பேச்சு:ஈ. வெ. இராமசாமி
ஈ. வெ. இராமசாமி என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஈ. வெ. இராமசாமி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
ஈ. வெ. இராமசாமி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
வர்ணாஸ்ரம தர்மம் என்பதை வர்ணாஸ்ரம விழுமியம் (Value) என்ற அளவில் தான் தமிழ்படுத்த என்னால் முடிந்தது. வர்ணாஸ்ரமம் என்பதை நிறப்பிரிகை என்று தமிழில் எழுதலாமா ?? - Santhoshguru 14:20, 23 ஆகஸ்ட் 2005 (UTC)
- நிறப்பிரிகை ஏற்கெனவே diffraction of light (prism) என்ற பொருளில் ஒளி கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் இனப்பாகுபாட்டு விழுமியம் என்று கொள்ளலாமா? -- Sundar \பேச்சு 17:52, 23 ஆகஸ்ட் 2005 (UTC)
- ஓ ! நிறப்பிரிகை என்பது diffractionக்கான தமிழாக்கமா !!! அப்பதத்தினை எங்கோ படித்த ஞாபகம் இருந்தது ஆனால் என்ன அர்த்தம் என்பதை மறந்துவிட்டேன். இனப்பாகுபாட்டு விழுமியம் என்பது எவ்வளவு சரியானது (accurate) என்று தெரியவில்லை. வர்ணாஸ்ரமத்திற்கு நல்ல தமிழ் பெயரினை S.V.ராஜதுரையின் புத்தகத்தில் படித்த ஞாபகம். அதை தேடிப் பார்க்கிறேன். - Santhoshguru 08:20, 24 ஆகஸ்ட் 2005 (UTC)
- வர்ணாசிரமம் என்பது ஒற்றைச் சொல் அல்ல. 4 வகை வர்ணங்கள் (பிராமண , சத்திரிய , வைஷ்ய, சூத்திர ) மற்றும் 4 வகை ஆசிரமங்கள் (பிரம்மச்சரியம், கிரகஸ்தம் , வானப் பிரசித்தம், சந்நியாசம் ) ஆகியவற்றைக் குறிக்கும் தொகை சொல். இவற்றின் அர்த்தங்ககளை முழுமையாக புரிந்து கொண்டால்தான் மொழி பெயர்க்க அல்லது தமிழில் புதிய சொல்லை உருவாக்க இயலும். புத்தர் திருமணத்திற்கு முன்னர் சத்திரிய பிரம்மச்சரியத்தில் இருந்தார். திருமணத்திற்குப் பின் சத்திரிய கிருகஸ்தர் ஆனார். ஆட்சியையும் குடும்ப வாழ்வையும் பிரிந்து பிட்சை ஏற்று வாழும் துறவியான போது பிராமண சந்நியாசி ஆனார்.--Mageshsai (பேச்சு) 04:05, 3 சூலை 2023 (UTC)[பதிலளி]
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://keetru.com/rebel/index.htm
- In ஈ. வெ. ராமசாமி on 2007-05-06 10:25:38, 404 Not Found
- In ஈ. வெ. ராமசாமி on 2007-05-06 11:33:03, 404 Not Found
- In ஈ. வெ. ராமசாமி on 2007-05-14 00:57:19, 404 Not Found
--TrengarasuBOT 01:01, 14 மே 2007 (UTC)[பதிலளி]
பெரியாரைப் புரிந்து கொள்ள
[தொகு]பெரியாரைப் புரிந்து கொள்ள -1
பெரியார் அவர்களைப் பற்றிப் பலர் பல விதமானக் கருத்துக்களைச் சொல்லி,எழுதி வருகின்றனர்.அவர் அவருடையக் கருத்துக்களையே மாற்றிக் கொண்டு"நான் என்ன கல்லா? மாறாமல் இருக்க?காலம் மாறும் போது
கருத்துக்கள் அதற்கேற்றால் போல மாறவேண்டும்." என்று கூறித் தான் மாறியுள்ள காரணங்களை எடுத்துச்
சொல்லியுள்ளார்,விளக்கமாக.
பெரியார்மேல் அவதூறு சொல்பவர்கள் இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விமர்சிப்பது கருத்து நாணயம் ஆகாது.அதே போல பெரியார் சொன்னார் என்று எதையாவது சொல்வது.அதை ஏன் சொன்னார்,எதற்காகச் சொன்னார் என்றெல்லாம் அவரது கருத்துக்களை சொல்லாமல் சொல்வது.இது மிகவும் கேவலாமான எழுத்துக்க்ள் ஆகும்.
தமிழ் வலைப் பதிவுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன்.பலதரப் பட்டவர்களும் எழுதுகின்றார்கள்.அவர்கள் நேர்மையைக் கடைப் பிடிப்பது அனைவர்க்கும் நல்லது.
இந்தக் கட்டுரைகளிலே பெரியார் கருத்துக்களையும்,அதற்கு அவர் சொன்ன காரணங்களையும் அனைவரும் புரிந்து கொள்ள எடுத்துவைப்போஒம்.
