அஞ்சுவண்ணம்
![]() கொல்லன் சிரியன் செப்பேடுகள் | |
ஒன்றிணைப்பு | ஐநூற்றுவர் (ஐவோலே ஐந்நூறு) |
---|---|
உருவாக்கம் | சு. கி.பி 9ஆம் நூற்றாண்டு |
கலைக்கப்பட்டது | சு. கி.பி 13ஆம் நூற்றாண்டு |
வகை | வணிக்க் குழு |
நோக்கம் |
|
சேவை | தென்னிந்தியா (முதன்மையாக) |
உறுப்பினர்கள் | இந்தியரல்லாத வசிகர்கள் (பாரசீகர்கள் மற்றும் அராபியர்)[1]
|
தாய் அமைப்பு | ஐந்நூற்றுவர் (12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு) |

அஞ்சுவண்ணம் (Anjuvannam, பாரசீக மொழிச் சொல்லான அஞ்சுமன் என்பது மலையாளத்தில் அஞ்சுவண்ணம் என்றும் தெலுங்கு, கன்னடத்தில் ஹன்ஜாமா அல்லது ஹஞ்சமானா [2] அல்லது ஹம்யமானா [1] என்று வழங்கப்படுகிறது) என்பது இடைக்கால வணிகக் குழுவைக் குறிப்பிடும் பெயராகும். இதில் இந்தியத் துணைக்கண்டத்தைச் சாராத வணிகர்கள் குறிப்பாக பாரசீகர்கள் மற்றும் அராபியர்களைக் கொண்ட ஒரு வணிகக் குழுவைக் குறிப்பதாகும். இவர்கள் முதன்மையாக தென்னிந்தியாவில் வணிகச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். [3] மணிக்கிராமம் மற்றும் ஐந்நூற்றுவர் (ஐகோலே ஐந்நூறு) ஆகியவற்றுடன், அஞ்சுவண்ணம் வணிகர் குழு இடைக்காலத்தில் தென்னிந்தியாவின் வணிக நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றியது. [3]
தென்னிந்தியாவின் உள்நாட்டுப் பகுதியில் இயங்கி வந்த மணிகிராமம் வணிகக் குழுவைப் போலன்றி, அஞ்சுவண்ணம் குழுவானது கடலோர நகரங்களில் மட்டுமே வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. [1] சில துறைமுகங்களில், இந்த வணிக் குழுவானது அரச சாசனங்களைப் பெற்று, அந்த நகரங்களுக்குள் சிறப்புச் சலுகைகளைப் பெற்றது. அஞ்சுவண்ணம் தென்னிந்திய கல்வெட்டுகளில் குறிப்பாக குயிலான் சிரியன் செப்பேடுகள் (c. 849 CE) மற்றும் கொச்சியின் யூத செப்பேடுகள் (c. 1000 CE) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. [2] [4] [5] அஞ்சுவண்ணம் குழுவைச் சேர்ந்தவர் "அஞ்சுவண்ணத்தார்" என்று அழைக்கப்பட்டடனர். [6]
வரலாறு
[தொகு]சொற்பிறப்பியல்
[தொகு]அஞ்சுவண்ணம் என்ற சொல் பாரசீக மூலத்திலிருந்து தோன்றியிருக்கலாம். இது அவெஸ்தான் மொழியுடன் தொடர்புடையது: அஞ்சுமனா மற்றும் பாரசீக அஞ்சுமன் அல்லது அனுமன் (இது ஒரு அமைப்பு அல்லது மக்கள் குழுவைக் குறிக்கிறது). [5] [7] ஹஞ்சமா அல்லது ஹஞ்சமனா என்ற சொல் தெலுங்கு மற்றும் கன்னடப் பதிவுகளில் காணப்படுகிறது. [2] கொங்கன் கடற்கரையில் உள்ள ஒரு கல்வெட்டில் ஹஞ்சமனா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. [1] நான்கு வர்ணங்களில் ஒன்றிலும் சேராத எந்தவொரு மனிதரும் அஞ்சுவண்ணம் என்று குறிப்பிடப்படுவதால், இந்து வர்ண அமைப்பிலிருந்து அஞ்சுவண்ணம் என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. [8] [5]
வணிகக் குழு செயல்பட்ட பகுதிகள்
[தொகு]வரலாற்றாசிரியர் ஒய். சுப்பராயலு அஞ்சுவண்ணம் வணிகச் சங்கத்தை "மேற்கு ஆசிய வணிகர்களின் அமைப்பு" என்று வரையறுத்துள்ளார். [6] [1] [9] அஞ்சுவண்ணம் வணிகச் சங்கம் பொதுவாக தென்னிந்தியாவில் (பெரும்பாலும் இந்தியப் பெருங்கடல் வர்த்தகம் [1] ) செயல்பட்ட யூதர், சிரிய கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், சரதுசம் அல்லது பார்சி போன்ற மத்திய கிழக்கு வணிகர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. [6] இந்த வணிகர்கள் பொதுவாக கொங்கண் கடற்கரை, மலபார் கடற்கரை, தென்னிந்தியாவின் சோழ மண்டலக் கடற்கரை (மேலும் சாவகம் உட்பட தென்கிழக்கு ஆசியாவிலும்) வணிகத் துறைமுகங்களில் செயல்பட்டனர். [6]
