மணிக்கிராமம்
உருவாக்கம் | சு. கி.பி. 5ஆம் நூற்றாண்டு |
---|---|
வகை | வணிகக் குழு |
நோக்கம் |
|
சேவை | தென்னிந்தியா (முதன்மையாக) |
உறுப்பினர்கள் | பயணம் செய்யும் இந்திய வணிகர்கள் |
தாய் அமைப்பு | ஐந்நூற்றுவர் (12 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும்) |
மணிக்கிராமம் (Manigramam) என்பது இடைக்காலத்தில் செயல்பட்டுவந்த ஒரு வணிகக் குழுவாகும். இது இந்திய வணிகர்களைக் கொண்ட வணிகர் சங்கமாகும். இது தென்னிந்தியாவில் இயங்கி வர்ந்தது.[1][2]ஐந்நூற்றுவர் (ஐவோலை ஐந்நூநூறு) மற்றும் அஞ்சுவண்ணம் (அஞ்சுமான்) ஆகிய வணிகக் குழுக்களுடன், மணிகிராமம் இப்பகுதியில் வணிக நடவடிக்கைகளில் முதன்மையாக ஈடுபட்டது.[3] தென்னிந்தியாவின் துறைமுக நகரங்களில் மட்டுமே வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட அஞ்சுவண்ணம் போலல்லாமல், மணிகிராமம் துறைமுக நகரங்களிலும், உள்நாட்டிலும் வணிகத்தில் ஈடுபட்டு வந்தது. [2]
"வானி கிரிரா" அல்லது "வானிய கிராமா" என்று அழைக்கப்படும் வணிகர் குழு, கிமு முதல் நூற்றாண்டிலேயே வட இந்தியாவில் இருந்தது தெரியவருகிறது. [2] அவர்கள் கார்ல் கல்வெட்டு (கி.மு. முதல் நூற்றாண்டு), கத்த்யவாரைச் சேர்ந்த மன்னன் விஷ்ணுசேனாவின் சாசனம் (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு), மன்னன் தோரமணன்னனின் சஞ்செலி சாசனத்தில் (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) காணப்படுகின்றனர். [2]
தென்னிந்தியாவில் மணிகிராமத்தின் செயல்பாடுகள் பற்றிய பதிவுகள் கிபி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகின்றன. மணிகிராமத்தைப் பற்றிய முதல் குறிப்பு, தென் கருநாடகத்திலிருந்து (மேலக்கோட்டை, தும்கூர், ஆசன் மாவட்டம்) இரண்டு செப்பேட்டு மானியங்களில் காணப்படுகிறன. இவை இரண்டும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக கணிக்கப்பட்டுள்ளன. [2] மேலக்கோட்டை செப்பேடானது பௌத்த விகாரைக்கு நிலக் கொடை வழங்கியதை பதிவு செய்கிறது. [2] கிபி 9 ஆம் நூற்றாண்டின் குயிலான் சிரியன் செப்பேடுகளும் மணிகிராமப் பிரதிநிதிகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. [4] 9 ஆம் நூற்றாண்டில் மணிகிராமம் குழுவினர் கடல் வணிகத்திலும் ஆர்வமாக செயல்பட்டதும், மேற்கு கடற்கரையில் அஞ்சுவண்ணம் (அஞ்சுமான்) வணிக்க் குழுவுடன் ஒத்துழைத்தது வணிகத்தில் ஈடுபட்டது போல் தெரிகிறது. [2] தாய்லாந்தில் உள்ள டகுவா பாவில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டானது (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) மணிகிராமம் வணிக சங்கத்தைக் குறிக்கிறது.[5]
10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஐந்நூற்றுவர் (ஐவோலை ஐநூறு) தென்னிந்திய வணிகர்களின் உயர் சங்கமாக விரிவடைந்தது. மணிக்கிராமம் மற்றும் அஞ்சுவண்ணம் ஆகியவை பின்னர் ஐநூற்றுவரில் இணைந்தன. ஐந்நூற்றுவர், கி.பி 12 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும், மற்ற அனைத்து வணிகக் குழுக்களையும் உள்ளடக்கிய ஒரு "குடை அமைப்பாக" செயல்பட்டது. [1][6]
மேலும் பார்க்கவும்
[தொகு]- ஐனுற்றுவர் (அய்யாவோலே ஐந்நூறு)
- அஞ்சுவண்ணம் (அஞ்சுமான்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Noburu Karashima (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 136-144.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Y. Subbarayalu (2015-06-01). "Trade guilds of south India up to the tenth century" (in en). Studies in People's History 2 (1): 21–26. பன்னாட்டுத் தர தொடர் எண்:2348-4489.
- ↑ Noburu Karashima (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 136.
- ↑ Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 277, 278 and 295.
- ↑ Noburu Karashima (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 136-138.
- ↑ Y. Subbarayalu (2015-06-01). "Trade guilds of south India up to the tenth century" (in en). Studies in People's History 2 (1): 21–26. பன்னாட்டுத் தர தொடர் எண்:2348-4489.