பெரியார் "தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்றார் என்பது அனைவருங் கேள்விப் பட்டதுதான். ஏன் சொன்னார் என்பதைப் பல முறை விள்க்கிச் சொல்லியுள்ளார். உலகம் வேகமாக அரிவு வளர்சிசியில் முன்னேறி வரும் போது தமிழ் இன்னும் பழைய காலத்திலேயே இருப்பதையும்,பழைய இலக்கியங்களைப் பற்றியே நேரம்,உழைப்பைச் செலவு செய்வதையும் வன்மையாகக் கண்டித்தார். பள்ளியிலே சந்திர கிரஹணத்தைப் பற்றி சொல்லித் தரும் அறிவியல் ஆசிரியர் பள்ளிக்கு வெளியில் சென்றதும் என்ன செய்கின்றார். அறிவியல் மூலமாகச் சிந்தித்தது மட்டுமன்றி பல உலக அறிஞர்களின் கண்டு பிடிப்புக்களை,வெளியீட்டுக்களை தமிழில் மொழி பெயர்த்துக் குறைந்த விலையில் விற்றுத் தமிழர்கட்கு வெளியுலகத்தை அறிமுகப் படுத்தி வைத்தார். புலவர்களிடமே ஒளிந்து கொண்டிருந்த திருக்குறளை திருக்குறள் மாநாடுகள் நடத்தி மக்களிடம் கொண்டு வந்தார்.தனித் தமிழ் இயக்கத்தை ஆதரித்துத் தமிழ் வளர்த்தார். பயனர்:பெரியார்தமிழன்
தலைப்புகளில் ஒரே மாதிரியான பின்பற்றல் கடைபிடிக்கபடுகின்றதா? ஆங்கில விக்கிக்கும் நமக்கும் பேறுபாடு உண்டா? பல இடங்களில் பட்டங்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து விக்கிப் பட்டறையில் அலசப்பட்டது. ஒரே மாதிரியான பின்பற்றல் கடைப்பிடித்தால் சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் நீக்கியிருக்கின்றார்கள் தமிழில் இருக்கின்றது தமிழில் நீக்கியிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றது. இங்கும் அதே மாதிரி தான் உள்ளது.--செல்வம் தமிழ் 11:45, 25 ஜூன் 2009 (UTC)
தனிப்பக்கம்
[தொகு]எச்சரிக்கை: இந்தப் பக்கம் 73 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும்.
மிகுதியான தகவல்கள் என்பதால் தனிப்பக்கங்களை பிரித்து செயல்படுத்தலாம்.
32க்கும் 73க்கும் உள்ள வேறுபாட்டை விக்கயன்பர்கள் கண்டு கொண்டார்களா.
அறிமுகத்திற்கே தனிப்பக்கம் அமைக்கும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. கவணத்தில் கொள்ளவும்,.
நன்றி!.
பயனர்:Sodabottle [1] இந்த கட்டுரையில் இர்ப்பவரின் பெயர் ஈரோடு வேங்கடசாமி இராமசாமி நாயக்கரா? ஈரோடு வெங்கடசாமி இராமசாமி நாயக்கரா? ஈரோடு வேங்கடப்ப இராமசாமி நாயக்கரா? நீங்கள் உங்கள் நூலில் வேறு எங்கும் இல்லாதவாறு வேங்கடப்ப என்று எழுதியுள்ளீர்களே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
பெரியார் மாற்று மதங்களை விமர்சிக்கவில்லை என்பது பொய். அந்த கருத்தை இக்கட்டுரையிலிருந்து நீக்கவும்.
- எனில் வேறு மதங்களை விமர்சித்தற்கு சான்றுகளைச் சுட்டுங்கள். நாங்கள் அதை இணைத்துவிட்டு நீங்கள் கூறிய அந்த வாக்கியத்தை மட்டும் நீக்குகிறோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:14, 19 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
பட்டப்பெயர் வழிமாற்றுகளுக்கும் பெயரில் அமைந்த இடங்கள், நினைவகங்கள் போன்றவற்றுக்கும், கட்டுரையின் முதலிலும் பட்டப்பெயர் காரணம் குறிக்கவும் இருந்தால் போதுமானது. ஏற்கனவே மாவீரன் அழகுமுத்துக்கோன் மாவீரன் புலித்தேவன் போன்ற பெயர்களில் உள்ள அடைமொழிகள் நீக்கப்பட்டு தான் எழுதப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 19 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
நடு நிலை இல்லாத ஆனாலும் பலராலும் அறிந்துகொள்ளும் பெயர் விதியின் படி இக்கடுரையினை பெரியார் ஈ. வெ. இராமசாமி என பட்டப்பெயரோடு சேர்த்து பெயரிட பரிந்துரைக்கின்றேன். இம்முறையே ஆங்கில தமிழ்விக்கியிலும் உள்ளது. (எ.கா: வாஞ்சிநாதன், டல்ஹவுசி பிரபு, இர்வின் பிரபு, தீரன் சின்னமலை, இராணி இலட்சுமிபாய் ) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:15, 20 பெப்ரவரி 2015 (UTC)
ஈ. வெ. இராமசாமி என்ற பெயரில் வேறு யாராவது இருக்கிறார்களா? இருந்தால் குழப்பம் வரும் எனலாம். நீங்கள் காட்டிய விதியை விட இவ்விதி தான் செத்த மனிதர்க்கும் வாழும் மனிதர்க்கும் பொருந்தும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:54, 20 பெப்ரவரி 2015 (UTC)
தீரன் என்பது பட்டம் தான். அதை நீக்கனும். சின்னமலை ஜமீன்கள் பலருக்கு சின்னமலை பெயர் இருப்பதால் வழிமாற்று கொடுக்கலாம்.
