மையப் பூங்கா
மையப் பூங்கா | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பூங்காவின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஆலெட் இயற்கை உய்வகமும் குளமும் | |||||||||||||||
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Location map United States Manhattan.png" does not exist. | |||||||||||||||
வகை | நகரியப் பூங்கா | ||||||||||||||
அமைவிடம் | மன்ஹாட்டன், நியூயார்க் நகரம் | ||||||||||||||
ஆள்கூறு | 40°46′56″N 73°57′55″W / 40.78222°N 73.96528°W | ||||||||||||||
பரப்பளவு | 843 ஏக்கர்கள் (3.41 km2)[1] | ||||||||||||||
உருவாக்கம் | 1857 | ||||||||||||||
உரிமையாளர் | நியூயார்க் நகர பூங்காக்கள் மற்றும் மனமகிழ்த் துறை]] | ||||||||||||||
இயக்குபவர் | மையப் பூங்கா துப்புரவு | ||||||||||||||
வருகையாளர்கள் | ஆண்டுக்கு ஏறத்தாழ 37.5 மில்லியன்[2][3] | ||||||||||||||
நிலை | ஆண்டின் அனைத்து நாட்களும் | ||||||||||||||
|
மையப் பூங்கா (Central Park) ஐக்கிய அமெரிக்க நியூயார்க் மாநிலத்தில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரியப் பூங்கா ஆகும். இதன் நிலப்பரப்பு 843 ஏக்கரா (341 எக்டேர்) ஆகும்[1]. மேல் மேற்கு பகுதிக்கும் மேல் கிழக்குப் பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இதனைச் சுற்றி கிழக்கில் ஐந்தாம் நிழற்சாலையும் (பிஃப்த் அவென்யூ), மேற்கில் மையப் பூங்கா மேற்கு எனப்படும் எட்டாம் நிழற்சாலையும் (எய்த் அவென்யூ), தெற்கில் மையப் பூங்கா தெற்கு எனப்படும் 59ஆம் சாலையும், வடக்கில் மையப் பூங்கா வடக்கு எனப்படும் 110வது சாலையும் உள்ளன[கு 1] தெற்கு வடக்காக 2.5 மைல்கள் (4 கிமீ) நீளமும் கிழக்கு மேற்காக 0.5 மைல்கள் (0.8 கிமீ) அகலமும் உள்ளது. இப்பூங்காவில் ஏரிகள், கோட்டை, பெருநகர கலை அருங்காட்சியகம், மையப் பூங்கா விலங்குக் காட்சிச்சாலை ஆகியன உள்ளன.[5]ஐக்கிய அமெரிக்காவில் மிகுந்த வருகையாளர்களைப் பெறும் நகரியப் பூங்காவாக மையப் பூங்கா விளங்குகின்றது. 2013ஆம் ஆண்டில் 40 மில்லியன் பேர் வருகை புரிந்துள்ளனர். உலகில் மிகுந்த திரைப்பட ஒளிப்பிடிப்புகள் இடம்பெற்ற இடமாகவும் உள்ளது.
