அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை
அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை Arakan Rohingya Salvation Army | |
---|---|
தொடக்கம் | 2016 அக்டோபர் |
நாடு | மியன்மரின் வடக்கு ராகினி மாநிலம் |
அளவு | 500[1] |
குறிக்கோள் | ரோகிஞ்சா தேசியம் |
போர்கள் | மேற்கு மியான்மரில் ரோகிஞ்சா கிளர்ச்சி |
கட்டளைத் தளபதிகள் | |
தலைவர் | ஆடா உல்லா[2][3] |
அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை (Arakan Rohingya Salvation Army, பர்மியம்: အာရ်ကန်ရိုဟင်ဂျာ ကယ်တင်ရေးတပ်မတော်; சுருக்கமாக ARSA),[4][5][6] அதன் முன்னாள் பெயரான ஹராக்கா அல்-யாகின் (Harakah al-Yaqin) (ஆங்கில மொழி: Faith Movement)[7][8] என்றும் அழைக்கப்படுவது, மியான்மரின், வடக்கு ராகினி மாநிலக் காடுகளில் செயல்படும் ரோகிஞ்சா கிளர்ச்சி குழு ஆகும். சர்வதேச நெருக்கடிக் குழுவின் 2016 திசம்பர் அறிக்கையின்படி, பாக்கிஸ்தானின் கராச்சியில் பிறந்து சவுகி அரேபியாவின் மெக்காவில் வளர்ந்த ரோஹிங்கியரான ஆடா உல்லா என்பவரின் தலைமையில் இக்குழு இயங்குகிறது. இதன் தலைமைப் பொறுப்பில் சவுதி அரேபியாவில் குடியேறிய ரோஹிங்கியா முசுலீம் குழுவொன்றும் அடங்கும்.[9]
ஏஆர்எஸ்ஏ உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் சிட்வெவில் சிறையில் அடைக்கப்பட்ட நபர்களை விசாரணை செய்த போலீசாரின் காப்டன் யான் நாய்ங் லாட் இக் குழுவின் குறிக்கோள், மியான்மரில் "ரோஹிங்ஜியருக்கான ஜனநாயக முஸ்லிம் அரசை" உருவாக்குவதே என்றார். ஏஆர்எஸ்ஏ குழுவுக்கு வெளிநாட்டு இஸ்லாமிய குழுக்களுடன் தொடர்புக்கு உறுதியான சான்றுகள் இல்லை என்றாலும், அந்த குழுவானது வெளிநாட்டு இஸ்லாமியவாதிகள் குழுவுடன் தொடர்புடையதாக உள்ளது என்று பர்மா அரசாங்கம் சந்தேகிக்கிறது.[10] ஏஆர்எஸ்ஏ குழுவானது தங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பவர்கள் என கருதியவர்களுக்கு எதிராக தாக்கியதில் 34 முதல் 44 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 22 பேரைக் கடத்தப்பட்டுள்ளதாகவும், பர்மா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.[11][12] இந்த கூற்றுக்களை ஏஆர்எஸ்ஏ அமைப்பு மறுத்துள்ளது. தங்களுக்கு "பயங்கரவாதக் குழுக்களுடனோ அல்லது வெளிநாட்டு இஸ்லாமியவாதிகளிடமோ எந்த தொடர்பும் இல்லை" என்றும், தங்களது "ஒரே இலக்கு அடக்குமுறை பர்மிய ஆட்சி" மட்டுமே என்று கூறியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, மியான்மரின் பயங்கரவாத எதிர்ப்புக்கான மத்திய குழுவானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி ஏஆர்எஸ்ஏ குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.[13] இதற்கு, ஆகஸ்ட் 28 அன்று, ஏஆர்எஸ்ஏ குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் தங்களுக்கு எதிரான அரசாங்க குற்றச்சாட்டுக்களை "ஆதாரமற்றது" என்றும், தங்கள் முக்கிய நோக்கம் ரோஹிங்கியா மக்களின் உரிமையே என்றது.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ CNN, Katie Hunt. "Myanmar Air Force helicopters fire on armed villagers in Rakhine state". CNN. http://www.cnn.com/2016/11/13/asia/myanmar-fighting-rakhine-state/. பார்த்த நாள்: 15 November 2016.
