பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டம் | |
---|---|
அடைபெயர்(கள்): பெரும்புலியூர் | |
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°14′.6″N 78°52′59.92″E / 11.233500°N 78.8833111°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைமையகம் | பெரம்பலூர் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | கிரேசு லால்ரிண்டிகி பச்சுவா, இஆப |
• காவல் துறை கண்காணிப்பாளர் | ஆதர்சு பச்சேரா, இந்தியக் காவல் பணி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,752 km2 (676 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 5,65,223 |
• அடர்த்தி | 320/km2 (840/sq mi) |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 621212 |
தொலைபேசி குறியீடு | 04328 |
வாகனப் பதிவு | தநா-46[2] |
பாலின விகிதம் | 0.993 ஆண் (பால்)/பெண் (பால்) |
கல்வியறிவு | 74.32%% |
இந்தியாவின் தட்பவெப்ப நிலை | இந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு) |
பொழிவு (வானிலையியல்) | 908 மில்லிமீட்டர்கள் (35.7 அங்) |
இணையதளம் | perambalur |
பெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் 322 சதுர கி.மீ. பரப்பளவுடையது. பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம், நவம்பர் 23, 2007-இல் நிறுவப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம், தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், மேற்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது. பெரம்பலூர் மாவட்டம் சென்னைக்கு தெற்கே 267 கி.மீ தொலைவில் தமிழ் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 10.54’ மற்றும் 11.30’ டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 78.54’ மற்றும் 79.30’ டிகிரி கிழக்கு அட்சரேகைக்கு இடையே 1757 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடலோரப் பகுதி இல்லாத நிலப்பகுதி மட்டுமே உள்ள மாவட்டம் ஆகும்.
தோற்றம்
[தொகு]பெரம்பலூர் நகரம் மற்றும் இந்த நகரத்தின வட பகுதிகள் சுதந்திரத்திற்கு முன் தென் ஆற்காடு மாவட்டத்தோடு இருந்தது, பின்னர் திருச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது.
ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி
மாவட்டம் தமிழ் நாட்டு அரசாணை எண் Ms. No. 913 வருவாய் (Y3) துறை நாள் 30.09.1995-இன்படி மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து மேற்கண்ட அரசாணைப்படி புதிய பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரைத் தலைநகரமாக கொண்டு உருவானது. அரசாணை எண் Ms. No. 656, வருவாய்த்துறை, நாள் 29.12.2000 மற்றும் அரசாணை எண் Ms. No. 657, அரசாணை நாள் 29.12.2000-இன்படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்ட அரியலூர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
பின்னர் அரசாணை எண் Ms. No. 167 வருவாய்த்துறை நாள் 19.04.2002 மற்றும் அரசாணை எண் Ms. No. 168 வருவாய்த்துறை நாள் 19.04.2002-இன்படி மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களையும் ஒன்றிணைத்து பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையின் படி ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் 19.04.2002 அன்று உருவானது. பின்னர், தமிழ் நாடு அரசாணை எண் Ms. No. 683 வருவாய்த்துறை நாள் 19.11.2007-இன்படி பெரம்பலூர் மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டமும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்டு அரியலூர் மாவட்டமும் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.[3]
மக்கட் தொகை
[தொகு]1,756 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 5,65,223 ஆகும். அதில் ஆண்கள் 282,157 மற்றும் பெண்கள் 283,066 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 10.54% ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.32% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 82.87% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 65.90% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் 33.27% ஆக உள்ளனர்.[4] மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 5,21,658 (92.29%) ஆகவும்; இசுலாமியர்கள் 32,702 (5.79 %) ஆகவும்; கிறித்தவர்கள் 10,301 (1.82 %) ஆகவும்; மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி, சற்றேறக்குறைய ஒரு சதுர கிலோ மீட்டருக்கு, 321 ஆகும்.
உலோக மற்றும் கனிம வளம்
[தொகு]இம்மாவட்ட மிகவும் கனிம செழிப்பானது. செலஸ்டி, சுண்ணாம்பு கல், கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. குன்னம் மற்றும் வேப்பந்தட்டை போன்ற பகுதிகளில் செங்கற்கள் அதிகம் தயாரிக்கப்படுகிறது.