டல்ஹௌசின்னாவே தெரியுமே. அது என்ன டல்ஹௌசி பிரபு? அதிலும் பிரபுவை எடுத்துரலாம்.
இராணி இலட்சுமிபாயின் உண்மைப்பெயர் மணிகர்னிகா. ஆனால் கல்லாணம் கட்டிக்கின்ன பிறகு தான் இராணி இலட்சுமிபாய். இதை மாத்தினால் திருமணம் ஆன பெண்களின் பட்டப்பெயர்களை எல்லாம் மாற்ற வேண்டி வரும். அதனால் இது அப்படியே இருக்கலாம்.
இராமசாமியின் பிறப்புப் பெயர் இராமசாமி நாயக்கர் தான். அப்படியே வைக்கலாமா? கூடாது. அவர் நாயக்கர் பெயரை எடுக்கனும் சொல்லி இராமசாமி மட்டும்தான் என அறிவித்துக்கொண்டார் என நினைக்கிறேன். அரசாங்க ஆவணங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் பெரியார் என்பது ஏதோ மகளிர் மாநாட்டில் கொடுக்கப்பட்ட பட்டம் தானே?
வாஞ்சிந்தானுக்கு வழிமாற்று வைக்கலாம்.
பட்டங்கள் பெரும்பாலும் அரசியலுக்காக கொடுக்கப்படுபவை. அதை புறக்கணிப்பது நல்லது.
ஆங்கிலத்தில் இடல்ஹவுசி கட்டுரை பெயரிது. James Broun-Ramsay, 1st Marquess of Dalhousie --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:01, 20 பெப்ரவரி 2015 (UTC)
- Use commonly recognizable namesஇன் படிதான் மாற்ற பரிந்துரைத்தேன். ஆங்கில விக்கியிலும் Periyar E. V. Ramasamy என்று தான் உள்ளது. அவரின் commonly recognizable name பெரியார் என்பது தானே? இயற்பெயரான இராமசாமி நாயக்கர் என்று மாற்றினால் அதே விதிப்படி வாஞ்சிநாதன் கட்டுரையினை வாஞ்சி ஐயர் என்றுதானே மாற்ற வேண்டி வருமே? அப்படித்தானே அவரும் கையொப்பமும் இட்டிருக்கின்றார்! --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:54, 20 பெப்ரவரி 2015 (UTC)
வாஞ்சிநாதனின் இயற்பெயர் சங்கரன் என உள்ளது. சங்கரன் ஐயர் என்றிருந்தால் மாற்றலாம். ஆனால் மற்றவர் கருத்துக்களையும் கேட்போம். ஆங்கில விக்கியில் மகாத்மாகாந்தி எனப்போடனும் எனச் சொல்கிறார்கள். ஆனால் இங்கு மோகன்தாசு கரம்சந்து காந்தின்னு இருக்கு. ஒரே கன்பியூசன் ஆஃப் தி கான்சுடிடியூசன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:39, 20 பெப்ரவரி 2015 (UTC)
ஆனால் கட்டுரைக்குள் எல்லா இடத்திலும் பட்டப்பெயர் வருவதை மாற்றுவது சிறந்தது. காந்தி கட்டுரையில் மகாத்மா பட்டம் சில தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:21, 20 பெப்ரவரி 2015 (UTC)
பயனர்:Natkeeran இரண்டு உட்தலைப்புக்குள்ளும் கொஞ்சம் பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:23, 20 பெப்ரவரி 2015 (UTC)
- நிறைய "சுவாமிகளின்" பெயர்களை அவர்களின் அறியப்பெற்ற பெயர்களைக் கொண்டே பயன்படுத்துகிறேம். எ.கா சத்திய சாயி பாபா, விவேகானந்தர், அன்னை தெரேசா. ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்று கட்டுரை முழுக்க எழுதினாலும், பிற கட்டுரைகளிலும் தொடுப்புக் கொடுத்தாலும், பெரும்பாலனவர்கள் இலகுவாக புரிந்து கொள்ள மாட்டார்கள். இயற்பெயரைக் கொண்டே பயன்படுத்துவது என்றால், பல கட்டுரைகள் மாற்றப்பட வேண்டி வரும். பெரியார் என்றே பரவலாக அறியப்பெற்றவர். பெரியாரியல் என்ற ஒரு துறையே உண்டு. என்வே அதனைக் இக் கட்டுரையில் பெரியார் என்று பயன்படுத்துவதே பொருத்தம். அவ்வாறு மாற்றவுள்ளேன். --Natkeeran (பேச்சு) 19:15, 20 பெப்ரவரி 2015 (UTC)
கட்டுரைப்பெயர் சரி. பலருக்கு அறியப்பட்ட பட்டம் தான் உள்ளன. ஆனால் கட்டுரைக்குள்ளே அந்த பட்டத்தை அனைத்து இடங்களிலும் திணிக்கனுமா என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:24, 20 பெப்ரவரி 2015 (UTC)
மகாத்மா பிறந்தார், வீரன் சண்டையிட்டான், இராணி ஆட்சி செய்தாள், பெரியார் பிறந்தார் இதெல்லாம் ஏதோ குழப்புற மாதிரி இல்ல?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:25, 20 பெப்ரவரி 2015 (UTC)
பெரியார் என்பது பட்டமாக தான் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு மகளிர் மாநாட்டில். பட்டம் என்பது படித்து வாங்குவதை மட்டும் சொல்லவில்லை. பாராட்டிக் கொடுக்கும் அடைமொழிகளுக்கும் தான். ஏற்கனவே நான் மெலே குறிப்பிட்டதை தான் நீங்கள் மீண்டும் குறிப்பிடுகிறீர்கள். உங்களின் பார்வைக்கு மீண்டும் தருகிறேன்.
