உள்ளடக்கத்துக்குச் செல்

மன்ஹாட்டன்

ஆள்கூறுகள்: 40°42′46″N 74°00′21″W / 40.7127°N 74.0059°W / 40.7127; -74.0059
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்ஹாட்டன்
நியூயார்க் மாவட்டம்
பரோ, மாவட்டம்
முன்புறத்தில் மன்ஹாட்டன் நடுநகரம், உலகின் மிகப்பெரிய மைய வணிகப் பகுதி, பின்னணியில், கீழ் மன்ஹாட்டனும் அதன் நிதி மாவட்டமும்
முன்புறத்தில் மன்ஹாட்டன் நடுநகரம், உலகின் மிகப்பெரிய மைய வணிகப் பகுதி, பின்னணியில், கீழ் மன்ஹாட்டனும் அதன் நிதி மாவட்டமும்
மன்ஹாட்டன்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மன்ஹாட்டன்
சின்னம்
அடைபெயர்(கள்): நகரம்
Map
நியூயார்க்கில் மன்ஹாட்டன்
நியூயார்க்கில் மன்ஹாட்டன்
மன்ஹாட்டன் is located in New York City
மன்ஹாட்டன்
மன்ஹாட்டன்
மன்ஹாட்டன் is located in New York
மன்ஹாட்டன்
மன்ஹாட்டன்
மன்ஹாட்டன் is located in the United States
மன்ஹாட்டன்
மன்ஹாட்டன்
மன்ஹாட்டன் is located in புவி
மன்ஹாட்டன்
மன்ஹாட்டன்
புவியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 40°42′46″N 74°00′21″W / 40.7127°N 74.0059°W / 40.7127; -74.0059
நாடு United States
மாநிலம் நியூ யோர்க் மாநிலம்
கவுண்டிநியூயார்க் கவுண்டி
நகரம்நியூயார்க்கு நகரம்
குடியேற்றம்1624; 401 ஆண்டுகளுக்கு முன்னர் (1624)
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்33.59 sq mi (87.0 km2)
 • நிலம்22.83 sq mi (59.1 km2)
 • நீர்10.76 sq mi (27.9 km2)  32%
Dimensions
 • நீளம்13 mi (21 km)
 • அகலம்2.3 mi (3.7 km)
உயர் புள்ளி265 ft (81 m)
மக்கள்தொகை
 (2020)[3]
 • மொத்தம்16,94,250
 • மதிப்பீடு 
(2023)[3]
15,97,451
 • அடர்த்தி74,781.6/sq mi (28,873.3/km2)
இனங்கள்மன்ஹாட்டனைட்[4]
மொ.உ.உ
 • மொத்தம்$885.652 பில்லியன் (2022)
நேர வலயம்ஒசநே−05:00 (கிநேவ)
 • கோடை (பசேநே)ஒசநே−04:00 (EDT)
சிப் குறியீடு
100xx, 101xx, 102xx
பகுதிக் குறியீடு212/646/332, 917
இணையதளம்manhattanbp.nyc.gov

மன்ஹாட்டன் (Manhattan) என்பது நியூயார்க்கு நகரத்தின் ஐந்து பெருநகரங்களில் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டதும், புவியியல் ரீதியாக மிகச் சிறிய பரப்பளவு கொண்டதும் ஆகும். நியூயார்க் மாவட்டத்துடன் இணையாக அமைந்துள்ள மன்ஹாட்டன், அமெரிக்க மாநிலமான நியூயார்க்கில் பரப்பளவில் மிகச்சிறிய மாவட்டமாகும். மாநிலத்தின் தெற்கு முனைக்கு அருகிலுள்ள மன்ஹாட்டன் தீவில் கிட்டத்தட்ட முழுமையாக அமைந்துள்ள மன்ஹாட்டன், வடகிழக்கு பெருநகரத்தின் மையமாகவும், நியூயார்க் பெருநகரப் பகுதியின் நகர்ப்புற மையமாகவும் உள்ளது. [6] மன்ஹாட்டன் நியூயார்க் நகரத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. மேலும் உலகின் பண்பாட்டு, நிதி, ஊடகம், பொழுதுபோக்கு ஆகியவற்றின் தலைநகராக விவரிக்கப்படுகிறது. [7] [8]

