தேள்
தேள் Scorpion | |
---|---|
ஆசியக் காட்டுத் தேள் (Heterometrus spinifer) (தாய்லாந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | Arthropoda
|
துணைத்தொகுதி: | Chelicerata
|
வகுப்பு: | Arachnida
|
துணைவகுப்பு: | Dromopoda
|
வரிசை: | Scorpiones C. L. Koch, 1837
|
Superfamilies | |
Pseudochactoidea |
தேள் (Scorpion) என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள், செந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
அனைத்துத் தேளினங்களும் நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. வயது வந்த மனிதர்களுக்கு இவற்றின் கடிக்கு மருத்துவம் தேவையில்லை.[1] 25 இனங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மையுடைய நஞ்சினைக் கொண்டிருக்கின்றன.[2] உலகின் சில பகுதிகளில் நச்சுத்தன்மை மிக்க தேள்களால் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும் இப்பகுதிகளில் மருத்தவ வசதி குறைந்த இடங்களாகவே உள்ளன.[1]
உடலமைப்பு
[தொகு]இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
வாழ்க்கை முறை
[தொகு]தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.