//பட்டப்பெயர் வழிமாற்றுகளுக்கும் பெயரில் அமைந்த இடங்கள், நினைவகங்கள் போன்றவற்றுக்கும், கட்டுரையின் முதலிலும் பட்டப்பெயர் காரணம் குறிக்கவும் இருந்தால் போதுமானது.//
பாவேந்தர் பாரதிதாசன் என்பதற்காக பாவேந்தர் பாவேந்தர்னா கட்டுரை முழுதும் எழுதுறாங்க.?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:39, 20 பெப்ரவரி 2015 (UTC)
இந்த இணைப்பில் தலைப்பு தான் பரவலான பெயரை பயன்படுத்தக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் எடுத்துக்காட்டான மகாத்மா காந்தி என்பத கட்டுரைப் பெயர் தான். ஆனால் கட்டுரைக்குள் அனைத்தும் மகாத்மா மகாத்மான்னு வலிந்து திணிக்கவில்லையே? இங்க மட்டும் எதுக்கு புது டிசைன்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:44, 20 பெப்ரவரி 2015 (UTC)
- பெரியார் என்பது பட்டப்பெயராக வழங்கப்பட்டு இருந்தாலும், அதை அவரை அழைக்கும் பெயராகவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பலருக்கு பல சூழ்நிலைகளில் பிற பெயர்கள் வழங்கப்படுவதுண்டு. மேலும், சுவாமிகள் பற்றிய கட்டுரைகளில் சுவாமி சுவாமி என்று வழங்கப்படுகிறது. இன்னுமொரு எ.கா திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், சுவாமி சித்ரூபானந்தா. ஆகவே, நாம் ஒரே மாதிரி வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். --Natkeeran (பேச்சு) 20:43, 20 பெப்ரவரி 2015 (UTC)
எல்லை காந்தி என்றால் அது கான் அப்துல் கப்பார் கான் கருப்பு காந்தி, கர்மவீரர் என்றால் அது காமராசர் பேரறிஞர் அண்ணா என்றால் அது அண்ணாதுரை, கவியரசு என்றால் அது கண்ணதாசன் இது மாதிரி நிறைய உள்ளது அதனால் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பட்டங்களை தலைப்பில் தவிர்க்க வேண்டும் வழிமாற்று கொடுக்கலாம் கட்டுரையின் உள்ளே இவ்வாறு அறியப்படுகிறார் என்று சொல்லலாம். திருத்தந்தை, சுவாமி என்பவையும் பட்டம் தானே? பெயர் அல்லவே --குறும்பன் (பேச்சு) 04:39, 21 பெப்ரவரி 2015 (UTC)
இந்த உரையாடலுக்குப் பின் தலைப்பில் பட்டம் வைக்கலாம் என்கிறேன் நான். ஏனெனில் எனக்கு ஈ.வெ.இரா. என்றால் யாரெனவே தெரியாது 4 ஆண்டுகளுக்கு முன். ஆனால் கட்டுரைக்குள் எங்கெடுத்தாலும் பட்டத்தை வலிந்து திணிப்பதில் அரசியல் நோக்கம் மட்டுமே இருப்பதாக கருதுகிறேன். இராமசாமி வந்தார் போனார் எனக் கட்டுரையில் கொடுப்பதால் மக்களுக்கு புரியாமல் போக வாய்ப்பில்லை.
