் 1526 வரை ஆண்டு வந்துள்ளனர். இது தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) மூலமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.[1] இந்த லோதி தோட்டம் கான் சந்தை மற்றும் சஃப்தார்ஜங்கின் கல்லறைக்கு இடையே அமைந்துள்ளன. தில்லி மக்கள் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வர். மேலும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி ஆர்வலர்களிடம் இது பிரபலமாக உள்ளது]]
வரலாறு
[தொகு]சைய்த் வம்ச ஆட்சியாளர்களின் இரண்டாவது கடைசி அரசன் முகம்மது ஷாவின் கல்லறையே மிகவும் பழையக்கல்லறையாகும், இது, 1444 ஆம் ஆண்டில் முகமது ஷாவுக்கு அஞ்சலி செலுத்த அலா-உத்-தின் ஆலம் ஷாவால் கட்டப்பட்டது. இந்தியாவில் எஞ்சியிருக்கும் இந்த இரண்டு கால கட்டங்களின் கட்டிடக்கலைகள் சிறிய கட்டிடக்கலையாக இருப்பதால், லோடி தோட்டங்கள் ஒரு முக்கிய இடமாக உள்ளது. தோட்டங்களில் உள்ள ஆரம்பகால கல்லறையான முகம்மது ஷாவின் கல்லறையை சாலையில் இருந்து பார்க்க முடிகிறது.
முகம்மது ஷாவின் கல்லறையைப் போன்றே சிக்நந்தர் லோடியின் மற்றொரு கல்லறையும் தோட்டங்களில் உள்ளது. இது தனது தந்தையின் நினைவாக அவரது மகன் இப்ராகிம் லோடியால் 1517 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவர் லோடி வம்சத்தைச் சேர்ந்த டில்லி சுல்தான்களில் கடைசி சுல்தானாக இருந்தார். பாபரால் 1526இல் நடத்தப்பட்ட, முதலாம் பானிபட் போரில், இப்ராகிம் லோடி தோற்கடிக்கப்பட்ட்டர். இது முகலாய சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்தது.
15 ஆம் நூற்றாண்டின் சய்யித் மற்றும் லோடி வம்சத்தினருக்குப் பின்னர் , நினைவுச்சின்னங்களை சுற்றி இரண்டு கிராமங்கள் வளர்ந்தன, ஆனால் 1936 இல் தோட்டங்களை உருவாக்க கிராமவாசிகள் இடம் மாற்றப்பட்டனர். பிரித்தானிய அரசின் போது இந்தியாவின் தலைமை ஆளுநர் வில்லிங்டன் பிரபு என்பவரின் மனைவியான லேடி வில்லிங்டன், என்பாரின் பெயரால் லேடி வில்லிங்டன் பார்க் என அழைக்கப்பட்டது, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி இது திறக்கப்பட்டது. 1947இல் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர், அதன் தற்போதைய லோடி தோட்டங்கள் என்றப் பெயரால் அழைக்கப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ASI have included the remaining unprotected monuments of Lodhi Garden under the Delhi Circle protection umbrella". தி இந்து. 16 October 2002 இம் மூலத்தில் இருந்து 2 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090802215938/http://www.hinduonnet.com/2002/10/16/stories/2002101608260400.htm.
- ↑ "Heritage walk marks 75th anniversary of Lodhi Garden". Archived from the original on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
மேலும் படிக்க
[தொகு]- Sunday at the Lodi Gardens, by Vinay Dharwadker. Published by Viking, 1994.
- Lalkot to Lodi Gardens: (Delhi of Sultans), by Ranjit Sinha. Published by South Asia Books, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7167-237-X
வெளி இணைப்புகள்
[தொகு]- Lodi Gardens at wikimapia