- ↑ J, Jacob (15 December 2016). "Rohingya militants in Rakhine have Saudi, Pakistan links, think tank says" இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170826080225/https://sg.news.yahoo.com/rohingya-militants-rakhine-saudi-pakistan-135712056.html.
- ↑ Millar, Paul (16 February 2017). "Sizing up the shadowy leader of the Rakhine State insurgency". Southeast Asia Globe Magazine இம் மூலத்தில் இருந்து 24 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170224135252/http://sea-globe.com/rakhine-state-insurgency-ata-ullah/. பார்த்த நாள்: 24 February 2017.
- ↑ Freeman, Joe. "Myanmar’s Rohingya Insurgency Strikes Pragmatic Note" (in en). VOA. https://www.voanews.com/a/myanmar-rohingya-insurgency-strikes-pragmatic-note/3788483.html. பார்த்த நாள்: 30 March 2017.
- ↑ "Rohingya ‘Army’ stresses right to self-defence in first statement" (in en). Frontier Myanmar. http://frontiermyanmar.net/en/rohingya-army-stresses-right-to-self-defence-in-first-statement. பார்த்த நாள்: 30 March 2017.
- ↑ "Myanmar's armed Rohingya militants deny terrorist links". Fox News. 28 March 2017. http://www.foxnews.com/world/2017/03/28/myanmar-armed-rohingya-militants-deny-terrorist-links.html. பார்த்த நாள்: 30 March 2017.
- ↑ "Myanmar: A New Muslim Insurgency in Rakhine State" (in en). Crisis Group. 15 December 2016. https://www.crisisgroup.org/asia/south-east-asia/myanmar/283-myanmar-new-muslim-insurgency-rakhine-state. பார்த்த நாள்: 23 January 2017.
- ↑ Lewis, Simon (14 December 2016). "Myanmar's Rohingya insurgency has links to Saudi, Pakistan: report". Reuters. https://www.reuters.com/article/us-myanmar-rohingya-idUSKBN1432IZ. பார்த்த நாள்: 15 December 2016.
- ↑ "An army crackdown sends thousands fleeing in Myanmar". The Economist. 31 August 2017. https://www.economist.com/news/asia/21727947-once-again-violence-wracks-rakhine-state-army-crackdown-sends-thousands-fleeing-myanmar. பார்த்த நாள்: 6 September 2017.
- ↑ Lone, Wa; Lewis, Simon; Das, Krishna N. (9 March 2017). "Myanmar Says Foreign Islamists Instigated Series of Attacks". Reuters. https://www.reuters.com/article/us-myanmar-rohingya-attackers-insight-idUSKBN16G36S. பார்த்த நாள்: 10 March 2017.
- ↑ McDonald, Taylor (22 June 2017). "Rohingya ‘insurgent’ camp raided - Asean Economist". Asean Economist. http://aseaneconomist.com/rohingya-insurgent-camp-raided/. பார்த்த நாள்: 19 July 2017.
- ↑ "Myanmar sees insurgents behind Rohingya killings in northwest". Reuters. 2017. https://www.reuters.com/article/us-myanmar-rohingya-attackers-idUSKBN1A515L. பார்த்த நாள்: 21 July 2017.
- ↑ "Exclusive: Is this the final confrontation for the Rohingya?". Dhaka Tribune. 27 August 2017. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
- ↑ "Thousands of panic-stricken civilians flee fighting in Myanmar's northwest". Reuters (Japan Times). 28 August 2017. https://www.japantimes.co.jp/news/2017/08/28/asia-pacific/thousands-panic-stricken-civilians-flee-fighting-myanmars-northwest/#.WahVP71X7qA. பார்த்த நாள்: 28 August 2017.