உள்ளடக்கத்துக்குச் செல்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 8°39′00″N 77°22′30″E / 8.65°N 77.375°E / 8.65; 77.375
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முண்டந்துறை புலிகள் சரணாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
க.மு.புலிகள் காப்பகம்
—  வாழிடம்/சிற்றினம் மேலாண்மைப் பகுதி  —
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
க.மு.புலிகள் காப்பகம்
அமைவிடம்: க.மு.புலிகள் காப்பகம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°39′00″N 77°22′30″E / 8.65°N 77.375°E / 8.65; 77.375
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்   திருநெல்வேலி, கன்னியாகுமரி
தோற்றம் 1988
அருகாமை நகரம் திருநெல்வேலி (40 கி.மீ)
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

895 சதுர கிலோமீட்டர்கள் (346 sq mi)

1,800 மீட்டர்கள் (5,900 அடி)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்


     3,500 mm (140 அங்)

     44 °C (111 °F)
     24 °C (75 °F)

தேர்வாய்வு 1996–97 177395
ஆட்சியகம் தமிழக வனத்துறை
குறிப்புகள்
  • IBA Code: IN266, Criteria: A1, A2[3]
இணையதளம் projecttiger.nic.in/kalakad.htm


களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்(ஆங்கிலம்: Kalakkad Mundanthurai Tiger Reserve (KMTR)) என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும்.[4]

தோற்றம்

[தொகு]

1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும் (251 சதுர கிலோ மீட்டர்கள்), முண்டந்துறை புலிகள் சரணாலயமும் (567 சதுர கிலோமீட்டர்கள்) உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இருசரணாலயங்களையும் ஒன்றிணைந்து, இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, இக்காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தினை ஒட்டியுள்ள வீரப்புலி, கீழமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்களிலுள்ள குறிப்பிட்ட (77 சதுர கிலோமீட்டர்கள்) பகுதிகளையும் இணைக்கப்பட கூறப்பட்டுள்ளது. மேலும், 2006 ஆண்டு, இக்காப்பகத்தின் 400 km2 (150 sq mi) முக்கிய பகுதியை, இந்தியாவின் தேசிய பூங்காப்பகுதிகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.[5]

அமைவிடம்

[தொகு]

தமிழ்நாட்டில் உள்ள முண்டன்துறை திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள வனவிலங்கு சரணாலயம் சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது.இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் நெல்லை-தென்காசி ரயில் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும். இது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பருவ காலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை ஆகும்.

சூழிடம்

[தொகு]
நீலம்-நீர்
வெளிர்பச்சை-அடர்வனம்
மஞ்சள்-திறந்தவெளி வனம்

சுற்றுலா

[தொகு]
  • மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி போன்றவைகள் உள்ளன.
  • ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல், இங்குள்ள பாணதீர்த்தம் அருவியில் எடுக்கப்பட்டதாகும்.
  • வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு.

சிறப்புகள்

[தொகு]
  • இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில்(the ‘Best coexistence and buffer zone management') முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் (National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது.
  • 2010/11 ஆண்டு நிதியாண்டில், உரூபாய்194.33 இலட்சங்களை, புலிகள் திட்டத்திற்காக தர, 28. ஆகத்து 2010 தேதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இசைந்துள்ளது குறிப்பிடதக்க வளர்ச்சியாகும்.[6]

உயிரின வகைமை

[தொகு]

உலக அறிஞர்களால், உயிரின வகைமை உள்ள இடங்களில் 18 முக்கியமென அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இக்காப்பகமும் ஒன்றாகும். இக்காப்பகத்தில் 32 தாவர இனங்களும் 17 விலங்கு இனங்களும் அழியும் நிலையிலுள்ளவை என பட்டியலிடப்பட்டுள்ளன.

விலங்கினங்கள்

[தொகு]

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, மான், மிளா, யானை, புலி போன்ற அரிய வகை விலங்கினங்கள் காணப்படுகிறது. திசம்பர், 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 45 சிறுத்தைகளும் 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட அதிகம்.

இந்த சரணாலயத்தில் புலிகளை தவிர சிறுத்தைகள், நரிகள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், பலதரப்பட்ட குரங்குகள் மற்றும் கடம்பை மான்களையும் காணலாம். 2014ஆம் ஆண்டில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் பெருக்கம் கூடியுள்ளது.[7][8]

பயன்கள்

[தொகு]

1970களில் தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளில் இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் வற்றாத ஜீவநதி என்று பெயர்பெற்ற தாமிரபரணியாறு 1980களில் வறண்டது. இதன் பிறகு தாமிரபரணிக்கு நீர் வழங்கும் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அன்றைய அரசு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை அறிவிதது இங்குள்ள காட்டை மேம்படுத்த உலக வங்கி உதவியுடன் திட்டங்கள் வகுத்து செயல்பட்டது. இதன் பிறகு இப்பகுதியின் காடு உயிர்பெற்றது. இதன் விளைவுகள் விரைவில் தெரியத் துவங்கின. 1946இல் இருந்து 1990 வரை தாமிரபரணி அணைக்கு நீர்வரத்து சராசரியாக 13000 கன அடியாக இருந்தது. ஆனால் புலிகள் காப்பகம் உருவானதால் காட்டின் தரம் மேம்பட்டதால் 1990க்குப் பிறகு அணைக்கு வந்த சராசரி நீர்வரத்தானது 26000 கன அடியாக அதிகரித்தது. மழையளவும் கூடியது.[9]

இவற்றையும் காணவும்

[தொகு]
  • பிற தமிழ்நாட்டு புலிகள் காப்பகங்கள்.
  1. முதுமலை தேசியப் பூங்கா
  2. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா
  3. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்
  4. களக்காடு தலையணை

புற இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. BirdLife International, Kalakkad Mundanthurai Tiger Reserve[தொடர்பிழந்த இணைப்பு], 2008
  4. http://www.dinamani.com/tamilnadu/2015/02/03/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/article2651048.ece
  5. ENVIS List of Proposed National Parks in India பரணிடப்பட்டது 2007-01-09 at the வந்தவழி இயந்திரம், 2006
  6. S.P. Yadav, Deputy Inspector General of Forests (PT) (2010-08-28), "Centrally Sponsored Plan Scheme 'Project Tiger' Administrative Approval for funds release to Kalakkad Mundanthurai Tiger Reserve, Tamil Nadu during 2010-11." (PDF), No. 4-1(32)/2010-PT, New Delhi: National Tiger Conservation Authority, பார்க்கப்பட்ட நாள் 2011-02-02
  7. http://www.dinamani.com/tamilnadu/2015/02/03/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/article2651048.ece
  8. களக்காடு-முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு; காப்பக கள இயக்குநர் தகவல்
  9. வைகைக்கு உயிர்தரும் மேகமலை, கட்டுரை, பாரதி பிரபாகர், இந்து தமிழ், 2021 ஏப்ரல் 17