இங்கு எடுத்துக்காட்டுகள் கட்டனும் என்றால் இரண்டுத் தரப்புக்கும் ஏதுவாக பல தலைப்புகள் உள்ளன. அதனால் எடுத்துக்காட்டுகள் தருவதை விட்டு குறும்பன் சொல்வது கொள்கை வகுக்கலாம். பட்டங்களை அரசியலுக்காக வலிந்து கட்டுரைக்குள் கொசகொச என திணிப்பதை தவிர்ப்பது நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:03, 21 பெப்ரவரி 2015 (UTC)
- ஆங்கில விக்கிபீடியாவில்
http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy என்ற பக்கத்தில் தவறாக பட்டத்தை கட்டுரையின் பெயரில் சேர்த்துள்ளார்கள். கட்டுரையின் தலைப்பில் பட்டப்பெயர் இருக்கக்கூடாது. அங்கு பெயர் மாற்ற கோரிக்கையை வைக்கவேண்டுமே தவிற அங்கு இருப்பதை சரியா தவறா என்றுப் பார்க்காமல் அங்கு இருப்பதை Source of Truthஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். உதாரணமாக http://en.wikipedia.org/wiki/C._V._Raman http://en.wikipedia.org/wiki/Louis_Mountbatten,_1st_Earl_Mountbatten_of_Burma போன்ற பக்கங்களைப் பார்க்கலாம். மூலக்கட்டுரையை பட்டமில்லாமல் இயற்பெயருடன் உருவாக்கிவிட்டு. அந்த கட்டுரைக்கு பட்டத்துடன் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்குவதே சரியாக இருக்கும்.--தமிழ்வேந்தன் (பேச்சு) 16:16, 1 மார்ச் 2015 (UTC)
- "பெரியார்" என்ற பெயரை பரவலாக பயன்படுத்தப்படும் பெயர் என்பதால் "ராகவ ஈரோடு வெங்கட ராமசாமி நாயக்கர்" என்ற இயற்பெயர் கொண்ட ஒருவரின் பக்கத்திற்கு வழிமாற்றம் செய்யலாம் என்றால் "அம்மா" என்றால் ஜெயலலிதா அவர்களுக்கும் "கலைஞர்" என்றால் கருணாநிதி அவர்களுக்கும் "தளபதி" என்றால் ஸ்டாலின் அவர்களுக்கும் வழிமாற்றி விடலாமா. பெரியார் என்ற சொல்லிற்கு பல பொருட்கள் உள்ள நிலையில் பெரியார் என்ற விக்கிபீடியா கட்டுரைக்கு வந்தால் நான் ஏன் ஈ.வெ.ராமசாமி பக்கத்திற்கு வந்து பிறகு வழிமாற்று பக்கத்திற்கு செல்லவேண்டும். மேலும், ராமசாமி இறந்து சில வருடங்கள் வரை அவரை "பெரியார் ராமசாமி" என்று தான் அழைத்திருக்கின்றனர். http://en.wikipedia.org/wiki/C._V._Raman http://en.wikipedia.org/wiki/Louis_Mountbatten,_1st_Earl_Mountbatten_of_Burma போன்ற கட்டுரைகளில் உள்ளதைப் போல மூலக்கட்டுரையை பட்டமில்லாமல் இயற்பெயருடன் உருவாக்கிவிட்டு அந்த கட்டுரைக்கு 'பெரியார் ராமசாமி' என்ற பட்டத்துடன் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்குவதே சரியாக இருக்கும். 'பெரியார்' என்ற கட்டுரை வழிமாற்றுப் பக்கமாக இருக்கவேண்டும்.--தமிழ்வேந்தன் (பேச்சு) 16:16, 1 மார்ச் 2015 (UTC)
- நீங்கள் கூறியது போல திருந்தந்தை, அன்னை தெரசா, சாமிகள், முனிகள், காந்தி, அரசர்கள் அங்கும் கட்டுரையின் பெயர்களில் மாற்றம் வேண்டும். பெரியாரியல், பெரியாரியம் போன்றவை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் பின்பற்றும் கொள்கைகள். ஆகையால், அந்த கட்டுரைகளுக்கு "பெரியாரியம் (அரசியல்)" என்று கட்டுரைப் பெயரில் சேர்க்கலாம். --தமிழ்வேந்தன் (பேச்சு) 19:07, 1 மார்ச் 2015 (UTC)
- இப்போதுள்ள ஈ. வெ. இராமசாமி என்ற தலைப்பே சரியானது. எதற்காக இவ்வளவு தேவையற்ற உரையாடல் (நான் முழுவதும் படிக்கவில்லை) என்று தெரியவில்லை.--Kanags \உரையாடுக 20:02, 1 மார்ச் 2015 (UTC)
- @Kanags:
- ஒருவர் தனது பெயரை மாற்றிக்கொண்டப்பின்பு கட்டுரைத்தலைப்பு இயற்பெயரில் இருக்கவேண்டுமா மற்றப்பட்டப் பெயரில் இருக்கவேண்டுமா?
- ஏன் தமிழ் விக்கிப்பீடியாவில் Use commonly recognizable names விதி ஏன் பயன்படுத்தக்கூடாது? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:08, 3 மார்ச் 2015 (UTC)
- @Kanags:
- இப்போதுள்ள ஈ. வெ. இராமசாமி என்ற தலைப்பே சரியானது. எதற்காக இவ்வளவு தேவையற்ற உரையாடல் (நான் முழுவதும் படிக்கவில்லை) என்று தெரியவில்லை.--Kanags \உரையாடுக 20:02, 1 மார்ச் 2015 (UTC)
//Use commonly recognizable names என்ற விதியின் படி, இக் கட்டுரை பெரியார் என்று அமைய வேண்டும்.//
தலைப்பு: இந்த commonly recognizable name பலருக்கு இருந்தது. அதுவும் இவருக்கு முன்னரே இருந்த போது கட்டுரைப்பெயர் பெரியார் என அமைவது சரியில்லை. பெரியார் இராமசாமி கொஞ்சம் சரியாக வருவது போல் தெரிகிறது.