இன்றைய மன்ஹாட்டன் முதலில் லெனேப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. [9] 1624 ஆம் ஆண்டு டச்சு குடியேற்றவாசிகள் மன்ஹாட்டன் தீவில் ஒரு வர்த்தக குடியேற்றத்தை நிறுவியதன் மூலம் இல்கு ஐரோப்பிய குடியேற்றம் தொடங்கியது; இந்தக் குடியேற்றத்துக்கு 1626 ஆம் ஆண்டில் நியூ ஆம்ஸ்டர்டாம் என்று பெயரிடப்பட்டது. 1664 ஆம் ஆண்டில் இந்தப் பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, மேலும் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் தனது சகோதரர் இரண்டாம் யேம்சுக்கு நிலங்களை வழங்கிய பிறகு நியூயார்க் என பெயர் மாற்றப்பட்டது. [10] இன்றைய லோயர் மன்ஹாட்டனை தளமாகக் கொண்ட நியூயார்க், 1785 முதல் 1790 வரை அமெரிக்காவின் தலைநகராக செயல்பட்டது. [11] நியூயார்க் துறைமுகத்தில் உள்ள சுதந்திர தேவி சிலை, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல இலட்சக் கணக்கான குடியேறிகளை வரவேற்றது, மேலும் இது அமெரிக்கா மற்றும் அதன் கொள்கைகளின் உலக அடையாளமாக உள்ளது. [12] 1898 ஆம் ஆண்டு நியூயார்க் நகரம் ஒருங்கிணைக்கப்பட்டபோது மன்ஹாட்டன் ஒரு பெருநகரமாக மாறியது, மேலும் நகர அரசாங்கத்தின் தலைமை இடமான நியூயார்க் நகர மண்டபத்தையும் கொண்டுள்ளது. 1920களில் அப்பர் மன்ஹாட்டனில் உள்ள ஹார்லெம், இப்போது கலாச்சார ஹார்லெம் மறுமலர்ச்சி என்று அழைக்கப்படும் இடத்தின் மையமாக மாறியது. ஸ்டோன்வால் தேசிய நினைவுச்சின்னத்தின் ஒரு பகுதியான கிரீன்விச் கிராமத்தில் உள்ள ஸ்டோன்வால் விடுதி, 1969 ஆம் ஆண்டு நவீன ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள் இயக்கத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது வானவில் நண்பர்களின் பண்பாட்டில் மன்ஹாட்டனின் மையப் பங்கை உறுதிப்படுத்துகிறது. [13] [14] மன்ஹாட்டன் தான் அசல் உலக வர்த்தக மையத்தின் தளமாகும். இது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களின் போது அழிக்கப்பட்டது .

உலகின் மிகப்பெரிய இயற்கை துறைமுகங்களில் ஒன்று அமைந்துள்ள இந்தப் பெருநகரமானது அட்சன் ஆறு, கிழக்கு ஆறு, ஹார்லெம் ஆறு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. மேலும் ரூஸ்வெல்ட், யூ தாண்ட், ராண்டால்ஸ் மற்றும் வார்ட்ஸ் தீவுகள் உள்ளிட்ட அருகிலுள்ள பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. மன்ஹாட்டன் தீவு லோயர் மன்ஹாட்டன், மிட் டவுன் அப்பர் மன்ஹாட்டன் என மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மன்ஹாட்டன் உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட இடங்களில் ஒன்றாகும், 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,694,250 மக்கள் 22.66 சதுர மைல்கள் (58.69 km2) , [15] பரப்பளவில் வாழ்கின்றனர். மேலும் இதன் குடியிருப்புகளின் விலை அமெரிக்காவில் பிற பகுதிகளைவிட ஒரு சதுர அடி அளவில் அதிக விலையைக் கொண்டுள்ளது. [16]

