மியான்மர் அரசு நிர்வாகக் குழு
மியான்மர் அரசு நிர்வாகக் குழு | |
---|---|
![]() மியான் அரசின் இலச்சினை | |
மேலோட்டம் | |
நிறுவப்பட்டது | பெப்ரவரி 2, 2021 |
அரசு | மியான்மர் |
தலைவர் | மியான்மர் நிர்வாகக் குழுத் தலைவர், மின் ஆங் லையிங் |
நியமிப்பவர் | மியான்மர் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தலைவர் |
பொறுப்பு | மியான்மர் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தலைவர் |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மியான்மர் அரசு நிர்வாகக் குழு, (State Administration Council சுருக்கமாக:SAC), மியான்மர் நாட்டை 2 பிப்ரவரி 2021 முதல் ஆளும் இராணுவத் தலைவர்களின் குழுவாகும்.2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் அரசு நிர்வாகத்தைக் கைப்பற்றிய இராணுவத் தலைவர்களின் நிர்வாகக் குழு தற்போது மியான்மர் நாட்டை ஆள்கிறது. மியான்மர் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தலைவர் மின் ஆங் ஹைங் இக்குழுவின் தலைவர் ஆவார். மியான்மரின் அரசியலமைப்பின்படி, இக்குழுவிடம் சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாகம் மற்றும் நீதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.[1]இக்குழு மியான்மர் அரசை நடத்துவதற்கு தற்காலிக அரசை அமைத்துள்ளது. இந்த அரசின் பிரதம அமைச்சர் மின் ஆங் லாயிங் ஆவார்.[2]நாடு கடந்த மியான்மர் அரசின் குழுவானது[3]மியான்மரை ஆளும் இராணுவக் குழுவை தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.[4]மேலும் இராணுவ ஆட்சிக் குழுக்கு எதிராக மியான்மர் தேசிய ஒற்றுமை அரசு என்ற அமைப்பை மியான்மரில் நிறுவியுள்ளது.[5]
மியான்மர் அரசு நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
[தொகு]25 செப்டம்பர் 2023 முடிய அரசு நிர்வாகக் குழுவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 ஆகும்.[6]விவரம் பின்வருமாறு:
பெயர் | பதவிப் பெயர் | பணியில் சேர்ந்த ஆண்டு | அரசியல் கட்சி | |
---|---|---|---|---|
1 | மூத்த ஜெனரல் மின் ஆங் லையிங் | தலைவர் | 2 பிப்ரவரி 2021 | மியான்மர் பாதுகாப்புப் படைகள் |
2 | துணை மூத்த ஜெனரல் சோ வின் | துணைத் தலைவர் | 2 பிப்ரவரி 2021 | |
3 | லெப். ஜெனரல் ஆங் லிங் வே | செயலாளர் | 2 பிப்ரவரி 2021 | |
4 | லெப். ஜெனரல் யே வின் ஓ | இணைச் செயலாளர் | 2 பிப்ரவரி 2021 | |
5 | ஜெனரல் யா துன் ஓ | உறுப்பினர் | 2 பிப்ரவரி 2021 | |
6 | அட்மிரல் தின் ஆங் சான் | உறுப்பினர் | 2 பிப்ரவரி 2021 | |
7 | ஜெனரல் மௌங் மௌங் ஆய் | உறுப்பினர் | 25 September 2023 | |
8 | லெப். ஜெனரல் யார் யாயி | உறுப்பினர் | 8 பிப்ரவரி 2022[7] | |
9 | லெப். ஜெனரல் நியோ சாவ் | உறுப்பினர் | 25 செப்டம்பர் 2023 | |
10 | உன்னா மௌங் வின் | உறுப்பினர் | 1 பிப்ரவரி 2023 | ஒற்றுமை மற்றும் வளர்ச்சிற்கான ஐக்கிய கட்சி[8] |
11 | வே பு, தாவ் | உறுப்பினர் | 1 பிப்ரவரி 2023 | சுயேச்சை அரசியல்வாதி |
12 | போரெல் ஆங் தெயின் | உறுப்பினர் | 1 பிப்ரவரி 2023 | ஒற்றுமை மற்றும் வளர்ச்சிற்கான ஐக்கிய கட்சி |
13 | மாங் நிவின் மௌங் | உறுப்பினர் | 2 பிபரவரி 2021 | கயின் மக்கள் கட்சி[9] |
14 | மரு. முக் தாங் | உறுப்பினர் | 17 பிப்ரவரி 2023 | ஒற்றுமை மற்றும் வளர்ச்சிற்கான ஐக்கிய கட்சி (USDP)[10] |
15 | மரு. பா வே | உறுப்பினர் | 25 செப்டம்பர் 2023 | சுயேச்சை |
16 | குன் சான் வின் | உறுப்பினர் | 1 பிப்ரவரி 2023 | சுயேச்சை |
17 | சவே கயின் | உறுப்பினர் | 30 மார்ச் 2021 | ஒற்றுமை மற்றும் வளர்ச்சிற்கான ஐக்கிய கட்சி |
18 | யான் யாவ் | உறுப்பினர் | 1 பிப்ரவரி 2023 | சுயேச்சை |
சர்வதேச அங்கீகாரம்
[தொகு]
