மேலுயிர்
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
மேலுயிர் என்பது, சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. நாக்கு வாயின் மேற்பகுதிக்கு, கூடிய அளவு அண்மையாக இருக்கும் நிலையிலும், தடை ஏற்படுத்தாமலும் ஒலிக்கப்படும் உயிரொலிகள் இந்த வகையைச் சார்ந்தன. தடை ஏற்படும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மேலுயிர் என்பதற்கு ஈடாக உயருயிர், மூடுயிர் போன்ற சொற்களும் தமிழில் பயன்படுகின்றன.
இவ்வுயிர்களை ஒலிக்கும்போது ஒப்பீட்டளவில் நாக்கு மேல் நிலையில் இருப்பதாலேயே இது மேலுயிர் எனப் பெயர் பெறுகிறது. இது அமெரிக்க மொழியியலாளரிடையே பரவலாகப் பயன்படும் high vowel என்பதன் தமிழாக்கம். உயருயிர் என்பதும் இதே சொல்லின் தமிழாக்கமே.அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதைக் குறிக்க close vowel என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுகிறது. இதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக மூடுயிர் என்பது. இது ஒலிப்பின்போது வாயின் நிலையைக் குறிப்பது. குறைந்த அளவு திறந்த நிலையில் வாயிருக்க ஒலிக்கும் உயிர்கள் மூடுயிர்கள். இரண்டு சொற்களுமே தமிழ் மொழியியல் நூல்களில் பயன்படுவதைக் காணலாம்.
அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, பின்வரும் ஆறு மேலுயிர்களைக் குறிப்பிடுகிறது:
- மேல் முன் இதழ்விரி உயிர் [i]
- மேல் முன் இதழ்குவி உயிர் [y]
- மேல் நடு இதழ்விரி உயிர் [ɨ]
- மேல் நடு இதழ்குவி உயிர் [ʉ]
- மேல் பின் இதழ்விரி உயிர் [ɯ]
- மேல் பின் இதழ்குவி உயிர் [u]
குறிப்பிட்ட மொழியொன்றின் ஒலியியல் தன்மையைப் பொறுத்து, நடுவுயிர்களை ஒலிக்கும் போதுள்ள நாக்கின் நிலைக்கு மேல் இருக்கும்போது உள்ள எல்லா உயிர் ஒலிப்புக்களையும் மேலுயிரொலி என்றே அழைப்பது உண்டு. அதாவது, மேலிடை உயிர்கள், கீழ்-மேல் உயிர்கள், மேலுயிர்கள் அனைத்தையுமே மேலுயிர்கள் என்ற சொல்லாலேயே குறிப்பிடுவதும் உண்டு.
தமிழில் மேலுயிர்கள்
[தொகு]தமிழில் நான்கு மேலுயிர்கள் உள்ளன.
- மேல் முன் இதழ்விரி குற்றுயிர் - "இ"
- மேல் முன் இதழ்விரி நெட்டுயிர் - "ஈ"
- மேல் பின் இதழ்குவி குற்றுயிர் - "உ"
- மேல் பின் இதழ்குவி நெட்டுயிர் - "ஊ"
உசாத்துணைகள்
[தொகு]- கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
- சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.