உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் யோவான் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் யோவான்
ஆட்சி துவக்கம்561
ஆட்சி முடிவுஜூலை 13, 574
முன்னிருந்தவர்முதலாம் பெலாஜியுஸ்
பின்வந்தவர்முதலாம் பெனடிக்ட்
பிற தகவல்கள்
இயற்பெயர்கதேலினஸ்
பிறப்பு???
ரோம், கிழக்கு உரோமப் பேரரசு
இறப்பு(574-07-13)சூலை 13, 574
ரோம், கிழக்கு உரோமப் பேரரசு
யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

மூன்றாம் யோவான் 561 முதல் ஜூலை 13, 574 வரை திருத்தந்தையாக இருந்தவர்.

ரோம் நகரின் முக்கிய குடும்பத்தில் இவர் பிறந்தார்,

திருத்தந்தையர்களில் வரலாற்றாசிரியர்களால் (Liber Pontificalis) இவர் முதலாம் அனஸ்தாசியுஸின் மகன் என அழைக்கப்படுகின்றார். இவரின் தந்தைக்கு இலஸ்டிரியஸ் (illustris) என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இவரின் தந்தை உரோம ஆட்சிப்பேரவையின் உறுப்பினராக இருந்திருக்கக்கூடும்.[1]

இவர் 13-ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பினும், இவரைப்பற்றி மிகக் குறைந்த அளவே தகவல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவர் ஆட்சி செய்தது லோம்பார்ட் (Lombard invasion) தாக்குதலின் போது ஆகும். ஆகவே இவரின் வரலாற்றைப்பற்றிய எல்லா ஆவணங்களும் லோம்பார்டுகளால் அழிக்கப்பட்டிருக்கலாம். திருத்தந்தையர்களில் வரலாற்றில் (Liber Pontificalis) இவர் ஜூலை 13, 574 அன்று மரித்ததாக குறிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Martindale, Jones & Morris (1992), p. 61

வெளி இணைப்புகள்

[தொகு]
  •   "Pope John III". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  • Martindale, John R.; Jones, A.H.M.; Morris, John (1992), The Prosopography of the Later Roman Empire - Volume III, AD 527–641, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521201608 {{citation}}: Check |isbn= value: checksum (help)
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
561–574
பின்னர்