வழிமாற்று; பெரியார் பெயர் வழிமாற்றும் இப்பக்கத்துக்கு வருவது சரியல்ல என நினைக்கிறேன். பக்கவழிமாற்றுத் தலைப்பே பெரியார் என்ற பெயருக்கு போவது நன்றெனக் கருதுகிறேன். அதில் காலவாரியாக பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டவர்களை வரிசைப்படுத்தி அதில் கடைசியில் இவரைப் போடலாம். இவருக்குப் பிறகு வேறு யாரும் இதுவரைக்கும் அப்படி அழைக்கப்பட்டதாக நினைவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 3 மார்ச் 2015 (UTC)
- //Use commonly recognizable names என்ற விதியின் படி, இக் கட்டுரை பெரியார் என்று அமைய வேண்டும். கூகிளில் முதல் 100 பக்கங்கள் வரை பெரியார் என்ற தேடலுக்கு பெரியாரைப் பற்றித்தான் கட்டுரைகள் வருகின்றன என்பது இதற்கு சான்று.//
- Google Search Algorithmக்கும் Commonly Recognizable Namesக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. பெரியார் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் மட்டுமே பயன்படுத்தும் பெயர்(அரசால் கொடுக்கப்பட்ட விருதோ பட்டமோ அல்ல). அக்கட்சியினரின் ஊடகங்கள் மட்டுமே பெரியார் என்ற பெயரை 95%க்கும் மேல் பயன்படுத்துகின்றன. ஆகையால், பெரியார் என்ற Search Engine தேடலில் அவர்கள் கட்டுரைகள் மட்டுமே வரும். அதை எப்படி Commonly recognizable names என்ற வகையில் எடுத்துக்கொள்ள முடியும். திராவிடக் கட்சியினரிடம் சென்று பெரியார் யார் என்று கேட்டால் அவர்கள் பதில் ஈ.வெ.ராமசாமி நாயக்கராக இருக்கும். இதே கேள்வியை சைவ ஆதீனத்தில் சென்று கேட்டால் அவர்கள் சைவப் பெரியார்களைக் கூறுவார்கள். எனக்குத் தெரிந்து தந்தை செல்வாவை பெரியார் என்று அழைப்பவர்களும் உண்டு. ஆகையால், சைவப் பெரியார்களின் பக்கங்களுக்கும் தந்தை செல்வா அவர்களின் பக்கங்களுக்கும் பெரியார் என்ற வழிமாற்றலை உருவாக்க முடியாதல்லவா. Commonly Recognizable Names என்றால் பொதுமக்களால் பொதுவாக அறியப்படும் பெயர். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியால் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் அறியப்படும் பெயரல்ல. அக்காலத்திலிருந்து இக்காலம் வரை இன்னும் பெரும்பான்மை மக்களுக்கு, பெரியார் என்றால் யாரென்றே தெரியாது. என்னைப் பொறுத்த வரை சாதி மத கட்சி சார்பில்லாமல் நடுநிலையாகப் பார்த்தால் இதற்குத் தீர்வு என்பது பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்), பெரியார் (அடைமொழி) என்ற பக்கங்களை பெரியார் என்ற பெயரில் மாற்ற வேண்டும். --ச.பிரபாகரன் (பேச்சு) 01:48, 25 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
- Use commonly recognizable names என்ற விதிப்படி அம்மா, கலைஞர், தளபதி ஆகிய பக்கங்களை ஜெ.ஜெயலலிதா, மு. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வழிமாற்றி விடலாமா?. --ச.பிரபாகரன் (பேச்சு) 02:29, 25 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
வழிமாற்றுக்கள்
[தொகு]உரையாடல் முடிவில் பின்வரும் வழிமாற்றுக்கள் பற்றியும் முடிவெடுங்கள். அடிக்கடி இவை மாற்றப்படாமலிருப்பது நல்லது.
--AntonTalk 15:50, 3 மார்ச் 2015 (UTC)
அண்டன் குறிப்பிட்டதில் இந்த இரண்டையும் இணைக்கலாம். பெரியார் (அடைமொழி), பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்). --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:03, 3 மார்ச் 2015 (UTC)
இந்தப் பேச்சுப் பக்கம் தொடர்பான கட்டுரையற்று இருப்பதனால், உள்ளடக்கம் இங்கே நகர்த்தப்படுகின்றது.
இருந்த உள்ளடக்கம்
[தொகு]பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து ஒரு கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும்.
தேவைப்படும் தகவல்:
- பெரியார் இதனை முதன்முதலில் எப்போது பரிந்துரைத்தார்? எப்போது விடுதலை இதழில் அறிமுகப்பபடுத்தினார்?
- அச்சு வில்லைகள் தொடர்பான நடைமுறை பிரச்சினை மட்டும் தான் இச்சீர்திருத்தத்துக்கு காரணமா? இல்லை வேறு காரணங்கள், நோக்குகள் அடிப்படையில் பரிந்துரைத்தாரா?
- இதனைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது குறித்த அரசாணை விவரங்கள்.
- றா, னா, ணா, லை, ளை, னை, ணை எழுத்துகளில் மட்டும் தான் சீர்திருத்தமா? அல்லது, அவர் நிறைய பரிந்துரைத்து இவை மட்டும் ஏற்புக்கு வந்தனவா?
