உள்ளடக்கத்துக்குச் செல்

மேகதொட்டி சுசரிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகதொட்டி சுசரிதா
அமைச்ச-உள்துறை
ஆந்திரப் பிரதேச அரசு[1]
பதவியில்
8 சூன் 2019 – 7 ஏப்ரல் 2022
முன்னையவர்என். சின்ன ராஜப்பா
பின்னவர்தானேதி வனிதா
உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2019 – 10 ஏப்ரல் 2022
முன்னையவர்இரவேலா கிசோர் பாபு
தொகுதிபிரதிபடு
பதவியில்
2009–2014
முன்னையவர்ரவி வெங்கட ரமணா
பின்னவர்இரவேலா கிசோர் பாபு
தொகுதிபிரதிபடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 திசம்பர் 1972 (1972-12-25) (அகவை 51)
பிரங்கிபுரம்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)புரோதிபட், குண்டூர் 522002

மேகதொட்டி சுசரிதா (Mekathoti Sucharita) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் ஆந்திரப் பிரதேசத்தின் உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருந்தவர்.[2][3] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சுசரிதா 2009ஆம் ஆண்டு முதன்முறையாக பிரதிபடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரசு சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைந்த எ. சா. ராஜசேகர ரெட்டி 2003ஆம் ஆண்டு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 'பாதயாத்திரை'யின் போது இவரைக் காங்கிரசில் சேர்த்துக்கொண்டார். பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒய். எஸ். ஆரால் ஆதரிக்கப்பட்ட சுசரிதா, 2006ஆம் ஆண்டு ஜில்லா பரிஷத் பிராந்தியத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரசு வேட்பாளராக குண்டூரின் பிரங்கிபுரத்தில் வெற்றி பெற்றார்.

2009இல், ஒய். எஸ். ஆர். இவருக்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரதிபடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வாய்ப்பு தந்தார். இவர் இத்தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றார். செப்டம்பர் 2009-இல் ராஜசேகர் ரெட்டியின் மறைவிற்குப் பின், ஜெகன் மோகன் ரெட்டிக்கு விசுவாசமாக இருந்தார். மார்ச் 2011-இல் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியினை ஜெகன் தொடங்கியபோது காங்கிரசிலிருந்து விலகினார். மே 2012இல் நடந்த இடைத்தேர்தலில் இவர் மீண்டும் ஓய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்குத் தனது இடத்தை விட்டுக்கொடுத்த போதிலும், ஒய். எஸ். ஆர். குடும்பத்திற்கு சுசரிதாவின் விசுவாசத்திற்கு வெகுமதியாக ஜெகன் மீண்டும் 2019 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பளித்தார்.[4] இவர் ஜனசேனா கட்சியில் இணைந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி மாணிக்ய வர பிரசாத் மற்றும் ஜனசேனா கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இரவேலா கிசோர் பாபு ஆகிய இருவரையும் தோற்கடித்தார்.

வாழ்க்கை

[தொகு]

குண்டூரில் உள்ள பிரங்கிபுரத்தைச் சேர்ந்த சுசரிதா, மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் வருமான வரி ஆணையராக (மேல்முறையீடு) பணிபுரிந்த அதிகாரியான எம். தயாசாகரை மணந்தார். இவரது தந்தை என். அங்கராவ் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார். பின்னர் பிரங்கிபுரத்தில் மருத்துவ மனை நடத்தி வந்தார். 1990-இல் அரசியல் அறிவியலில் இளங்கலை கல்வியினை முடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Andhra Pradesh Ministers: Portfolios and profiles" (in en-IN). 8 June 2019 இம் மூலத்தில் இருந்து 15 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220415155454/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-ministers-portfolios-and-profiles/article27698301.ece. 
  2. . 9 June 2019. 
  3. . 8 June 2019. 
  4. "Jagan Reddy appoints Dalit woman as home minister of Andhra Pradesh" (in ஆங்கிலம்). 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகதொட்டி_சுசரிதா&oldid=3882430" இலிருந்து மீள்விக்கப்பட்டது