மீண்டும் ஒருநிலம்
மீண்டும் ஒருநிலம் (Pangaea Ultima) என்பது ஒருநிலக் கொள்கையை மூலமாகக் கொண்ட கொள்கையாகும். ஒருநிலக் கொள்கை படி 250 கோடி ஆண்டுகளுக்கு முன் அனைத்து கண்டங்களும் ஒன்றாக இருந்தது என்று கருதப்படுகிறது. மீண்டும் ஒருநிலம் என்ற கொள்கையின் படி மீண்டும் அனைத்து கண்டங்களும் ஒன்று சேர்ந்து ஒரு பெருங்கண்டமாக மாறும் என்று கருதப்படுகிறது. இந்த கொள்கையை முதலில் கிரிசுடோபர் சுகாட்டசு என்றவர் முன்வைத்தார்.."[1]
மீப்பெருங்கண்டங்கள் புவியின் அனைத்து அல்லது பெரும்பான்மையான நிலப்பரப்புகள் இணைந்து ஒரே தொடர்ச்சியான கண்டம் உருவாவதை விவரிக்கின்றன. பாஞ்சியா அல்டிமா உருவாக்கத்தில், அமெரிக்காக்களுக்கு கிழக்கே மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் கீழமிழ்வதால் அத்திலாந்திக்கு நடுக்கடல் முகடு கீழமிழ்ந்து அத்திலாந்திக்கு, இந்தியப் பெருங்கடல் குழிநிலம் தாழ்ந்து அத்திலாந்திக்கும் இந்தியப் பெருங்கடலும் இணைய, அமெரிக்காக்கள் மீண்டும் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவுடன் இணையும். மற்ற மீப்பெருங்கண்டங்களைப் போன்றே இதன் உட்புறமும் உயர்வெப்பநிலை நிலவும் வறண்ட பாலைவனமாக மாற வாய்ப்புள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Continents in collision: Pangaea Ultima". NASA Science News. October 6, 2000.
- ↑ Kargel, Jeffrey S (2004). "New World". Mars: a warmer, wetter planet. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85233-568-7.
மேலதிக விவரங்களுக்கு
[தொகு]- Nield, Ted, Supercontinent: Ten Billion Years in the Life of Our Planet, Harvard University Press, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0674032453