பேச்சு:பூரான்
மட்டைத்தேள் என்றும் இதைக் கூறுவரா? அல்லது அது வேற உயிரினமா? --Natkeeran 17:13, 14 டிசம்பர் 2008 (UTC)
- மட்டைத்தேள் என்பது ஒரு வகையான பூரான் என்றூ செ.ப. அகராதி கூறுகின்றது. இதே சொல் ஒரு வகையான தேளையும் குறிக்கும் என்கிறது இந்த அகராதி. வ'ப்ரிசியசு அகராதி இரண்டாவது பொருளாக "a kind of centiped. திருநீல கண்டன்." என்று குறிப்பிடுகின்றது. தலையில்லாத உடலுக்கு மட்டை என்று ஒரு பொருள் உண்டு.(அறிவில்லாமல் இருந்தாலும் கூறுவதுண்டு). வாலில்லாத விலங்கை கூழை, கூழையன் என்று ஊர்புறங்களில் கூறுவர். கூழைக் கும்பிடு என்றால், உள்ளத்துள்ளே உண்மையான அன்போ, மதிப்போ இல்லாமல், பொய்யாக கூனிக் குழைந்து கும்பிடுவதைக் குறிக்கும். பின்னே, உள்ளே ஒன்று "இல்லா" நிலையைக் கூழை என்னும் சொல் குறிக்கும். கூழைக்கடா pelican) என்பது ஒரு பறவை. இதற்கு வால் குட்டை. இத்ஹனால் இதனைக் கூழக்கடா என்பர் (இது எருமை போல குரல் எழுப்பும் என்பது வியக்கத்தக்க உண்மை). எனவே நான் ஒருவகை சிலந்திதேள் வகை உயிரினத்தை கூழைத்தேள் என்று கூறியுள்ளேன். இந்த மட்டைத்தேள் இதுவாக இருக்குமோ என எண்ணுகிறேன். இது ஏதும் தேர்ந்த கருத்து அல்ல, ஒரு முதல் நினைப்பே. மட்டைத்தேள் என்றால் என்னவென்று துல்லியமாய் அறிந்தவர்களை அணுகி அது என்ன என்பதை அறியவேண்டும். தமிழ்நாட்டில் நட்டுவாக்கிளி அல்லது நட்டுவாய்க்காலி என்பார்கள் அதுவும் ஒருவகைத் தேள் இனம்தான். மெள்ளவே பற்றிக் கடிக்கு அல்லது கொட்டும் என்பார்கள். நட்டுவாய்க்காலி என்னும் சொல்லில் உள்ள வாய்க்காலி என்னும் சொல் கைலோப்போடா (chilopoda) என்னும் சொல்லுடன் பொருள் சுட்டுவது ஒத்து இருப்பது வியப்பூட்டுவது, ஆனால் இந்த கைலோப்போடா என்பது பூரான் இனம். யாரேனும் மட்டைத்தேள் என்றால் என்னவென்று வீரிவான விளக்கமோ,படங்களோ தந்து உதவினால் நன்றாக இருக்கும். --செல்வா 18:34, 14 டிசம்பர் 2008 (UTC)
யாழிலை இருக்கேக்க பாம்பு, கறையான், தேள், பூரான், அட்டை, புழு, எறும்பு, ஈ, மசுக்குட்டி, தவளை, நுளம்பு, பல்லி, கிளி, புறா, காகம், கோழி எல்லாம் வீட்டிலையோ அல்லது வீட்டில் இருக்கும் மரங்களிலியோ அல்லது கிணத்திலியே நிறம்ப இருக்கும். இவற்றிலை பாம்பு, தேள், மட்டைத்தேள் (பூரான்) எண்டா பயம். வீட்டில தோட்டமும் இருந்தது. சிறு வயதிலை தீவிலை இருக்கேக்க மழைக்காலத்தில கடலே முற்றத்தில நிற்கும். வத்தேக்க காணி முழுக்க நண்டுகள் செத்துக் கிடக்கும். வயலிலை மீன்கள் கனக்க நிக்கும். அதுக்குப் பிறகு நகரத்திலேயே வாழ்க்கை என்றதால், இயற்கை பிணைப்பு சற்று அற்று போனது. இப்ப ரொறன்ரோ மிருககாட்சிசாலைக்கு கிட்ட வீடு மாறி இருக்கிறம். பக்கத்தில ஆறுகள், காடுகள் எல்லாம் இருக்கு. அடுத்த ஆண்டு இயற்கைப் படம் பிடித்து சேக்கலாம் என்று இருக்கிறேன்.
மட்டைத்தேள் என்று ஊரிலை சொல்ல கேட்டிருக்கன். பூரான் என்றா பனங்க் கொட்டையை பாத்தியல போட்டு அது கிழங்காக முதல் எடுத்து உடைச்சா வெள்ளையா சுவையா இருக்கும் அதைச் சொல்வார்கள்.