இந்தப் பூங்கா 1857இல் 778 ஏக்கர்கள் (315 எக்டேர்) நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. 1858இல் இந்தப் பூங்காவை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நடைபெற்ற போட்டி ஒன்றில் நிலத்தோற்ற வடிவமைப்பாளர் பிரடெரிக் லா ஓல்ம்சுடெட்டும் கட்டிடவடிவியலாளர் கேல்வர்ட் வாக்சும் வெற்றி பெற்றனர். தங்களது திட்டத்திற்கு "கிரீன்சுவர்டு திட்டம்" எனப் பெயரிட்டிருந்தனர். அதே ஆண்டு கட்டிடவேலைத் தொடங்கியது; பூங்காவின் முதல் பகுதி பொதுமக்களுக்கு 1858ஆம் ஆண்டு குளிர்காலத்தில் திறந்துவிடப்பட்டது. 1860களில் உள்நாட்டுப் போரின்போது பூங்காவின் வடக்குப் பகுதியில் கட்டமைக்கப்பட்டு பூங்கா விரிவுபடுத்தப்பட்டது. 1873இல் தற்போதிருக்கும் பரப்பளவில் பூங்கா திறக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சரியத் தொடங்கிய பூங்கா பராமரிப்பை சரிசெய்ய இராபர்ட் மோசசு தூய்மைப்படுத்தும் திட்டமொன்றைக் கொணர்ந்தார். மற்றுமொரு சரிவிற்குப் பின்னர் 1980இல் இதனை நிரந்தரமாக பராமரிக்க மையப் பூங்கா துப்புரவு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1980களிலும் 1990களிலும் இது பூங்காவின் பல பகுதிகளை புதுப்பித்தது. 2.5 miles (4 km)
மன்காட்டனின் மையப்பகுதியில் உள்ள மையப் பூங்கா (படத்தைப் பெரிதாக்க ஒவ்வொரு படத்தையும் வலச்சொடக்கிடுக). இதன் எல்லைக்கள் 59வது முதல் 110வது சாலை, எட்டாம் அவென்யூவிலிருந்து ஐந்தாம் அவென்யூ வரை. (தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு). |
1963இல் மையப் பூங்காவை தேசிய வரலாற்று அடையாளமாக ஐக்கிய அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.[6] ஏப்ரல் 2017இல் இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கவுள்ள ஆய்நிலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[7] இந்தப் பூங்காவின் பராமரிப்பு துவக்கத்தில் நியூயார்க் நகர பூங்காக்கள் மற்றும் மனமகிழ் துறையின் கீழ் இருந்து வந்தது. தற்போது பொது-தனியார் பங்கேற்பு மையப் பூங்கா துப்புரவு நிறுவனம் நகராட்சியின் ஒப்பந்ததாரராக பராமரித்து வருகிறது. 843 ஏக்கரா பூங்காவின் அடிப்படைப் பராமரிப்பிற்கான பொறுப்பேற்றுள்ள இந்த நிறுவனம் இலாபநோக்கற்ற நிறுவனமாகும்; மையப் பூங்காவின் பராமரிப்பிற்கான ஆண்டுச் செலவு மதிப்பீட்டான $65 மில்லியனில் 75 விழுக்காட்டை வழங்குகிறது.
வரலாறு
[தொகு]1855இல் நியூயார்க் நகரத்தில் 1821இல் இருந்ததை விட மக்கள்தொகை நான்கு மடங்காக உயர்ந்தது. நகரம் பெரியதானதும் கீழ் மன்காட்டனில் பூங்கா இல்லாத குறை உணரப்பட்டது. மேல் மன்காட்டனில் ஓர் பூங்கா திட்டமிடப்பட்டிருந்தது.[8] முன்னதாக 1853இல் நியூயார்க் மாநில அரசு 59ஆம் சாலைக்கும் 106வது சாலைக்கும் இடைப்பட்ட 700-ஏக்கர் (280 எக்டேர்) நிலத்தை பூங்கா அமைக்க வழங்கியிருந்தது. இந்த நிலம் மட்டுமே அமெரிக்க டாலர் 5 மில்லியனுக்கு நிகரானது.[9][10][11]
1857இல் பூங்கா திறக்கப்பட்டது. 1858இல் இந்தப் பூங்காவை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நடைபெற்ற போட்டி ஒன்றில் நிலத்தோற்ற வடிவமைப்பாளர் பிரடெரிக் லா ஓல்ம்சுடெட்டும் கட்டிடவடிவியலாளர் கேல்வர்ட் வாக்சும் வெற்றி பெற்றனர். கட்டமைப்பு 1873இல் நிறைவடைந்தது. பூங்காவில் பாறைகள், மண், தாவரங்கள் வடிவமைப்பிற்கேற்ப அமைக்கப்பட்டன.[12] பூங்கா பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.[13] பின்னர் பூங்கா விரிவுபடுத்தப்பட்டது.
மையப் பூங்கா துப்புரவு
[தொகு]இந்தப் பூங்காவை மையப்பூங்கா துப்புரவு நிறுவனம் பராமரிக்கிறது. அரசுடனான ஓர் ஒப்பந்தத்தின்படி இவர்கள் பராமரிக்கின்றனர்.
