உள்ளடக்கத்துக்குச் செல்

மடத்துக்குளம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மடத்துக்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக மடத்துக்குளம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 18 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 181,386 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 90,338 ஆண்களும், 91,048 பெண்களும் உள்ளனர். 52,703 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 72% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 72.21% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14650 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,641 மற்றும் 1155 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.3%, இசுலாமியர்கள் 4.6% , கிறித்தவர்கள் 1% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடத்துக்குளம்_வட்டம்&oldid=2726377" இலிருந்து மீள்விக்கப்பட்டது