"பூரான்:- பனம் விதை; கிழங்கிக்குப் பாத்தி போடும்போது; சில விதைகள்;முளைத்து வேர் பாத்தியூடு நிலத்துக்கோட முடியாதநிலையில்; அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அதைப் பிளந்து உண்ண நல்ல சுவையாக இருக்கும்; கிழங்கான விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் "சிதவல்" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும்." [1]
ஆனா இணையத்தில பூரான் என்றா நீங்க குறிப்பிடும் பொருளில்தான் பெரிதும் வழங்குகிறது.
--Natkeeran 19:02, 14 டிசம்பர் 2008 (UTC)
- நற்கீரன், உங்கள் அருமையான பகிர்வுக்கும், இங்கு பதிவித்தமைக்கும் மிக்க நன்றி. நீங்கள் கூறுவதிலிருந்து பார்த்தால் பூரான் என்று தமிழ்நாட்டில் கூறப்படும் உயிரினத்தைத்தான் நீங்கள் மட்டைத்தேள் என்று குறிப்பிடுகின்றீர்கள். வேறு யாழ்ப்பாணத் தமிழர்களும் உறுதி செய்தால் நன்றாக இருக்கும். மட்டைத் தேள் என்று நான் முதலில் கேட்டபொழுது தென்னை, பனை மட்டைக்கும் இந்த தேளுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா என எண்ணினேன். நட்டுவாய்க்காலி தென்னை மரத்தில் இருப்பதாகச் சொல்வார்கள். எனவே மட்டைத்தேள் நட்டுவாய்க்காலியாக இருக்குமோ என எண்ணினேன். ஆனால், நீங்கள் நேரிலேயே பார்த்து அறிந்திருப்பதால் பூரானைத்தான் மட்டைத்தேள் என்கிறீர்கள் என்று அறிகிறேன். பூரானைப் பார்க்க தேளின் வாலும் கொடுக்கும் போல் இருப்பதால், அதன் தலை,உடல் இல்லாத தேள் என்னும் பொருளில் மட்டைத்தேள் என்று கூறுகிறார்களோ என்று நினைக்கின்றேன். பனம் விதையில் இருந்து முளைக்கும் குருத்தைப் பூரான் என்று அழைக்கின்றீர்கள் என்று இப்பொழுதுதான் அறிகிறேன். ஆனால் சிதவல் என்பது ஓரளவிற்கு நன்றாக அறிந்த சொல். ஏதொன்றும் புரையோடி இருப்பதை சிதவல் என்பார்கள். கந்தைத் துணிக்குக் கூட சிதவல் என்று பெயர் (ஏதொன்றும் பொத்தல், ஓட்டை விழுதலுக்குப் பெயர்). தொடர்பான சொற்களில் சிதலம் = பதனழிவு; சிதலை = கறையான், நோய். என்பதைக் கூறலாம். மரத்தை உள்ளூடு அரிக்கும் கறையானின் செயலைத் தெளிவாகக் குறிக்கும் சிதலை என்னும் சொல். சிதவல் என்பதற்கு சிதறுதல் என்றும் பொருள். எனவே பொள்ளுற்று சிதறுவதற்கும் கூறலாம் என்பதால் sputter, sputtering என்னும் செயல்முறைக்கும் கலைச்சொல்லாகக் கூறலாம். --செல்வா 23:12, 14 டிசம்பர் 2008 (UTC)
- தகவலுக்கு நன்றி சுந்தர். இதனால் மட்டைத்தேள் என்று பெயர்வந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். பூரம், செய்யான் என்பன பூரானையும், தேளையும் சுட்டுகின்றன. எங்கள் வீட்டிலும், செய்யான், செம்பூரான் என்னும் சொற்களை செம்பழுப்பு நிறத்தில் இருக்கும் பூரானைக் குறிக்க பயன்படுத்துவோம். --செல்வா 04:00, 15 டிசம்பர் 2008 (UTC)
ஆங்கிலப் பெயர் தேவையா ?