இந்த நிறுவனம் 250 ஏக்கர் புல்வெளிகள், 21,500 மரங்கள், 150 ஏக்கரா ஏரிகளும் ஓடைகளும் மற்றும் 130 ஏக்கரா வனப்பகுதியை பராமரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதன் ஊழியர்கள் புதிய செடிகளையும் தாவரங்களையும் மரங்களையும் நடுகின்றனர். இங்குள்ள 9,000 இருக்கைகள், 26 போர்க்களங்கள், 36 பாலங்கள், 21 விளையாட்டுத் திடல்களை துப்புரவாகவும் நல்நிலையிலும் பராமரிக்கிறது. இந்தப் பூங்காவில் 55 சிற்பங்களும் நினைவுச்சின்னங்களும் உள்ளன. மையப் பூங்காவில் அவ்வப்போது கிறுக்கப்படும் சுவரெழுத்துகளை நீக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு சேகரிக்கப்படும் குப்பையின் அளவு 2,000 டன்களுக்கும் கூடுதலாகும் !
இந்த நிறுவனத்தின் தலைவர்களாக நான்கு பேர் இருந்துள்ளனர். 1878இல் முதன்முதலில் இந்த நிறுவன உருவாக்கத்தில் பங்கேற்றவர் எலிசபெத் பார்லோ ரோஜர்சு ஆகும். அவர் 1996 வரை தலைவராக நீடித்தார். 2003 முதல் டக்ளசு பிளான்சுக்கி தலைவராக உள்ளார்.[14]
குறிப்புகள்
[தொகு]- ↑ நியூயார்க் நகரம் வடக்கிலிருந்து தெற்காக (நெடுகோடுகளாக) நிழற்சாலைகளையும் கிழக்கிலிருந்து மேற்காக (கிடைகோடுகளாக) சாலைகளையும் பின்னலாக கொண்டுள்ளது; இவற்றிற்கு எண்கள் கிழக்கிலிருந்து மேற்காகவும் தெற்கிலிருந்து வடக்காகவும் ஏறுமுகமாகத் தரப்பட்டுள்ளன. சில புகழ்பெற்ற சாலைகளுக்கு சிறப்புப் பெயர்கள் தரப்பட்டுள்ளன, காட்டாக பார்க் அவென்யூ; சாலைகள் கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளன.இரண்டு அடுத்தடுத்த நிழற்சாலைகளுக்கும் இரண்டு சாலைகளுக்கும் இடையே உள்ள பகுதி பிளாக் எனக் குறிப்பிடப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "About Us". Central Park Conservancy. 2014. Archived from the original on மார்ச் 26, 2014. பார்க்கப்பட்ட நாள் March 25, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "World's Most-Visited Tourist Attractions". Travel + Leisure by various contributors. October 2011 இம் மூலத்தில் இருந்து மார்ச் 26, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140326000647/http://www.centralparknyc.org/about/about-cpc/. பார்த்த நாள்: January 13, 2012.
- ↑ "No. 2 Central Park, New York City". Travel + Leisure. October 2011. http://www.travelandleisure.com/articles/worlds-most-visited-tourist-attractions/3. பார்த்த நாள்: January 13, 2012.
- ↑ "National Register Information System". National Register of Historic Places. National Park Service. January 23, 2007.
- ↑ "Things to do in Central Park".
- ↑ https://npgallery.nps.gov/AssetDetail/NRIS/66000538
- ↑ Central Park, UNESCO tentative list
- ↑ Todd, John Emerson Todd (1982). Frederick Law Olmsted (see the history of Green-Wood Cemetery). Boston: Twayne Publishers: Twayne's World Leader Series. p. 73.
- ↑ "The Great Park Debate - 1850". CentralParkHistory.com. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
- ↑ "Taking the Land - 1850". CentralParkHistory.com. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
- ↑ Andrew S. Dolkart. "The Architecture and Development of New York City". Archived from the original on டிசம்பர் 5, 2008. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Rosenzweig, Roy; Blackmar, Elizabeth (1992). The Park and the People: A History of Central Park. p. 150.
- ↑ "The History of Central Park". Sarah Waxman. பார்க்கப்பட்ட நாள் October 20, 2014.
- ↑ Nurturing the People Who Help Central Park. Joseph Berger, The New York Times, November 11, 2004.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (நியூயார்க் நகர பூங்காக்கள் மற்றும் மனமகிழ்வுத் துறை)
- அதிகாரப்பூர்வ இணையதளம் (மையப்பூங்கா துப்புரவு)
- "மையப் பூங்கா காவல் கோட்டம்". NYC.gov.
- "Central Park". National Historic Landmarks Program. Archived from the original on அக்டோபர் 13, 2007.