2021 மியான்மர் இராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சியை கலைத்து இராணுவ ஆட்சியை நிறுவிய இக்குழுவின் தற்காலிக அரசை பல நாடுகள் அங்கீகாராம் வழங்காததுடன், இராஜதந்திர உறவுகளை கட்டுப்படுத்தியுள்ள்து. நியூசிலாந்து, ஜப்பான், இந்தோனேசியா நாடுகள் மியான்மரின் இராணுவ அரசுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆசியான் உச்சிமாநாட்டில் இருந்து மியான்மரை விலக்க உள்ளது.[11] நவம்பர் 2022 இல், ஐரோப்பிய ஒன்றியம் மியான்மர் இராணுவ நிர்வாகக் குழுவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2021ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, மியான்மரின் இராணுவத் தலைவர்களைக் கண்டித்தும், நாட்டிற்கான ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஜனநாயக தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளிக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும் மியான்மரின் இராணுவத்தை இந்த தீர்மானம் கோருகிறது. அத்துடன் இராணுவ ஆட்சியை அங்கீகரிக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.[12]
இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிரான ஆயுதக் குழுக்கள்
[தொகு]மியான்மர் இராணுவ ஆட்சிக் குழுவினரை எதிர்த்து மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் ஆயுதக் குழுக்கள் கிளர்ச்சிகள் செய்து, ஏறத்தாழ 60% நிலப்பரப்புகளை கைப்பற்றி தன்னாட்சியுடன் நிர்வகித்து வருகின்றனர்.
- அரக்கான் இராணுவம்
- அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை
- ஐக்கிய வா மாநிலப் படைகள்
- காசின் விடுதலை இராணுவம்
- காரென் தேசிய விடுதலைப் படைகள்
- காரென் தேசியப் படைகள்
- சான் மாநிலப் படைகள் (வடக்கு)
- சான் விடுதலைப் படைகள் (தெற்கு)
- சின் சகோதரத்துவக் கூட்டணி
- சின் தேசியப் படைகள்
- சின்லாந்து தேசிய இராணுவம்
- சோமி புரட்சிகரப் படைகள்
- தாங் தேசிய விடுதலை இராணுவம்
- தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (மியான்மர்)
- மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
- மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
- மொன் தேசிய விடுதலைப் படைகள்
இதனையும் காண்க
[தொகு]- 2021 மியான்மர் இராணுவப் புரட்சி
- மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
- மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Myanmar military announces new State Administrative Council". The Myanmar Times. 2 February 2021 இம் மூலத்தில் இருந்து 8 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220208100507/https://www.mmtimes.com/news/myanmar-military-announces-new-state-administrative-council.html.
- ↑ "နိုင်ငံတော်စီမံအုပ်ချုပ်ရေးကောင်စီ စီမံခန့်ခွဲရေး ကော်မတီကို အိမ်စောင့်အစိုးရအဖွဲ့ အဖြစ် ပြင်ဆင်ဖွဲ့စည်း" (in my). 1 August 2021 இம் மூலத்தில் இருந்து 1 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210801121356/https://news-eleven.com/article/212823.
- ↑ Committee Representing Pyidaungsu Hluttaw
- ↑ "Myanmar's Military Council Labeled 'Terrorist Group'". 2 March 2021. Archived from the original on 22 April 2021. Retrieved 26 April 2021.
- ↑ National Unity Government of Myanmar
- ↑ "Reconstitution of State Administration Council" (PDF). Global New Light of Myanmar. Archived (PDF) from the original on 26 September 2023. Retrieved 26 September 2023.
- ↑ "The Global New Light of Myanmar (9.2.2022)". Archived from the original on 28 March 2022. Retrieved 9 February 2022.
- ↑ Union Solidarity and Development Party
- ↑ Kayin People's Party
- ↑ "နစကအဖွဲ့ဝင်အဖြစ် ပူဂင့်ကမ်းလျန်အစား ဒေါက်တာမှုထန်ကို အစားထိုးခန့်အပ်". CNI. Archived from the original on 26 September 2023. Retrieved 26 September 2023.
- ↑ Robinson, Gwen (1 November 2021). "Can ASEAN overcome the 'Myanmar curse'?". Nikkei Asia (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2 November 2021. Retrieved 2 November 2021.
- ↑ "Archived copy". The Washington Post இம் மூலத்தில் இருந்து 21 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230321220121/https://www.washingtonpost.com/world/2021/06/18/un-set-adopt-resolution-condemning-myanmars-military-junta/.