முதன்மை தொழிலகம்
[தொகு]- ஜவஹர்லால் நேரு பெரம்பலூர் சர்க்கரை ஆலை - எறையூர்
- பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா - எறையூர்
- மெட்ராசு இரப்பர் பேக்டரி, நாரணமங்கலம்.
- தனலெட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை - உடும்பியம்.
விவசாயம்
[தொகு]உழவுத் தொழிலே பெரம்பலுார் மாவட்டத்தின் முக்கிய தொழிலாகும். பெரம்பலுார் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1,75,739 ஹெக்டா். இதில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 93,581 எக்டேர் ஆகும். இந்த மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861 மி.மீட்டா். இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள் பருத்தி கரும்பு மற்றும் மக்காச்சோளம் ஆகும். தமிழகத்திலேயே பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலுார் மாவட்டம் திகழ்கிறது. மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பரப்பில் 80 சதவீத அளவிற்கு மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. மானாவாரி மாவட்டமாக இருந்தாலும் உணவு தானிய உற்பத்தியில் பெரம்பலுார் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டிற்கு 4.0 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்ரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் உற்பத்தி செய்கிறது.[5] கிருஷி கர்மன் விருது: பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அகரம் கிராமத்தைச் சோ்ந்த திருமதி. பூங்கோதை என்பவா் 2013-14-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே மக்காசோளத்தில் அதிக அளவு மகசூல் எடுத்ததற்காக, பாரத பிரதம மந்திரி மாண்புமிகு நரேந்திர மோடி அவா்களிடமிருந்து கிருஷி கா்மான் விருது பெற்றார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், விதை கிராம திட்டம், தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்பனை இயக்கம், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், கூட்டு பண்ணைய திட்டம், நிரந்தர பயண திட்டம், நுண்ணீா் பாசன திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் என்பன, இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும்.[6]
கால்நடை
[தொகு]கோழிப்பண்ணை அபிவிருத்தி திட்டம், ஊரகப் புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டம், கால்நடை காப்பீடு திட்டம், விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இதில் ஊரகப் புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றதாகக் கருத்து நிலவுகிறது. இத்திட்டத்தின் படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற வகுப்பை சார்ந்த பெண்கள் பயனாளியாக இடம்பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இத்திட்டம் பெண்களுக்கு மட்டுமே வழங்கபடுகிறது. மேலும் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுதிரனாளிகள், முதிர்கன்னிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கபடுகிறது. ஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுள்ள, 20 தடுப்பூசி இட்ட, நாட்டுரக கோழிக்குஞ்சுகள் தீவனதட்டுகள் மற்றும் இரவு தங்கும் கூண்டும் 100 சதவிகித மானியத்துடன் வழங்கப்படும். இதனைப் பெற தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண், புகைப்படம் தேவையானவையாக உள்ளன.[7]
அரசியல்
[தொகு]இம்மாவட்டப் பகுதிகள் பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)(தனி) மற்றும் குன்னம் (சட்டமன்றத் தொகுதி) என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியும் உள்ளன.[8]
மாவட்ட வருவாய் நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 1 வருவாய் கோட்டம், 4 வருவாய் வட்டங்கள், 11 உள் வட்டங்கள் மற்றும் 152 வருவாய் கிராமங்கள் கொண்டது.[9]
வருவாய் வட்டங்கள்
[தொகு]- வடக்கலூர்
- கீழபுலியூர்
- வரகூர்
- பெரம்பலூர
- குரும்பலூர்
- வெங்கலம்
- பசும்பலூர்
- வாலிகண்டபுரம்
- செட்டிகுளம்
- கொளக்காநத்தம்
- கூத்தூர்
உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 4 பேரூராட்சிகளும்,[10] 4 ஊராட்சி ஒன்றியகளும், 121 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.[11]
நகராட்சிகள்
[தொகு]பேரூராட்சிகள்
[தொகு]ஊராட்சி ஒன்றியங்கள்
[தொகு]மாவட்ட காவல்
[தொகு]பெரம்பலூர் மாவட்ட காவல் என்பது தமிழ்நாடு காவல் துறையின் பெரம்பலூர் மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது பெரம்பலூர் மாவட்டம் முழுமையிலும் தன் செயல் எல்லையைக் கொண்டுள்ளது. பின்வரும் காவல்நிலையங்களைக் கொண்டு செயல்பட்டுவருகின்றது.
