பென்னாகரம் வட்டம்
பென்னாகரம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பென்னாகரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன.இவ்வட்டம் பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நாதம் என 4 உள்வட்டங்கள் கொண்டது.
இவ்வட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம்உள்ளது.
பென்னாகரம் பகுதியில் பல அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிட தக்கவை
அரசு மேல்நிலைப்பள்ளி பி.அக்ராகரம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாங்கரை ஆகும்.
பரப்பளவு
[தொகு]பென்னாகரம் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,13,027 எக்டேர்களாகும்.[2] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,34,853 மக்கள் பென்னாகரம் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[4] விட குறைவானது. பென்னாகரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
- ↑ "தர்மபுரி மாவட்ட இணையதளம்". Archived from the original on 2011-04-14. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பென்னாகரம் வட்டம்". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.
- ↑ "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2014.