உள்ளடக்கத்துக்குச் செல்

லெவர்ன் காக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெவர்ன் காக்ஸ்
பிறப்பு29 மே 1972 (அகவை 52)
மொபைல்
படித்த இடங்கள்
  • Alabama School of Fine Arts
  • Fashion Institute of Technology
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட நடிகர்
விருதுகள்GLAAD Stephen F. Kolzak Award
இணையம்http://www.lavernecox.com

லெவர்ன் காக்ஸ் (மே 29,1972) (Laverne Cox) என்பவர் தொலைக் காட்சித் தொடர்களிலும் திரைப் படங்களிலும் நடித்து வரும் அமெரிக்க திருநங்கை ஆவார். ஆவணப் படங்களும் தயாரித்து வருகிறார். திருநங்கைகளின் உரிமைகளுக்காக எழுதியும் பேசியும் வருபவர். 2004 ஆம் ஆண்டில் 'டைம்' இதழ் தம் முகப்பு அட்டையில் இவர் படத்தைப் போட்டுக் கட்டுரை எழுதி சிறப்பித்தது.[1][2][3]

இளமைக் காலம்

[தொகு]

அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் மொபைல் என்னும் ஊரில் குளோரியா என்னும் மணமாகாத தாய்க்கு லெவர்ன் காக்ஸ் மகனாகப் பிறந்தார். அதே மகப் பேற்றில் மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு லாமா என்று பெயர் சூட்டினார் தாய் குளோரியா. லெவர்ன் காகஸ் ஆணாகப் பிறந்தபோதிலும் பெண்ணுக்குரிய இயல்புகள் அவரிடம் இருந்தன. சக மாணவர்கள் இவரைக் கிண்டலும் கேலியும் செய்து அடித்துத் துன்புறுத்தினர். அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயன்றார் இருப்பினும் தாயின் அறிவுரை, ஆறுதல் மொழிகள் இவரைக் காப்பாற்றின. இளம் அகவையிலேயே நடனம் கற்றுக் கொண்டார் . பிர்மிங்காமில் உள்ள அலபாமா நுண்கலைப் பள்ளியில் லெவர்ன் காக்ஸ் தம் 14 ஆம் வயதில் சேர்ந்தார்.

பணிகள்

[தொகு]

2003 ஆம் ஆண்டில் டாட்டர் ஆப் அரேபியா என்னும் படத்தில் பாலினத் தொழிலாளியாகக் காக்ஸ் நடித்தார். நெட்பிலிக்சு என்னும் இணையதளம் உருவாக்கிய 'தி ஆரஞ்ச் ஈஸ் தி நியூ பிலாக்' என்னும் நகைச்சுவைத் தொடரில் 'சோபியா' என்னும் திருநங்கை கதைப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இதன் மூலம் இவர் பெயர் அமெரிக்கா முழுதும் பரவியது. திருநங்கைகள் பற்றிய இழிவான கருத்துகள் மறைந்து 'அவர்களும் சக மனிதர்களே' என்ற எண்ணம் வேரூன்றத் தொடங்கியது. திருநங்கைகள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் கொடுமைகளையும் வன் செயல்களையும் விவரிக்கும் தி டி வர்ட் (The T Word) என்னும் ஆவணப் படத்தைத் தயாரித்தார். காக்ஸ் இப்போது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திருநங்கைகள் பற்றிய மக்களின் தவறான எண்ணங்களை மாற்றப் பரப்புரை செய்து வருகிறார்.

விருதுகள்

[தொகு]
  • வன்முறைக்கு எதிராகத் துணிந்தவர் விருது (2013)
  • கிளாமர் இதழின் ஆண்டின் சிறந்த பெண் விருது (2014)
  • தி கார்டியன் இதழின் ஆற்றல் வாய்ந்த திருநங்கையர் விருது (2014)
  • பீப்பிள் இதழ் தேர்ந்தெடுத்த அழகான பெண்கள் பட்டியலில் இடம் (2015)
  • டைம் இதழின் 100 செல்வாக்கு மிகுந்தோர் பட்டியலில் இடம் (2015)

மேற்கோள்

[தொகு]

http://imfromdriftwood.com/black-community-spotlight-laverne-cox/

http://www.buzzfeed.com/mylestanzer/laverne-cox-is-on-the-cover-of-time-magazine#.slwwDo6mg

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gardner, Chris (2019-08-23). "Laverne Cox Explains Why She Wants to "Share" Her Historic Third Emmy Nomination". The Hollywood Reporter. Archived from the original on April 29, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-29.
  2. Spaner, Whitney (15 June 2014). "Trans Actress-Activist Laverne Cox Talks "OITNB", Dream Roles and Starting a Casting Revolution on Stage and Screen". Playbill. Archived from the original on April 29, 2022. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
  3. "Laverne Cox Bio". LaverneCox.com. Archived from the original on 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 13 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவர்ன்_காக்ஸ்&oldid=4102724" இலிருந்து மீள்விக்கப்பட்டது