--ரவி 09:08, 24 மே 2009 (UTC)[பதிலளி]
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஈவேரா அவர்களுக்கு விருது வழங்கியதற்குச் சரியான ஆதாரம் எதுவும் கிடையாது. 1998 வரை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் விருது பெற்றவர்கள் பட்டியலை அந்த நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து கொடுத்துள்ளேன். அதில் ஈவேரா அவர்கள் பெயர் இல்லை. ஆகவே இந்தத் தகவல் நீக்கப்பட வேண்டும். https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000111158?fbclid=IwAR3ccSps4KjbY3tmnsHfv17yhUujZn9kJr27PFs0HRjj_QbQ_zBAJp-yHzk
- பாராட்டு சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது அல்ல. எனவே பாராட்டு சான்றிதழ் விவரங்களை எல்லாம் யுனெசுக்கோ வலைத்தளத்தில் சேர்க்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனவே தகவல் சட்டத்தில் தரப்பட்டுள்ள தகவலை மட்டும் நீக்கலாம். கட்டுரையில் உள்ள தகவலை நீக்கத் தேவையில்லை. மேலதிக மேற்கோள்(கள்) கேட்கலாம்.--Kanags (பேச்சு) 22:13, 30 மார்ச் 2019 (UTC)
- இதுதொடர்பான கி. வீரமணி அவர்களின் அறிக்கை https://www.facebook.com/asiriyarkv/posts/2221747997861017
- இப்பக்கம் நீக்கப்பட்டதால் விடுதலை இதழின் பக்கம் http://viduthalai.in/headline/180585-2019-04-30-10-10-28.html இதுதொடர்பான பதிலுரை https://www.facebook.com/photo.php?fbid=10162511142880377 -நீச்சல்காரன் (பேச்சு) 18:53, 2 மே 2019 (UTC)[பதிலளி]
@Neechalkaran: இவருக்கு யுனெசுக்கோ விருது வழங்கியதா?? இல்லையா??. இந்த உள்ளடக்கத்தை நீக்கி 1 மாதத்திற்கு மேல் ஆகுது. ஆனால் இப்போது தான் இதைப் பற்றி பேசப்படுகிறது. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:10, 2 மே 2019 (UTC)[பதிலளி]
- தகவல் நீக்கப்படவில்லை. போதிய சான்று கேட்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 21:38, 2 மே 2019 (UTC)[பதிலளி]
- ஆம் அண்ணா, நாம் கட்டுரையில் உள்ளடக்கத்தை நீக்கவில்லை மாறாக நாம் சான்று கேட்டோம், ஆனால் தகவற்பெட்டியில் உள்ளடக்கம் நீக்கப்பட்டது.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:37, 3 மே 2019 (UTC)[பதிலளி]
- மேலும் ஒரு பதிலுரை https://othisaivu.wordpress.com/2019/05/02/post-979/. "ஐ.நா. மன்றம்" என்ற ஒரு அமைப்பின் பெயரில் விருதின் படம் ஒன்றும் பகிரப்படுகிறது. எது உண்மை என்று தெரியவில்லை. விருதிற்கான மூல ஆதரமும் இல்லை. பல ஊடகங்களில் பேசப்படுவதால், "விருது வழங்கப்பட்டது என்று Phic Zucker Man எழுதிய Atheism and Secularity நூலில் கூறுகிறது" என்று எழுதலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 12:02, 3 மே 2019 (UTC)[பதிலளி]
- Phic Zuckerman எழுதிய நூலில் (2010 இல் இது வெளிவந்தது) பெரியார் பற்றி எழுதிய கட்டுரை அப்படியே நான் கட்டுரையில் தந்துள்ள மேற்கோள் இணைப்புகளின் பிரதி [2], [3]. இவற்றின் மூலம் 2003 இற்கு முன்னர். ஏதோ ஒரு பாராட்டுப் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அது அதிகாரபூர்வமான விருதா என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 13:04, 3 மே 2019 (UTC)[பதிலளி]
கீழ்க்கண்ட யுனெசுகோ விருதுப்பட்டியலில் அவர் பெயர் இல்லை என்பதால் ஆங்கில விக்கிப்பீடியா இந்தத் தகவலை நீக்கியுள்ளது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா இதை நீக்க மறுக்கிறது. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000111158?fbclid=IwAR3ccSps4KjbY3tmnsHfv17yhUujZn9kJr27PFs0HRjj_QbQ_zBAJp-yHzk
பெரியாருக்கு விருது கொடுத்தது யுனெசுகோ மன்றம் என்ற உள்ளூர் அமைப்பு. அது யுனெசுகோ அங்கீகரித்த க்ளப் என்று சொல்லப்பட்டாலும், அது கொடுக்கும் விருதுக்கும், பாராட்டுச் சான்றிதழ்களுக்கும் ஐநாவின் யுனெசுகோ பொறுப்பேற்பதில்லை.
//Policy Approach Clubs for UNESCO have three main functions: training, information and action. They take up a position on global problems with local repercussions and thus contribute to the process of reflection on social priorities. Although UNESCO’s name appears in the titles of the different Clubs and their federations, it does not mean that the Organization is in any way responsible for their activities.// https://en.unesco.org/countries/associations-centres-and-clubs-unesco
Phil Zuckermann எழுதிய நூலில் உள்ள தகவல் திராவிடர் கழகத்தின் 'The Modern Rationalist' என்ற இதழின் ஆங்கிலக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே அது ஒரு ஆதாரம் கிடையாது.