மணிகிராமம் வணிகர் சங்கம் தென்னிந்தியாவின் உள்நாட்டில் செயல்பட்டாலும், அஞ்சுவண்ணம் வணிகர் சங்கம் தென்னிந்தியாவின் கடலோர நகரங்களில் மட்டுமே செயல்பட்டது.[1]
வளர்ச்சி
[தொகு]அஞ்சுவண்ணம் குறித்த துவக்ககால சான்றுகளான கொல்லன் சிரியன் செப்பேடு, கி.பி. 849 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அது கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கேரளக் கடற்கரையில் வணிகக் குழுவின் செயல்பாட்டை உறுதிப்படுத்துகின்றது.[1] கி.பி 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, ஐநூற்றுவர் (ஐவோலை ஐநூறு) தென்னிந்தியா முழுவதும் விரிவடைந்து, அஞ்சுவண்ணம் மற்றும் மணிகிராமம் உள்ளிட்ட முன்பே இருந்த பெரும்பாலான வணிகக் குழுக்களை அதன் குடையின் கீழ் ஒன்றிணைத்தது. [1] மலபார் கடற்கரையின் யூத வணிகர்களுடன் அஞ்சுவண்ணம் சங்கத்துடன் அதிகரித்த தொடர்பு கொச்சி யூத செப்பேடுகளில் (கி.பி. 1000) காணப்படுகிறது. [2] கி.பி 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கி அதன் பின்னர் தொடர்ந்த ஐந்நூறு வணிகக் குழு, பல்வேறு சிறிய வணிகக் குழுக்களுக்கு ஒரு குடை அமைப்பாகச் செயல்பட்டது. [3] 11 - 13 ஆம் நூற்றாண்டுகளில் அஞ்சுவண்ணம் பெரும்பாலும் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் முஸ்லிம் வணிகர்களைக் கொண்டதாக இருந்தது. [1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Subbarayalu, Y. (2015). "Trade guilds of south India up to the tenth century". Studies in People's History 2 (1): 21–26. பன்னாட்டுத் தர தொடர் எண்:2348-4489. https://journals.sagepub.com/doi/abs/10.1177/2348448915574403?download=true&journalCode=sipa.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Narayanan, M. G. S. (2013). Perumals of Kerala. Thrissur (Kerala): CosmoBooks. pp. 278, 437 and 451.
- ↑ 3.0 3.1 3.2 Karashima, Noboru, ed. (2014). A Concise History of South India: Issues and Interpretations. Oxford University Press. p. 136. ISBN 978-0-19-809977-2.
- ↑ Pius, Malekandathil (2010). Maritime India: Trade, Religion and Polity in the Indian Ocean. Delhi: Primus Books. ISBN 978-9380607016. OCLC 551379069.
- ↑ 5.0 5.1 5.2 Ganeshram, S.; Bhavani, C., eds. (2011). History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu (in ஆங்கிலம்). Indian University Press. ISBN 9789380325910.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Kulke, Hermann; Kesavapany, K.; Sakhuja, Vijay, eds. (2009). Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia. Singapore: Institute of Southeast Asian Studies. ISBN 9789812309372.
- ↑ Bayat, M.; Algar, H.; Hanaway, Jr., W. L. (2012). "Anjoman (Organization)". Encyclopaedia Iranica.
- ↑ Logan, William (2004). Malabar (in ஆங்கிலம்). Asian Educational Services. ISBN 9788120604469.
- ↑ Subbarayalu, Y. (2011). South India Under the Cholas. Oxford University Press India. ISBN 9780198077350.