இடை முன் இதழ்விரி உயிர்
இடை முன் இதழ்விரி உயிர் | |
---|---|
e̞ | |
அ.ஒ.அ எண் | 302 430 |
குறியேற்றம் | |
உள்பொருள் (decimal) | e̞ |
ஒருங்குறி (hex) | U+0065 U+031E |
X-SAMPA | e_o |
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
இடை முன் இதழ்விரி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. மேல்-இடையுயிருக்கும் [e], கீழ்-இடையுயிருக்கும் [ɛ], இடையில் சரியாக இந்த இடை முன் இதழ்விரி உயிர் ஒலியைக் குறிப்பதற்கு அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீடு கிடையாது. எந்த ஒரு மொழியிலும் மேற் குறிப்பிட்ட மூன்று ஒலிகளையும் வேறுபடுத்துவது இல்லை என்பதே இதற்கான காரணம். சில மொழியியலாளர்கள், குறிப்பாக சீனவியலாளர், ஒலிகளை அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடுகளில் எழுதும்போது, இவ்வொலிக்கு [E] என்னும் குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர். இல்லாவிட்டால், [e̞] அல்லது [ɛ̝] போல ஏற்கனவே உள்ள குறியீடுகளுடன் கூடுதலான குறிகளைச் சேர்த்து எழுதுகின்றனர்.[1][2][3]
எசுப்பானியம், சப்பானியம், கொரிய மொழி, கிரேக்கம், துருக்கியம் போன்ற பல மொழிகளில் மேலிடை, கீழிடை உயிர்களிலிருந்தும் ஒலிப்பியல் அடிப்படையில் வேறுபட்ட இடை-முன் இதழ்விரி உயிர்கள் உள்ளன. ஆங்கிலத்தின் கிளைமொழிகள் பலவற்றிலும் இந்த உயிரொலி காணப்படுகின்றது.
ஒலிப்பிறப்பு இயல்புகள்
[தொகு]- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.
- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் முன் பகுதியில் அமையும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்விரி நிலையாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bishop, N. (1996). A preliminary description of Kensiw (Maniq) phonology. Mon-Khmer Studies 25.
- ↑ Labov, William; Ash, Sharon; Boberg, Charles (15 July 1997). "A National Map of the Regional Dialects of American English". Department of Linguistics, University of Pennsylvania. பார்க்கப்பட்ட நாள் March 7, 2013.
- ↑ Reeks Nederlandse Dialectatlassen Zuid-Drente en Noord-Overijssel 1982. H. Entjes.