பெலர்கோப்சிசு
பெலர்கோப்சிசு | |
---|---|
தடித்த அலகு மீன்கொத்தி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெலர்கோப்சிசு போடாடெர்ட், 1783
|
இனம்: | உரையினைப் பார்க்க
|
இனஉறவுமுறை | |||||||||||||||
| |||||||||||||||
ஆண்டர்சன் மற்றும் பலர், (2017)ன் படி கிளை வரைபடம்[1] |
- "பெலர்கோப்சிசு" என்பது புதைபடிவச் தரைப்பருந்து பறவைகளின் இனமான பெலர்கோபாப்பசுக்கும் செல்லாத வகையில் வழங்கப்பட்டது.
பெலர்கோப்சிசு (Pelargopsis) என்பது இந்தியா மற்றும் இலங்கை முதல் இந்தோனேசியா வரை வெப்பமண்டல தெற்காசியாவில் வசிக்கும் மர மீன்கொத்திப் பேரினமாகும்.
விளக்கம்
[தொகு]பெலர்கோப்சிசு பேரினம் ஜெர்மன் விலங்கியலாளர் கான்சுடாண்டின் கிளாஜெரால் 1841-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இதன் மாதிரி இனமானது நாரை-அலகு மீன்கொத்தியான பெலர்கோப்சிசு கேபென்சிசு ஜாவானா ஆகும். இது ஒரு துணைச் சிற்றினமாகும்.[3] பேரினப் பெயரான பெலர்கோப்சிசு என்பது பழமையான கிரேக்கச் சொல்லாகும். இதில் பெலர்கோசு என்பது "கொக்கு” என்பதையும் ஒப்சிசு "தோற்றம்" என்ற பொருளையும் குறிக்கின்றது.[4]
சிற்றினங்கள்
[தொகு]இந்தப் பேரினம் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[5]
படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | வாழிடம் |
---|---|---|---|
பெலர்கோப்சிசு கேபென்சிசு | தடித்த அலகு மீன்கொத்தி | தென்கிழக்கு ஆசியா | |
பெலர்கோப்சிசு மெலனோரிஞ்சா | பெரிய அலகு மீன்கொத்தி, கருப்பு அலகு மீன்கொத்தி, செலிப்சு அலகு மீன்கொத்தி | இந்தோனேசியாவின் சுலவேசி பகுதி | |
பெலர்கோப்சிசு அமரோப்டெரசு | பழுப்பு சிறகு மீன்கொத்தி | வங்காளதேசம், இந்தியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து |
விளக்கம்
[தொகு]இந்த மூன்று மீன்கொத்தி சிற்றினங்களும் முன்பு கால்க்யோன் பேரினத்தில் வைக்கப்பட்டன.
இவை பெரிய மீன்கொத்திகளாகும். இவற்றின் நீளம் 35 செ. மீ. (14 இல்) வரை இருக்கும்.[6] இவை மிகப் பெரிய சிவப்பு அல்லது கறுப்பு அலகுகளையும் பிரகாசமான சிவப்பு கால்களையும் கொண்டுள்ளன. இந்த இனங்களின் தலை மற்றும் அடிப்பகுதி வெண்மையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ இருக்கும். இறக்கைகள் மற்றும் பின்புறம் கருமையாக இருக்கும். பல்வேறு நிறங்களில் பச்சை மற்றும் நீலம், பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் சிற்றினங்களைப் பொறுத்துக் காணப்படும். பாலின வேறுபாடுகள் காணப்படுவதில்லை.
வாழிடம்
[தொகு]பெலர்கோப்சிசு மீன்கொத்திகள், ஏரிகள், ஆறுகள், முகத்துவாரங்கள் அல்லது கடற்கரைகளுக்கு அருகில் மரங்கள் நிறைந்த பல்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்றன. இவை இரை தேடும் போது அமைதியாக அமர்ந்திருக்கும், மேலும் இவற்றின் அளவு அதிகமாக இருந்தபோதிலும் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதவை. இவை பிராந்திய மற்றும் கழுகு போன்ற பெரிய வேட்டையாடும் விலங்குகளை விரட்டும் தன்மையுடையன. இந்த இனங்கள் நண்டு, மீன்கள், தவளை மற்றும் கொறித்துண்ணிகள் மற்றும் இளம் பறவைகளை வேட்டையாடுகின்றன.
பெலர்கோப்சிசு மீன்கொத்திகள் ஆற்றங்கரையில், பட்ட மரத்தில் அல்லது மரக் கரையான் கூட்டில் தங்கள் கூடு தோண்டி வட்டமான வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Andersen, M.J.; McCullough, J.M.; Mauck III, W.M.; Smith, B.T.; Moyle, R.G. (2017). "A phylogeny of kingfishers reveals an Indomalayan origin and elevated rates of diversification on oceanic islands". Journal of Biogeography: 1–13. doi:10.1111/jbi.13139.
- ↑ Gloger, Constantin Wilhelm Lambert. Gemeinnütziges Hand- und Hilfsbuch der Naturgeschichte (in ஜெர்மன்). Breslau: A. Schulz. p. 338.
- ↑ Check-list of Birds of the World. Cambridge, Massachusetts: Harvard University Press. p. 186.
- ↑ Jobling, James A. The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 295.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
- ↑ Fry, Fry & Harris 1992.
ஆதாரங்கள்
[தொகு]- Fry, C. Hilary; Fry, Kathie; Harris, Alan (1992). Kingfishers, Bee-eaters, and Rollers. London: Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-8028-7.
- Fry, C. Hilary; Fry, Kathie; Harris, Alan (1992). Kingfishers, Bee-eaters, and Rollers. London: Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-8028-7.