மன்ஹாட்டனில் வால் ஸ்ட்ரீட்டும், உலகின் இரண்டு பெரிய பங்குச் சந்தைகளான நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கும் அமைந்துள்ளன. கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், நியூயார்க் நகர பல்கலைக்கழகம் போன்ற ஏராளமான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும், பல பன்னாட்டு ஊடக நிறுவனங்களும் மன்ஹாட்டனில் அமைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மன்ஹாட்டனின் மிட் டவுன் பகுதியில் உள்ள டர்டில் பே பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதிகம் பேரால் பார்வையிடப்படும் 10 சுற்றுலா தலங்களில் மூன்று தலங்களான டைம்ஸ் சதுக்கம், மையப் பூங்கா, கிராண்ட் சென்ட்ரல் முனையம் ஆகியவை மன்ஹாட்டனில் உள்ளன. [17] நியூயார்க் பென் தொடருந்து நிலையம் மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து மையமாகும். மேற்கு அரைக்கோளத்தில் சீன மக்கள் அதிகம் வசிக்கும் சைனாடவுன் இங்குதான் உள்ளது. [18] உலகின் மிகவும் விலையுயர்ந்த வணிகத் தெருவாக ஐந்தாவது அவென்யூ தரவரிசைப்படுத்தப்பட்டது. அது 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்குச் சென்றது. [19] இந்தப் பெருநகரப் பகுதியில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், கிரைஸ்லர் கட்டிடம், 1 உலக வர்த்தக மையம் உள்ளிட்ட பல வானளாவிய கட்டிடங்கள் முதன்மையான பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளன. [20] இது தேசிய கூடைப்பந்து சங்கத்தின் நியூயார்க் நிக்ஸ், தேசிய ஹாக்கி லீக்கின் நியூயார்க் ரேஞ்சர்ஸ் ஆகியவற்றின் அமைவிடமாக உள்ளது.

வரலாறு

[தொகு]

லெனேப் குடியிருப்பு

[தொகு]

வரலாற்று ரீதியாக மன்ஹாட்டன், முன்சி, லெனேப், [21] வாப்பிங்கர் ஆகியப் பழங்குடியினர் வசிக்கும் லெனேப்ஹோக்கிங் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சபோஹானிகன், நெக்டான்க், கோனாண்டே கோங் உள்ளிட்ட பல லெனேப் குடியிருப்புகள் இப்பகுதியில் இருந்தன. அவை தொடர்ச்சியான பாதைகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. தீவின் முதன்மைப் பாதை, பின்னர் பிராட்வேயாக மாறியது, இப்போது வடக்கில் இன்வுட் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து தெற்கில் உள்ள பேட்டரி பூங்கா வரை அது சென்றது. மன்ஹாட்டன் முழுவதும் லெனேப் மக்களின் மீன் பிடித்தல், நடவு செய்தல் ஆகியவற்றிற்கான பல்வேறு தளங்கள் நிறுவப்பட்டன. [9]

காலனித்துவ காலம்

[தொகு]

1524 ஏப்ரலில், பிரான்சின் முதலாம் பிரான்சிசுக்காக பணி செய்யும் பொருட்டு பயணம் செய்த புளோரன்சு நில ஆய்வாளர் ஜியோவானி டா வெர்ராசானோ, தற்போது நியூயார்க் நகரமாக மாறுயுள்ளப் பகுதியைப் பார்வையிட்டு ஆவணப்படுத்திய முதல் ஐரோப்பியராவார். வெர்ராசானோ, தற்போது தி நாரோஸ் என்று அழைக்கப்படும் ஏற்ற இறக்கம் கொண்ட நீரிணையில் நுழைந்து, அப்பர் நியூயார்க் துறைமுகத்தைச் சுற்றியுள்ள நிலத்திற்கு, மன்னர் முதலாம் பிரான்சிஸின் குடும்பப் பெயரைக் குறிப்பிடும் வகையில், நியூ அங்கோலேம் என்று பெயரிட்டார்; அவர் துறைமுகத்திற்குள் போதுமான தொலைவு பயணித்து அட்சன் ஆற்றைக் கண்டார். மேலும் அவர் இப்போது அப்பர் நியூயார்க் விரிகுடா என்று அழைக்கப்படும் விரிகுடாவுக்கு - மன்னரின் அக்களான மார்குரைட் டி நவரேவின் நினைவாக சாண்டா மார்கரிட்டா விரிகுடா என்று பெயரிட்டார். [22]