- குன்னம்
- அரும்பாவூர்
- கை.களத்தூர்
- பெரம்பலூர்
- மங்கல மேடு
- பாடாலூர்
- மருவத்தூர்
- வி. களத்தூர்
இலங்கை அகதிகள் முகாம்
[தொகு]இலங்கை அகதிகள் முகாம் துறைமங்களத்தில் உள்ளது. இம்முகாமில் 70 குடும்பமும் மொத்தம் 280 பேரும் இங்கு தங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரிலும், தாலூக்கா மருத்துவமனைகள் வேப்பந்தட்டை ஒன்று, மற்றொன்று கிருஷ்ணபுரத்திலும் உள்ளது.
கல்வி நிலையங்கள்
[தொகு]பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 புள்ளிவிபர கணக்கீட்டின்படி கலை அறிவியல் கல்லூரிகள் 5, பொறியியல் கல்லூரிகள் 8, மருத்துவ கல்லூரிகள் 1, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 20, செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் 7, வேளாண்மைக் கல்லூரிகள் 1,கல்வியியல் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் 3 மற்றும் தொடக்க பள்ளிகள் 209, நடுநிலைப்பள்ளிகள் 57, உயர் நிலைப்பள்ளிகள் 49, மேல்நிலைப்பள்ளிகள் 40 CBSE மற்றும் சிறப்பு பள்ளிகள் உட்பட இருக்கின்றன.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள்
[தொகு]- சாத்தனூர் கல்மரம்
- இரஞ்சன்குடிகோட்டை
- விசுவக்குடி நீர்த்தேக்கம்
- கொட்டரை தடுப்பணை
- வாலிகண்டபுரம் வாலீசுவரர் கோயில்
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில்
- செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக ஆற்காடு நவாப் வழி வந்த ஜாகிர்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(தோஸ்த் அலி கான் உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும் (சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம் ஆகும்.
- துறைமங்கலம் பெரிய ஏரி
- பெரம்பலூர் பெரிய ஏரி
- துறைமங்கலம் சித்தேரி
- வெண்பாவூர் ஏரி
- வடக்கலூர் ஏரி
- கீரவாடி ஏரி
- லாடபுரம் பெரிய ஏரி
- காருகுடி பெரிய ஏரி
- குரும்பலூர் ஏரி
- லாடபுரம் பெரிய ஏரி
- ஆய்க்குடி பெரிய ஏரி
- எசனை பெரிய ஏரி
- அரும்பாவூர் பெரிய ஏரி, சிறிய ஏரி
- பூலாம்பாடி 3 ஏரிகள்
- பெரியம்மா பாளையம் ஏரி
- வெங்கனூர் ஏரி
- இலப்பைகுடிக்காடு ஏரி
மாவட்டத்திலுள்ள ஆறுகள்
[தொகு]- மருதையாறு
- கல்லாறு
- சுவேதா ஆறு
- கோனேரி ஆறு
- வெள்ளாறு (வடக்கு)
- சின்னாறு - பெரம்பலூர் மாவட்டம்
- ஆனைவாரி ஓடை
மாவட்டத்திலுள்ள அருவிகள்
[தொகு]- மயிலூற்று அருவி
- ஆனைக்கட்டி அருவி
- கோரையாறு அருவி
- வெண்புறா அருவி
- எட்டெருமை அருவி
- மங்களம் அருவி
- அத்தி அருவி
மாவட்டத்திலுள்ள அணைகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "2011 Census of India" (Excel). Indian government. 16 April 2011.
- ↑ www.tn.gov.in
- ↑ https://perambalur.nic.in/about-district/
- ↑ Perambalur District : Census 2011
- ↑ https://www.minnambalam.com/k/2016/09/10/1473445861
- ↑ https://perambalur.nic.in/agriculture/
- ↑ https://perambalur.nic.in/animal-husbandry/
- ↑ ELECTED REPRESENTATIVES
- ↑ Perambalur Revenue District Administration
- ↑ Local Body (Urban)
- ↑ Local Body (Rural)