நுளம்பு
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
நுளம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Hemiptera
|
குடும்பம்: | Cicadidae
|
பேரினம்: | Abricta
|
இனம்: | A. curvicosta
|
இருசொற் பெயரீடு | |
Abricta curvicosta (கெர்மர்) |
நுளம்பு (Abricta curvicosta, பொதுவாக floury baker, அல்லது floury miller[1]) என்பது மாட்டைக் கடிக்கும் ஈ. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் நுளம்பு என்பது ஆளைக் கடிக்கும் கொசுவைக் குறிக்கப் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் (semantics) என்கின்றனர்.
குறுந்தொகையில் நுளம்பு
[தொகு]உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீட்டில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.[2]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)