மன்ஹாட்டனின் வரைபடமானது முதன்முதலில் 1609 ஆம் ஆண்டு என்றி அட்சனின் பயணத்தின் போது வரையப்பட்டது. [23] ஹட்சன் மன்ஹாட்டன் தீவையும் அங்கு வசிக்கும் பூர்வ குடிமக்களையும் கடந்து, பின்னர் அவரது பெயரால் தற்போது அழைக்கபடும் அட்சன் ஆற்றைக் கடந்து சென்றார். பயணத்தில் உடன் இருந்த ஒரு அதிகாரியான ராபர்ட் ஜூயட்டின் பயணக் குறிப்பேட்டில், மன்ஹாட்டன் முதன்முதலில் மன்னா-ஹட்டா என்று எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. [24]

1624 ஆம் ஆண்டு கவர்னர்ஸ் தீவில் இடச்சு உரோம வர்த்தகக் குடியேற்றம் நிறுவப்பட்டதன் மூலம், நியூ நெதர்லாந்தில் ஒரு நிரந்தர ஐரோப்பியர் இருப்பிடம் தொடங்கப்பட்டது. 1625 ஆம் ஆண்டில், மன்ஹாட்டன் தீவில் உள்ள ஃபோர்ட் ஆம்ஸ்டர்டாம் கோட்டையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, பின்னர் இது நியூ ஆம்ஸ்டர்டாம் ( நியூவ் ஆம்ஸ்டர்டாம் ) என்று அழைக்கப்பட்டது. இது தற்போதைய லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உள்ளது. [25] ஆம்ஸ்டர்டாம் கோட்டை கட்டப்பட்டது நியூயார்க் நகரத்தின் பிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [26] 1647 ஆம் ஆண்டில், பீட்டர் ஸ்டுய்வேசன்ட் காலனியின் டச்சு இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவரே அதன் கடைசி டச்சு இயக்குநராவார். நியூ ஆம்ஸ்டர்டாம் 2, பிப்ரவரி, 1653 அன்று முறையாக ஒரு நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. 1664 ஆம் ஆண்டில், ஆங்கிலப் படைகள் நியூ நெதர்லாந்தை கைப்பற்றி, வருங்கால மன்னர் இரண்டாம் ஜேம்ஸ், ஆங்கில யார்க் மற்றும் அல்பானி டியூக்கின் நினைவாக அதற்கு "நியூயார்க்" என்ற புதிய பெயரை இட்டனர். 1673 ஆகத்தில், டச்சுக்காரர்கள் காலனியை மீண்டும் கைப்பற்றி, அதற்கு "நியூ ஆரஞ்சு" என்று பெயர் மாற்றினர். ஆனால் மூன்றாம் ஆங்கிலோ-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெஸ்ட்மின்ஸ்டர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் அடுத்த ஆண்டு அதை நிரந்தரமாக இங்கிலாந்துக்குத் திருப்பிக் கொடுத்தனர். [27]

புவியியல்

[தொகு]

ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் கூற்றின்படி, நியூயார்க் கவுண்டியின் (மாவட்டம்) மொத்த பரப்பளவு 33.6 சதுர மைல்கள் (87 km2) , இதில் 22.8 சதுர மைல்கள் (59 km2) நிலமாகவும், 10.8 சதுர மைல்கள் (28 km2) (32%) நீர் நிலையாகவும் உள்ளது. அப்பர் மன்ஹாட்டனின் வடக்குப் பகுதி ஒரு புவியியல் துருத்துநிலவடிவமாக உள்ளது. மன்ஹாட்டன் தீவு 22.7 சதுர மைல்கள் (59 km2) பரப்பளவில், 13.4 மைல்கள் (21.6 km) நீளமும் 2.3 மைல்கள் (3.7 km) அகலம் கொண்டுள்ளது.