[தொகு]தகவல் சட்டத்தில் தலைப்பில் ஆங்கிலப்பெயர் தேவையா? டாய்ட்சு, பிரான்சிய மொழிகளில் அப்படி இடவில்லையே? டாய்ட்சு மொழியில் Hundertfüßer என்றும், எசுப்பானிய மொழியில் Ciempiés என்றும், பிரான்சிய மொழியில் Chilopodes என்றும்தானே கொடுத்துள்ளார்கள்? தமிழ்க்கட்டுரையில் எங்கேனுமோ, அடிக்குறிப்பாகவோ நூறுகாலிகள் என்று பொருள்படும் centipede என்று ஆங்கிலத்திலும் Hundertfüßer என்று டாய்ட்சு மொழியிலும் கூறுகிறார்கள் என்று கூறலாம்; ஆனால் இவற்றிற்கு நூறுகால்களுக்குக் குறைவாகவே உண்டு, மிகக்கூடுதலாக உள்ளவற்றுக்கும் பெரும்பாலும் 70 உக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் குறிப்பிடலாம். தகவற்சட்டத்தில் தலைப்பில் இடுவதானால், "அறிவியற்பெயரை" இடலாம், ஆனால் இது ஏற்கனவே சட்டத்தினுள் உள்ளது. --செல்வா 15:12, 15 டிசம்பர் 2008 (UTC)
- உதடு என்பது உதடு தான் என்று எந்தப் பிள்ளைக்கும் தெரியும். அதனை நாம் மொழிபெயர்த்து lip என்று அடைப்புக் குறிக்குள் எழுதத் தேவையில்லை. இப்படியான தமிழ்ப் பெயர்களை மொழிபெயர்த்து எழுதுவதில் என்ன நியாயம்? பூரான் இலங்கையில் வழக்கத்தில் உள்ள பெயர் தான் என்றாலும் மட்டத்தேளும் இதுவும் ஒன்றுதானா என்பது தெரியவில்லை. எனவே இவற்றை வேறுபடுத்துவதற்கு விரும்பியோ அல்லது விரும்பாமலோ நம்மை ஆண்டவர்கள் உருவாக்கிய பெயர்களைக் கொண்டு இவற்றை வேறுபடுத்தலாம்.--Kanags \பேச்சு 20:05, 15 டிசம்பர் 2008 (UTC)
- கனகு அருள்கூர்ந்து சற்று பொறுமையாக நான் இங்கு கூறுவதை நோக்க வேண்டுகிறேன். Oxford English Dictionary ஐ நான் மேற்கோளாகக் காட்டியிருந்தேன். அவ்வகராதியில் lip என்று கொடுத்துள்ளதால் அதனை காட்ட கடமைப்பட்டுள்ளேன். lip என்று அவர்கள் கொடுத்துள்ளதை நான் உதடு என்று மொழிபெயர்த்துள்ளேன். ஆகவே அதனை குறிப்பிட்டேன். அது தேவை என்பதை உணர வேண்டுகிறேன். அவர்கள் "foot-jaw" என்று கொடுத்துள்ளதையும் நான் குறிப்பிட்டுள்ளேன். உதடு என்பது விளங்காது என்பதற்காக lip என்று நான் தரவில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலச்சொல்லையும் டாய்ட்சு சொல்லையும் தருவதில் எனக்கு எதிர்ப்பு இல்லை, ஆனால் தகவல் சட்டத்தில் தலைப்பில் தருவது வேண்டாம் என்பது என் நினைப்பு மற்றும் பரிந்துரை. இங்குள்ள நீங்களும் மற்றும் பலரும் வேண்டும் என்றால் கட்டாயம் இருக்கட்டும். நீங்கள் என்னுடைய கேள்வியைத் தவறான கோணத்தில் எதிர்கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். --செல்வா 20:35, 15 டிசம்பர் 2008 (UTC)
- ஆம் கனகு. கைலோசு என்பதற்கு ஆங்கில விளக்கம் lip என்பதற்கான சான்று மட்டுமே உள்ளதல்லவா? அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததாலேயே செல்வா அதை அடைப்புக்குறிகளுள் தந்திருக்கிறார். மற்றபடி centipede என்பது வழக்கம்போல முதல்வரியில் தரப்பட்டுள்ளதால், தகவல் சட்டத்தில் தரத்தேவையில்லை என்று நினைக்கிறேன். அதுவும், இங்கே தகவல் சட்டத் தலைப்புப் பகுதி வேறு நீண்டுள்ளது. -- சுந்தர் \பேச்சு 03:04, 16 டிசம்பர் 2008 (UTC)
- நன்றி சுந்தர். இப்பொழுது "lip" என்று மாற்றியுள்ளேன்.--செல்வா 03:41, 16 டிசம்பர் 2008 (UTC)
மேற்கோள்
[தொகு]நன்றி சுந்தர். ஒரே சான்றுநூலைப் பெயர் சூட்டாமல் இரண்டு முறை நான் இட்டது தவறு என்று தெரியும், பின்னர் திருத்திக்கொள்ளலாம் என இருந்தேன். திருத்தித் தந்தமைக்கு நன்றி. நாளை நீங்கள் யாகூவில் இருந்து எடுத்து இட்டமாதிரியே நானும் ஆக்சுபோர்டு ஆ.அ யில் இருந்து இடுகின்றேன்.--செல்வா 04:02, 16 டிசம்பர் 2008 (UTC)