மக்னீசியம் சயனைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14205320 |
| |
பண்புகள் | |
Mg(CN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 76.34 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
உருகுநிலை | 500 °C (932 °F; 773 K) (சிதைவடையும்) |
வினைபுரிந்து மக்னீசியம் ஐதராக்சைடு உருவாகும். | |
அமோனியா-இல் கரைதிறன் | சிறிதளவு கரையும் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மக்னீசியம் தயோசயனேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கால்சியம் சயனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் சயனைடு (Magnesium cyanide) என்பது Mg(CN)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த வெள்ளை நிற திடப்பொருளாகும். கால்சியம் ஐசோசயனைடு போலல்லாமல், சயனைடு ஈந்தணைவிகள் 0.3‑கிலோகலோரி/மோல் தடையுடன் கார்பனில் ஒருங்கிணைய விரும்புகின்றன.[1] இந்த உப்பை 500 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும் போது, மக்னீசியம் நைத்திரைடாகச் சிதைகிறது.[2]
தயாரிப்பு
[தொகு]மக்னீசியம் சயனைடை தயாரிப்பதற்கான முதல் முயற்சி 1924 ஆம் ஆண்டில் முயற்சிக்கப்பட்டது. நீரிலுள்ள ஐதரசன் சயனைடின் கரைசலை மக்னீசியம் உலோகத்துடன் வினைபுரியச் செய்வதன் மூலம் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- HCN + Mg → Mg(CN)2 + H2
இருப்பினும், மக்னீசியம் சயனைடு எதுவும் காணப்படவில்லை, மக்னீசியம் ஐதராக்சைடு மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்த சிக்கலைத் தவிர்க்க, தண்ணீரை வினை ஊடகமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தூய அம்மோனியாவை -30 °செல்சியசு வெப்பநிலையில் பயன்படுத்தலாம். வினையில் மக்னீசியம் சயனைடு அம்மோனேட்டு உருவாகும். 180 °செல்சியசு வெப்பநிலைக்கு இது சூடுபடுத்தப்பட்டால் மக்னீசியம் சயனைடு உருவாகும்.[3] மின்சார கார்பன் குழாயில் மக்னீசியம் பெரிசயனைடை சிதைப்பது போன்ற பிற தயாரிப்பு முறைகளும் சாத்தியமாகும். இவ்வினையில் இரும்பு கார்பைடு துணைப் பொருளாக உருவாகிறது.[2]
அணைவுச் சேர்மங்கள்
[தொகு]மக்னீசியம் சயனைடு வெள்ளி நைட்ரேட்டுடன் வினைபுரிந்து MgAg2(CN)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட மக்னீசியம் வெள்ளி சயனைடை உருவாக்குகிறது. இந்தச் சேர்மம் சூடாக்கப்படும்போது, தண்ணீரின் முன்னிலையில் ஐதரசன் சயனைடு வாயு மற்றும் மக்னீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது. அதாவது மக்னீசியம் சயனைடு உற்பத்திக்கான பாதையாக இதைப் பயன்படுத்த முடியாது. வெள்ளி நைட்ரேட்டு சேர்மம் மக்னீசியம் சயனைடுடன் வினைபுரியும் போது, MgAg(CN)3 என்ற வாய்ப்பாடு கொண்ட மற்றொரு மக்னீசியம் வெள்ளி சயனைடை உருவாக்குகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kapp, Jürgen; Schleyer, Paul v. R. (1996). "M(CN)2 Species (M = Be, Mg, Ca, Sr, Ba): Cyanides, Nitriles, or Neither?" (in en). Inorg. Chem. (ACS Publications) 35 (8): 2247–2252. doi:10.1021/ic9511837. பப்மெட்:11666420.
- ↑ 2.0 2.1 2.2 Fr. Fichter; Richard Suter (1924). "Über Magnesiumcyanid" (in German). Helvetica (Wiley) 5 (3): 396–400. doi:10.1002/hlca.19220050311.
- ↑ A. R. Frank, R. B. Booth, American Cyanamid Co., US Patent 2419931, 1947.