இந்தப் பெருநகரப் பகுதி முதன்மையாக மன்ஹாட்டன் தீவு, மார்பிள் ஹில்லின் சுற்றுப்புறம் மற்றும் கிழக்கு ஆற்றில் உள்ள ரேண்டால்ஸ் தீவு மற்றும் வார்ட்ஸ் தீவு, ரூஸ்வெல்ட் தீவு உள்ளிட்ட பல சிறிய தீவுகள்; மற்றும் நியூயார்க் துறைமுகத்தில் தெற்கே உள்ள கவர்னர்ஸ் தீவு மற்றும் லிபர்ட்டி தீவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [28]

காலநிலை

[தொகு]
இலையுதிர் காலத்தில் மையப் பூங்கா

கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ், நியூயார்க் நகரம் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை ( Cfa ) மற்றும் ஈரப்பதமான கண்ட காலநிலை ( Dfa ) இரண்டையும் கொண்டுள்ளது; [29] இது வட அமெரிக்க கண்டத்தின் வடக்கு திசையில் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்ட முக்கிய நகரமாகும். இந்த நகரம் ஆண்டில் சராசரியாக 234 நாட்கள் ஆண்டுதோறும் ஓரளவு சூரிய ஒளியுடன் இருக்கும்.

இப்பகுதியின் குளிரான மாதமான சனவரி மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை 32.6 °F (0.3 °C) ஆகும். ; குளிர்காலத்தில் வெப்பநிலை பொதுவாக 10 °F (−12 °C) ஆகக் குறையும் , [30] மேலும் குளிர்கால மாநங்களில் பல நாட்கள் 60 °F (16 °C) வெப்பநிலை எட்டும். வசந்த காலமும் இலையுதிர் காலமும் கணிக்க முடியாதவை, குளிராகவோ அல்லது வெப்பமாகவோ இருக்கலாம், இருப்பினும் அவை பொதுவாக லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். கோடைக்காலம் பொதுவாக வெப்பமும், ஈரப்பதமும் நிறைந்ததாக இருக்கும், ஜூலை மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை 76.5 °F (24.7 °C) இருக்கும். கோடைக் கால இரவு நேர வெப்பநிலை பெரும்பாலும் நகர்ப்புற வெப்பத்தீவு நிகழ்வால் மோசமாக இருக்கும். பகலில் உறிஞ்சப்படும் வெப்பம் இரவில் மீண்டும் வெளியாவதால் இவ்வாறு நேர்கிறது. இதனால் காற்று அதிகமாக வீசாதபோது வெப்பநிலை 7 °F (4 °C) வரை அதிகரிக்கிறது. [31] ஒவ்வொரு கோடையிலும் சராசரியாக 17 நாட்களில் பகல்நேர வெப்பநிலை 90 °F (32 °C) ஐ விட அதிகமாக இருக்கும். சில ஆண்டுகளில் 100 °F (38 °C) விட அதிகமாகும். [32]

