உள்ளடக்கத்துக்குச் செல்

நண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்டு
Crab
புதைப்படிவ காலம்:Early Jurassic–Present
சாம்பல் நீச்சல் வண்டு
Liocarcinus vernalis
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
Subphylum:
குருசுடாசியா
வகுப்பு:
மலகோசுட்ராக்கா
வரிசை:
பத்துக்காலிகள்
Suborder:
பிளேயோசைமாட்டா
(வகைப்படுத்தா):
இரெப்டான்சியா
Infraorder:
பிரைக்கியூரா

பிரிவுகளும் துணைப்பிரிவுகளும்[1]
  • Dromiacea
  • Raninoida
  • Cyclodorippoida
  • Eubrachyura
    • Heterotremata
    • Thoracotremata

நண்டு (crab) நீர்நிலையில் வாழும் ஓர் உயிரினமாகும். நன்னீர், உவர்நீர் இரண்டிலும் வாழும் தன்மை உடையது. வாழும் நிலைக்கேற்ப பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.[2] இதில் சில இனங்கள் உணவாகவும் உட்கொள்ளப்படுகின்றன.

மில்லிமீட்டர் (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு மீட்டர் (m) வரை வளரும் யப்பானியச் (Japanese) சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகின்றன.[3] நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.[4][5]

நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டைக் கொண்டவை.

பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.

நண்டு மிகவும் பிரபலமான கடல் உணவு ஆகும். கடலுணவுகளில் 20% நண்டுகளே. ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் தொன்னுக்கும் (Ton) அதிகமான நண்டுகள் உணவாகின்றன.

நண்டு வகைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. 
  2. Richard von Sternberg; Neil Cumberlidge (2001). "On the heterotreme-thoracotreme distinction in the Eubrachyura De Saint Laurent, 1980 (Decapoda: Brachyura)". Crustaceana 74 (4): 321–338. doi:10.1163/156854001300104417. http://decapoda.nhm.org/pdfs/11802/11802.pdf. 
  3. "Japanese spider crab Macrocheira kaempferi". Oceana North America. Archived from the original on 2009-11-14. பார்க்கப்பட்ட நாள் 2009-01-02.
  4. F. Boßelmann; P. Romano; H. Fabritius; D. Raabe; M. Epple (October 25, 2007). "The composition of the exoskeleton of two crustacea: The American lobster Homarus americanus and the edible crab Cancer pagurus". Thermochimica Acta 463 (1–2): 65–68. doi:10.1016/j.tca.2007.07.018. 
  5. P. Chen; A.Y. Lin; J. McKittrick; M.A. Meyers (May 2008). "Structure and mechanical properties of crab exoskeletons". Acta Biomaterialia 4 (3): 587–596. doi:10.1016/j.actbio.2007.12.010. பப்மெட்:18299257. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்டு&oldid=4144844" இலிருந்து மீள்விக்கப்பட்டது