உள்ளடக்கத்துக்குச் செல்

மேல் நடு இதழ்விரி உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் நடு இதழ்விரி உயிர்
ɨ
அ.ஒ.அ எண்317
குறியேற்றம்
உள்பொருள் (decimal)ɨ
ஒருங்குறி (hex)U+0268
X-SAMPA1
கிர்சென்பவும்i"
ஒலி

 
பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் •  ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

மேல் நடு இதழ்விரி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. இதை, உயர் நடு இதழ்விரி உயிர், மூடிய நடு இதழ்விரி உயிர் ஆகிய பெயர்களாலும் அழைப்பது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் மூடிய நடு இதழ்விரி உயிர் என்னும் பெயரே பயன்படுகிறது. எனினும் பெருமளவிலான மொழியியலாளர்கள் மூடிய என்ற பயன்பாட்டுக்குப் பதிலாக மேல் அல்லது உயர் என்ற சொற்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிக்கான அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு ɨ என்பது. இது, i மீது ஒரு சிறிய கிடைக்கோட்டை இட்டுப் பெறப்படுகிறது. இவ்வொலியையும், அதன் குறியீட்டையும் கோடிட்ட-ஐ (barred-i) என்பர்.

ஒலிப்பிறப்பு இயல்புகள்

[தொகு]
  • நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) மேலண்ணத்தை அண்டி, வாய்க்குள் மேல் நிலையில் இருக்கும். இன்னொரு வகையில் சொல்வதானால், தாடை மேலெழுந்து ஓரளவு மூடிய நிலையில் இருக்கும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
  • கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப்பகுதியில் அமையும். அதாவது முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் இடையில் அமைந்திருக்கும்.
  • இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்விரி நிலையாகும். அதாவது இதழ்கள் குவியாமல் விரிந்த நிலையில் இருக்கும்.

பயன்பாடு

[தொகு]

இந்திய-ஐரோப்பியம், திராவிடம் போன்ற மொழிக் குடும்பங்களில் /ɨ / ஒரு ஒலியனாகக் காணப்படுவது மிகவும் அரிது. ஆனால், அமெரிக்கத் தாயக மக்களின் மொழிகளில் தனியான ஒரு ஒலியனாக இது பொதுவாகப் பயன்படுகிறது. தற்காலத்தனவும், மீட்டுருவாக்கியனவுமான இத்தகைய மொழிகள் பலவற்றில், இவ்வொலிக்கு நெருங்கிய /i/, /u/ போன்ற உயிரொலிகளுடன் ஒலிப்பியல் அடிப்படையிலான வேறுபாட்டையும் இவ்வொலியன் கொண்டுள்ளது. கவுஃப்மன் கம்பெல், இசுட்டாக் சிமித் என்போர் எழுதிய நூலொன்றில், இந்த ஒலியன் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் ஒரு பொது அம்சமாக விளங்குவதை எடுத்துக் காட்டியுள்ளனர்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. Campbell, Kaufman & Smith-Stark (1986)

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_நடு_இதழ்விரி_உயிர்&oldid=2744931" இலிருந்து மீள்விக்கப்பட்டது