மன்ஹாட்டன் ஆண்டுதோறும் 49.9 அங்குலங்கள் (1,270 mm) மழைப்பொழிவைப் பெறுகிறது. 1981 முதல் 2010 வரையிலான குளிர்காலத்தில் சராசரி பனிப்பொழிவு 25.8 அங்குலங்கள் (66 cm) ; இருந்தது. இது ஆண்டுதோறும் கணிசமாக மாறுபடும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், நியூயார்க் (பெல்வெடெரே கோட்டையகம், மையப் பூங்கா), 1991–2020 normals,[a] extremes 1869–present[b]
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °F (°C) 72
(22.2)
78
(25.6)
86
(30)
96
(35.6)
99
(37.2)
101
(38.3)
106
(41.1)
104
(40)
102
(38.9)
94
(34.4)
84
(28.9)
75
(23.9)
106
(41.1)
உயர் சராசரி °F (°C) 39.5
(4.17)
42.2
(5.67)
49.9
(9.94)
61.8
(16.56)
71.4
(21.89)
79.7
(26.5)
84.9
(29.39)
83.3
(28.5)
76.2
(24.56)
64.5
(18.06)
54.0
(12.22)
44.3
(6.83)
62.6
(17)
தினசரி சராசரி °F (°C) 33.7
(0.94)
35.9
(2.17)
42.8
(6)
53.7
(12.06)
63.2
(17.33)
72.0
(22.22)
77.5
(25.28)
76.1
(24.5)
69.2
(20.67)
57.9
(14.39)
48.0
(8.89)
39.1
(3.94)
55.8
(13.22)
தாழ் சராசரி °F (°C) 27.9
(-2.28)
29.5
(-1.39)
35.8
(2.11)
45.5
(7.5)
55.0
(12.78)
64.4
(18)
70.1
(21.17)
68.9
(20.5)
62.3
(16.83)
51.4
(10.78)
42.0
(5.56)
33.8
(1)
48.9
(9.39)
பதியப்பட்ட தாழ் °F (°C) −6
(-21.1)
−15
(-26.1)
3
(-16.1)
12
(-11.1)
32
(0)
44
(6.7)
52
(11.1)
50
(10)
39
(3.9)
28
(-2.2)
5
(-15)
−13
(-25)
−15
(−26.1)
பொழிவு inches (mm) 3.64
(92.5)
3.19
(81)
4.29
(109)
4.09
(103.9)
3.96
(100.6)
4.54
(115.3)
4.60
(116.8)
4.56
(115.8)
4.31
(109.5)
4.38
(111.3)
3.58
(90.9)
4.38
(111.3)
49.52
(1,257.8)
பனிப்பொழிவு inches (cm) 8.8
(22.4)
10.1
(25.7)
5.0
(12.7)
0.4
(1)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.1
(0.3)
0.5
(1.3)
4.9
(12.4)
29.8
(75.7)
ஈரப்பதம் 61.5 60.2 58.5 55.3 62.7 65.2 64.2 66.0 67.8 65.6 64.6 64.1 63.0
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 in) 10.8 10.0 11.1 11.4 11.5 11.2 10.5 10.0 8.8 9.5 9.2 11.4 125.4
சராசரி பனிபொழி நாட்கள்(≥ 0.1 in) 3.7 3.2 2.0 0.2 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.2 2.1 11.4
சூரியஒளி நேரம் 162.7 163.1 212.5 225.6 256.6 257.3 268.2 268.2 219.3 211.2 151.0 139.0 2,534.7
Source #1: NOAA[34][35][36]
Source #2: Weather Atlas[37]