The New Indian Express பத்திரிக்கை இதைப் பற்றிக் கூறுவது:
//The International education year 1970 was celebrated at 'Rajaji Hall' with the release of 'Kalaignar Kavimanimalai' and the international education awards to 47 distinguished men in various fields picture shows Former Tamil Nadu CM Karunanidhi, Periyar giving away the awards to distinguished men in various fields. (File | EPS)// http://www.newindianexpress.com/galleries/nation/2018/mar/07/periyars-45th-death-anniversary-here-are-some-rare-photos-of-the-dravida-kazhagam-founder-101314--5.html
அந்த விருதுக் கேடயத்தில் பார்த்தால் யுனெசுகோ மன்றம் தமிழ்நாடு என்று எழுதியிருக்கிறது. ஆனால் ஐநாவின் யுனெசுகோ வுக்கு இந்தியாவில் தில்லி தவிர எங்கும் கிளைகள் கிடையாது.
மொத்தத்தில் 1970 ஆம் ஆண்டு யுனெசுகோ சர்வதேச கல்வி ஆண்டு என்று அறிவித்தபோது, யுனெசுகோ மன்றம் என்ற உள்ளூர் அமைப்பு வழங்கிய விருதை சர்வதேச விருது என்று தமிழ் விக்கிப்பீடியா கூறுவது தமிழ் விக்கிப்பீடியாவின் நன்மதிப்பைக் குலைப்பதாகும்.
ஆகவே ஒன்று ஆங்கில விக்கிப்பீடியா போல இந்தத் தகவலை நீக்குங்கள் அல்லது அது உள்ளூர் விருது என்பதையாவது தெளிவுபடுத்துங்கள்.--−முன்நிற்கும் கருத்து கருப்பு (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- @கருப்பு: நீங்கள் தந்துள்ள The New Indian Express செய்தியில் "international education awards" என்றுதான் எழுதியிருக்கிறார்கள். எனவே இது உள்ளூர் விருது அல்ல. செய்தியும் தெளிவாக இல்லை.--Kanags \உரையாடுக 23:50, 10 மே 2019 (UTC)[பதிலளி]
கட்டுரையின் நடுநிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் ஈவேரா மீதான விமர்சனங்களையும் இணைக்கலாமே ராஜேந்திரசோழன் (பேச்சு) 12:26, 4 மே 2019 (UTC)[பதிலளி]
தக்க சான்றுகளுடன் தாராளமாக இணையுங்கள்.ஸ்ரீ (talk) 12:34, 4 மே 2019 (UTC)[பதிலளி]
நன்றி. எவ்வாறு இணைப்பது? உதவுங்கள். ராஜேந்திரசோழன் (பேச்சு) 13:51, 4 மே 2019 (UTC)[பதிலளி]
அந்த வலைத்தளத்தின் இணைப்பை சான்றாக கொடுக்கலாம். நன்றி ஸ்ரீ (talk) 14:01, 4 மே 2019 (UTC)[பதிலளி]
இணைத்த தகவலை நீக்கிவிட்டார்களே ராஜேந்திரசோழன் (பேச்சு) 02:39, 11 மே 2019 (UTC)[பதிலளி]
குறிப்புகள்
[தொகு]பெரியார், தன்னை கன்னடர் என்றே குறிப்பிட்டுள்ளதாக இரண்டு மேற்கோள்கள் மூலம் அறிய முடிகிறது. “திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஸ்டமாயிருக்கும் போது-தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஸ்டங்கள் அதிகமாகும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர்,நான் கன்னடியன்,தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் ஜாதிப் பிரிவுகள்.என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டர்கள்.தெலுங்கரும் அப்படியே. எனவே,”திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நா ம்;நம் நாடு திராவிட நாடு” என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்.”
சேலம் செவ்வாய்பேட்டையில் சொற்பொழிவு,16-1-1944—“குடிஅரசு” 29-1-1944 (ஈவெராசி -550)
”நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு 22.08.1926) [1]
வார்ப்புரு:Edit semi-protected ராஜேந்திரசோழன் (பேச்சு) 13:59, 4 மே 2019 (UTC)[பதிலளி]
- நீங்கள் புதிய பயனர் என்பதால் உடனே எழுத இயலாது. சிறிது காலம் இதர கட்டுரைகளை எழுதினால் "தானாக உறுதிசெய்யப்பட்ட பயனர்" ஆவீர்கள் அப்போது நேரடியாகத் திருத்தலாம். அல்லது இந்தப் பேச்சுப் பக்கத்தில் விக்கிநடையில் உரிய மேற்கோளுடன் எழுதுங்கள். சரியெனில் வேறு பயனர்கள் கட்டுரையில் இணைத்து உதவுவார்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 16:27, 4 மே 2019 (UTC)[பதிலளி]
நன்றி ராஜேந்திரசோழன் (பேச்சு) 09:34, 6 மே 2019 (UTC)[பதிலளி]
”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”
”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”
”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?” நூல்:- தமிழும் தமிழரும்
இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965) ராஜேந்திரசோழன் (பேச்சு) 09:37, 6 மே 2019 (UTC)[பதிலளி]
- @ராஜேந்திரசோழன்: உங்கள் தகவல்கள் விக்கி நடையில் இல்லை. அவர் இப்படிச் சொன்னார் என்று அப்படியே படியெடுத்து எழுத வேண்டாம். விமர்சனம் என்ற பகுதியில் அவர் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மட்டும் சொல்லவேண்டும். மேலும் அந்த விமர்சனத்திற்கு இரு மேற்கோளாவது இணைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:33, 13 மே 2019 (UTC)[பதிலளி]