மாதேமங்கலம்
Appearance
மாதேமங்கலம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636804 |
மாதேமங்கலம் (Mademangalam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும். மாநிலத் தலைநரான சென்னையிலிருந்து 295 கிலோ மீட்டடர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1315 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4982 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2464 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2518 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 65.4 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]
- மாதேமங்கலம் மண்டு மாரியம்மன் கோயில்
- மாதேமங்கலம் நரசிம்மசாமி கோயில்
- மாதேமங்கலம் பைரவசாமி கோயில்
- மாதே மங்கலம் மாரியம்மன் கோயில்