குறிப்புகள்

[தொகு]
  1. Mean monthly maxima and minima (i.e. the expected highest and lowest temperature readings at any point during the year or given month) calculated based on data at said location from 1991 to 2020.
  2. Official weather observations for Central Park were conducted at the Arsenal at Fifth Avenue and 64th Street from 1869 to 1919, and at Belvedere Castle since 1919.[33]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2010 Census Gazetteer Files: New York County Subdivisions பரணிடப்பட்டது சூன் 16, 2019 at the வந்தவழி இயந்திரம், ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed June 19, 2017.
  2. Manhattan High Point
  3. 3.0 3.1 QuickFacts New York; New York city, New York; New York County, New York, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed January 5, 2024.
  4. Moynihan, Colin. "F.Y.I." பரணிடப்பட்டது ஏப்ரல் 17, 2020 at the வந்தவழி இயந்திரம், த நியூயார்க் டைம்ஸ், September 19, 1999. Accessed December 17, 2019. "There are well-known names for inhabitants of four boroughs: Manhattanites, Brooklynites, Bronxites and Staten Islanders. But what are residents of Queens called?"
  5. "Gross Domestic Product by County and Metropolitan Area", fred.stlouisfed.org
  6. "World Urban Areas" (PDF). Demographia. April 2018. Retrieved April 27, 2018.
  7. "A Nation challenged: in New York; New York Carries On, but Test of Its Grit Has Just Begun" பரணிடப்பட்டது மார்ச் 24, 2020 at the வந்தவழி இயந்திரம், த நியூயார்க் டைம்ஸ், October 11, 2001. Accessed November 20, 2016. "A roaring void has been created in the financial center of the world."
  8. Dawn Ennis (May 24, 2017). "ABC will broadcast New York's pride parade live for the first time". LGBTQ Nation. Archived from the original on July 28, 2017. Retrieved June 4, 2017.
  9. 9.0 9.1 Burrows, Edwin G.; Wallace, Mike (1998). Gotham : a history of New York City to 1898. Mike Wallace. Oxford: Oxford University Press. pp. 6–7. ISBN 978-0-585-36462-9. கணினி நூலகம் 47011419.
  10. "KINGSTON Discover 300 Years of New York History DUTCH COLONIES". National Park Service, U.S. Department of the Interior. Archived from the original on November 23, 2008. Retrieved April 7, 2018.
  11. "The Nine Capitals of the United States". ஐக்கிய அமெரிக்க மூப்பவை. Archived from the original on March 20, 2016. Retrieved April 7, 2018.
  12. "Statue of Liberty". World Heritage. UNESCO World Heritage Centre 1992–2011. Archived from the original on August 28, 2012. Retrieved April 7, 2018.
  13. "Workforce Diversity The Stonewall Inn, National Historic Landmark National Register Number: 99000562". National Park Service. Retrieved January 25, 2025.
  14. "Obama inaugural speech references Stonewall gay-rights riots". Archived from the original on May 30, 2013. Retrieved July 28, 2014.
  15. "2020 Census Urban Areas Facts (2020)". United States Census Bureau. Retrieved January 12, 2024.
  16. Manhattan, NY Homes for Sale பரணிடப்பட்டது ஆகத்து 15, 2018 at the வந்தவழி இயந்திரம், Redfin. Accessed January 31, 2018.
  17. Ann Shields (November 10, 2014). "The World's 50 Most Visited Tourist Attractions – No. 3: Times Square, New York City – Annual Visitors: 50,000,000". Travel+Lesiure. Archived from the original on July 21, 2015. Retrieved July 12, 2015. No. 3 Times Square, ... No. 4 (tie) Central Park, ... No. 10 Grand Central Terminal, New York City
  18. Waxman, Sarah. "The History of New York's Chinatown". Mediabridge Infosystems. Retrieved January 12, 2024. Manhattan's Chinatown, the largest Chinatown in the United States and the site of the largest concentration of Chinese in the Western Hemisphere, is located on the Lower East Side.
  19. "New York's Fifth Avenue Retains its Top Ranking as the World's Most Expensive Retail Destination". Cushman & Wakefield. November 20, 2023. Retrieved July 31, 2024.
  20. "Buildings in New York City". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on July 17, 2011. Retrieved June 8, 2011.
  21. Magazine, Smithsonian. "The True Native New Yorkers Can Never Truly Reclaim Their Homeland". Smithsonian Magazine. Retrieved June 29, 2022.
