உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடந்த 800 ஆண்டுகளாக ஒவ்வொரு திருத்தந்தையும் தங்களுக்கென தனிப்பட்ட ஒரு ஆட்சி முத்திரையைத் திருப்பீட அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்,[1] திருத்தந்தை நான்காம் இன்னசென்ட் (1243-1254) முதல் முதலில் ஆட்சி முத்திரையைப் பயன்படுத்தினார் என்பர். அதற்கு முன் இருந்த திருத்தந்தையர் பண்புசார் முத்திரைகளை (Attributed arms) பயன்படுத்தினர்.[2]

பதினாறாம் பெனடிக்டைத் தவிர மற்ற திருத்தந்தையரின் ஆட்சி முத்திரைகளில் தங்க மும்முடி இருக்கும். பதினாறாம் பெனடிக்ட் இதனை நீக்கிவிட்டு ஆயரின் தலைப்பாகை (mitre) மற்றும் பாலியம் (pallium) ஆகியவற்றை வைத்தார்.

பாரம்பரியமாக திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகள் இருக்கும். விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் குறிக்கும். இக்கோட்பாடு மத்தேயு 16:18-19 -ஐ ஆதாரமாகக் கொண்டது :

"நான் (இயேசு) உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்"

அதனால் திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகள், கிறித்துவின் பிரதிநிதியாக இவ்வுலகில் திருத்தந்தையருக்கு இருக்கும் ஆன்மீக அதிகாரத்தைக் குறிக்கும்.

திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகள்

[தொகு]

தொடர்புடைய சின்னங்கள்

[தொகு]

திருப்பீட ஆட்சி முத்திரை.

வத்திக்கான் நகர ஆட்சி முத்திரை.

வத்திக்கான் நகர முத்திரை. (வத்திக்கான் நகர கொடியிலிருந்து).

இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தின்போது திருப்பீடத்தின் முத்திரை, (1929-இல் இருந்து)[3]

ஆதாரங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
SVG Papal coats of arms
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. பதினாறாம் பெனடிக்ட்டின் ஆட்சி முத்திரை வத்திக்கான். Accessed 2008-03-15.
  2. Michel Pastoreau (1997). Traité d'Héraldique (3e édition ed.). Picard. pp. 283–284. ISBN 2-7084-0520-9.
  3. "Vatican City (Holy See)". fotw.net. 2006-03-25. Retrieved 2007-11-07.