  22. R. J. Knecht: Renaissance Warrior and Patron: The Reign of Francis I; p. 372. Cambridge University Press (1996) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-57885-X
  23. Rankin, Rebecca B.; Cleveland Rodgers (1948). New York: the World's Capital City, Its Development and Contributions to Progress. Harper.
  24. Juet, Robert (2006) [1625]. "Juet's Journal of Hudson's 1609 Voyage, from the 1625 Edition of Purchas His Pilgrimes". The New York Times. Translated by Brea Barthel. p. 16. Archived from the original on July 3, 2016. Retrieved May 11, 2020.
  25. GovIsland Park-to-Tolerance: through Broad Awareness and Conscious Vigilance பரணிடப்பட்டது ஆகத்து 24, 2019 at the வந்தவழி இயந்திரம், Tolerance Park. Accessed November 20, 2016. See Legislative Resolutions Senate No. 5476 and Assembly No. 2708.
  26. City Seal and Flag பரணிடப்பட்டது ஏப்ரல் 28, 2015 at the வந்தவழி இயந்திரம், New York City. Accessed November 20, 2016. "Date: Beneath the horizontal laurel branch the date 1625, being the year of the establishment of New Amsterdam."
  27. Scheltema, Gajus and Westerhuijs, Heleen (eds.),Exploring Historic Dutch New York. Museum of the City of New York/Dover Publications, New York (2011). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-48637-6
  28. New York City Administrative Code Section 2-202 Division into boroughs and boundaries thereof – Division Into Boroughs And Boundaries Thereof. பரணிடப்பட்டது சனவரி 4, 2018 at the வந்தவழி இயந்திரம், Justia. Accessed November 20, 2016. "The borough of Manhattan shall consist of the territory known as New York county, which shall contain all that part of the city and state, including that portion of land commonly known as Marble Hill and included within the county of New York and borough of Manhattan for all purposes pursuant to chapter nine hundred thirty-nine of the laws of nineteen hundred eighty-four and further including the islands called Manhattan Island, Governor's Island, Bedloe's Island, Ellis Island, Franklin D. Roosevelt Island, Randall's Island and Oyster Island..."
  29. Peel, M.C.; Finlayson, B.L. "World Map of Köppen-Geiger climate classification". The University of Melbourne. Archived from the original on January 13, 2015. Retrieved June 27, 2020.
  30. "The Climate of New York". New York State Climate Office. Archived from the original on April 12, 2008. Retrieved July 6, 2012.
  31. "Keeping New York City 'Cool' Is The Job Of NASA's 'Heat Seekers'" பரணிடப்பட்டது அக்டோபர் 1, 2019 at the வந்தவழி இயந்திரம், NASA, January 30, 2006. Accessed November 20, 2016. "The urban heat island occurrence is particularly pronounced during summer heat waves and at night when wind speeds are low and sea breezes are light. During these times, New York City's air temperatures can rise 7.2 °F (4.0 °C) higher than in surrounding areas."
  32. "2023 USDA Plant Hardiness Zone Map | USDA Plant Hardiness Zone Map". planthardiness.ars.usda.gov. Retrieved August 28, 2024.
  33. Belvedere Castle, New York City Department of Parks and Recreation. Accessed January 5, 2024. "This changed in 1919 when the United States Weather Bureau moved the Central Park Observatory to the castle. Until that time, weather measurements were taken from the Arsenal at Fifth Avenue and 64th Street where Dr. Daniel Draper founded a meteorological observatory in 1869. The Weather Bureau took over the operation in 1911, and moved it here eight years later, enclosing the castle and altering the turret's shape to accommodate their scientific instruments. "
  34. "NowData – NOAA Online Weather Data". National Oceanic and Atmospheric Administration. Archived from the original on May 27, 2015. Retrieved May 4, 2021.
  35. "Summary of Monthly Normals 1991–2020". National Oceanic and Atmospheric Administration. Archived from the original on May 4, 2021. Retrieved May 4, 2021.
  36. "New York Central Park, NY Climate Normals 1961−1990". National Oceanic and Atmospheric Administration. Retrieved July 18, 2020.
  37. "New York, New York, USA - Monthly weather forecast and Climate data". Weather Atlas. Retrieved July 4, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்ஹாட்டன்&oldid=4236564" இலிருந்து மீள்விக்கப்பட்டது